Tuesday, 27 August 2019

25-8-2019 ஞாயிறு  மதுரையில் நமது  அகில இந்திய சங்க அமைப்பு தினம்- 10ஆம் ஆண்டு நிறைவு விழா மாவட்டத்தலைவர் திரு. சத்தியசீலன் அவர்கள் தலைமையில் மதுரை BSNL  முதன்மைப்பொதுமேலாளர் அலுவலக மனமகிழ் மன்றத்தில் நடைபெற்றது.
                50க்கும் மேற்பட்ட தோழியர் உள்ளிட்ட 400 ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். காரைக்குடி யிலிருந்து 20 தோழர்களும், விருதுநகரிலிருந்து
11 தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
    நமது சங்க உறுப்பினர் தோழர் கங்காதரன் அவர்களின் இறைவணக்கத்துடன் விழா தொடங்கியது. மாவட்டச்செயலரின் வரவேற்புரை, மற்றும் மாவட்டத்தலைவரின் முன்னுரைக்குப்பின், சிறப்பு அழைப்பாளர்கள் தோழர். D G., ராமராவ் , ஆகியோர் , 7வது  ஊதியக்குழு பரிந்துரைப்படி , நமது ஓய்வூதிய மாற்றம் பெற நமது சங்கத்தின் முயற்சி பற்றியும், நாம் DOT யம் ஏற்கும் விதத்தில் தயாரித்து அளித்துள்ள புதிய கருத்துரை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தனர். பின்னர் சிறப்பு அழைப்பாளர் நெல்லை அருணாச்சலம் அவர்கள் சங்கத்தின் அமைப்பு நிலை குறித்து சிறப்புரையாற்றினார்.
        தோழர் சூரியன் அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் இனிது நிறைவுற்றது.
         பின்னர் வந்திருந்த அனைவருக்கும் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது.                ருமபுரியில் சங்க அமைப்பு தின சிறப்ப கூட்டம்   
24-08-2019  சனிக்கிழமை காலை 10-30மணியளவில் அமைப்பு தின சிறப்பு கூட்டம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.தோழர் G.தங்கபாண்டியன் சங்க அமைப்பு, சாதனைகள் குறித்து முழக்கம் எழுப்ப, வின்னதிரும் முழக்கங்களோடு தோழர் V.ராமமூர்த்திராவ் சங்க கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டத்தலைவர் தோழர் முனியன் தலைமையில் கவுரவத்தலைவர் தோழர் வி சுந்தரம்,தருமபுரி கிளைச்செயலாளர் தோழர் அசோகன், ஒசூர் கிளைச்செயலாளர் தோழர் சத்தியேந்திரன், கிருஷ்ணகிரி கிளைச்செயலாளர்(பொறுப்பு) தோழர் C.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகிக்க கூட்டம் தொடங்கியது. தோழர் சுந்தரமூர்த்தி அஞ்சலி உரையாற்றினார். மாவட்டச்செயலாளர் தோழர் சுப்ரமணியம் அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார். முன்னிலை வகித்த தோழர்கள் மற்றும் தோழர்கள் கோவிந்தன், தங்கபாண்டியன், வடிவேலு,  மாணிக்கம் ஆகியோரது சிற்றூரைக்குப் பின்னர் மாநில துணைச்செயலாளர் தோழர் பட்டாபிராமன் தனது சிறப்புரையில் சங்கம் உருவான சூழ்நிலை குறித்தும் தற்போது வளர்ந்து சாதனை படைத்து வருவது குறித்தும் விளக்கினர்.

நமது  மாநிலச் செயலாளர் தோழர் R.V   தனது சிறப்புரையில் 23-08-2019 அன்று நடந்த அதாலத் குறித்தும் , 78.2 IDA இணைப்பு குறித்தும், கூடுதல் இன்கிரிமென்ட் வழக்கு குறித்தும், ஓய்வூதிய மாற்றத்துக்காக நமது அகில இந்திய தலைவர்கள் மேற்கொண்டு வரும் இடையற முயற்சிகள் குறித்தும், ஓய்வூதிய மாற்றத்துக்கான மாற்று திட்டம்  குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர். மாவட்டப்பொருளாளர்  தோழர் வணங்காமுடி நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது. 70 - க்கு மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். மதிய உணவு வழங்கப்பட்டது.Sunday, 25 August 2019

OBITUARY
It is shocked to hear the sudden demise of Our Comrade Sri. R.RAVI (Retd CAO Finance of TN CIRCLE OFFICE) Today evening due to massive heart attack. He is a very soft person and helped every one  during his service. He was Circle Treasurer of AIBSNLEA. Very active unionist and retired on 30.4.2018. We, Comrades of AIBSNLPWA tAMILNADU CIRCLE share the grief with his family  and express our deepest Condolence to the bereaved members of the family. May the departed Soul rest in peace.
Next to Arul Murugan towers Kalyana Mandapam, thorapakkam chrompet radial road.  The cremation timing will be fixed after his daughter's arrival from USA.
Phone Nos. 9486103278   
  22471493

Friday, 23 August 2019

Wednesday, 21 August 2019


On completion of 10 years,  11th FORMATION DAY  of our AIBSNLPWA was celebrated by SALEM WEST BRANCH  @ Shevapet Exge between 10am & 1pm. As a special gesture, Free Eye Check-up Medical Camp was organised with DR. AGARWAL EYE CARE HOSPITAL, SALEM. Sri M.P.Velusamy Retd CGM inaugurated EYE CAMP.  More than 130 members attended the meeting . Meeting was  presided over by Sri R.subramaniam. Sri K.Ramani ACS  informed elaborately the members about the formation  & achievements of our Association . Sri T.S.Raghupathy DS elaborated the latest development of our activities of our association at SSA level. 5 new life members joined. B'day & w'day gifts were given to 27 members amidst thundering applause. 75 members undergone eye medical check-up. Formation day was celebrated with distribution of Sweet, biscuit & coffee. Meeting  concluded @ 13 hrs with vote of thanks by Sri R.Balaraman, Asst secy.AIBSNLPWA அனைத்து இந்திய சங்க அறைகூவலுக்கு இணங்க சங்க அமைப்பு தினக் கூட்டம் இன்று குடந்தை மாவட்டச் சங்கத்தின் சார்பில் குடந்தை சங்க அலுவலகத்தில் தோழர் N.இசக்கிமுத்து அவர்கள் தலமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தோழர்கள் R.ஜெயராமன், மா.அ.செயலாளர், மயிலை தோழர்கள் R.சண்முகவேல், R.,செந்திலாதிபன், ஆகியோர் சங்க அமைந்த வரலாறு, இன்றைய நிலை பற்றி உரையாற்றினார்கள். மாநில அமைப்புச்செயலாளர் தோழர் N. தனபாலன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து சிறப்புரை ஆற்றினார்கள். விழாவின் மகுடமாக அகில இந்திய சங்க அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து அகில இந்திய  சங்கத்தை அமைப்பதில் குடந்தை மாவட்டத்தின் சார்பாக பங்கெடுத்த பெருமை மிகு தோழர். N.அனந்தன்,சங்க ஆலோசகர் அவர்கள் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டது பல தோழர்களுக்கு உத்வேகமாக இருந்தது. கூட்டத்திற்கு 47 தோழர்கள் மாவட்டத்தின் பல பகுதிகளிருந்தும் வந்து கலந்து கொண்டனர். தோழர். மதியழகன் அவர்கள் நன்றி கூற சங்க அமைப்பு தினக் கூட்டம் மிகச் சிறப்பாக நடந்தேறியது.
குடந்தை மாவட்டம் மயிலாடுதுறையில் பணியாற்றி 10.12.2016-ல் மறைந்த தோழர். P.செல்வகுமார் அவர்களின் துணைவியார் திருமதி. S.உஷா அவர்களுக்கு இலாக்காவில் கிடைக்கவேண்டிய பணப்பலன்கள் பல் வேறு காரணங்களால் கிடைக்காமல் இருந்தது. இரண்டரை வருடங்களாக தீர்க்கப்படாமல்  இருந்த பிரச்சனை. அதற்கான முயற்சியில் நமது மாவட்டச் சங்கம் இறங்கி தேவையான தகவல்களைப் பெற்று மாநில சங்கத்திற்கு அனுப்பியது. மாநில சங்கம் எடுத்த பல் வேறு முயற்சியின் காரணமாக அதாலத்திற்கு விஷயம் எடுத்துச் செல்லப்பட்டு கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்ற அதாலத்தில் தீர்க்கப்பட்டு தற்போது DCRG கிடைக்கப்பெற்றுள்ளது. பென்சனும் விரைவில் கிடைக்கும். இதற்கான முயற்சியில் ஈடுபட்ட மயிலாடுதுறை தோழர்கள். R. சண்முகவேல், R.செந்திலாதிபன், மாவட்ட ஆலோசகர் தோழர். N.அனந்தன் மற்றும் அனைத்து மாவட்ட தோழர்களுக்கும், குறிப்பாக நமது மாநில செயலாளர் தோழர். R.வெங்கடாசலம் அவர்களின் சீறிய பணிக்கும் குடந்தை மாவட்டச் சங்கம் தனது நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

சங்கத்தின் வளர்ச்சிக்கு தோழிய்ர். S.உஷா அவர்கள் நன்கொடையாக ரூபாய் 5000/- வழங்கி உள்ளார். அவர்களுக்கு குடந்தை மாவட்டச் சங்கம் தனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.