Thursday, 28 November 2019

கடலூரில் இரங்கல் கூட்டம் 
இன்று 28.11.19 காலை AIBSNLPWA கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பாக மறைந்த தோழர்.அமரர். S.அருணாச்சலம் Assistant General secretary and District Secretary Tirunelveli அவர்களுக்கு இரங்கல் அஞ்சலி கூட்டம் கடலூர் நலசங்க அலுவலகத்தில் அவர் திருவுருவ படத்தை திறந்து வைத்து நடைபெற்றது
தோழர்கள். P.ஜெயராமன் ,R.அசோகன், சாந்தகுமார் , K.ரவீந்திரன்தமிழ்மணிஅன்பழகன்இளங்கோவன், N.திருஞானம் ஆகியோர் இரங்கல் உரையாற்றினார்கள்.
இன்று விழுப்புரம்  பகுதியிலும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

Wednesday, 27 November 2019

கண்ணீர் அஞ்சலி .
கும்பகோணத்தில் நடந்த பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு வரும் வழியில் திருச்சியில் அன்பு மகள் வீட்டில் திடீர் சுகவீனம் காரணமாக நேற்று அதாவது 26 11 2019 அன்று  இயற்கை எய்திய நமது அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நல சங்கத்தின் அகில இந்திய துணை செயலாளரும் நெல்லை மாவட்ட சங்கத்தின்  மாவட்ட செயலாளருமான திரு அருணாச்சலம் அவர்களுக்கு அகில இந்திய சங்கம், மாநிலச் சங்கம், மாவட்ட சங்கம் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் அனைத்து ஓய்வூதியர்கள் சார்பில் நடந்த நினைவு அஞ்சலி...

 
சரியாக மதியம் ஒரு மணிக்கு மாநிலத் தலைவர் ரமாராவ்அவர்கள் தலைமையில் நடந்த நினைவஞ்சலியில் அகில இந்திய சங்கத்தின் சார்பிலே தோழர் முத்தியாலு, மாநிலச் சங்கத்தின் சார்பிலே தோழர் ஆர்வி , அகில இந்திய சங்கத்தின்  தலைவர் செயலாளர் சார்பாக தோழர் DG,   தூத்துக்குடி தோழர் அம்பிகாபதி,  மதுரை தோழர் ஜிஆர்டி ,நெல்லை மாவட்ட ஓய்வூதியர கூட்டமைப்பின்  செயலர் சண்முகசுந்தரராஜ்,
அஞ்சல் 3 வது பிரிவு செயலர் , நெல்லை மாவட்ட சங்கத்தின்  தலைவர் சம்மனசு
ஆகியோர் தங்கள் நினைவுகளை(தோழர் அருணாசலம் அவர்களின் தொழிற்சங்கப்பணி ) கண்ணீரோடு பகிர்ந்து கொண்டது அங்கிருந்த அனைவரையும் நெஞ்சை நெகிழ வைத்தது.
இரங்கல் கூடடத்தில்  பேசிய அனைத்து தலைவர்களும் தொலைபேசித் துறையில் இயக்குனராக பணி தொடங்கி காலத்தில் இருந்து  சங்கத்தின் உறுப்பினராய் கிளைச் செயலாளராய் மாவட்ட செயலாளராய் மாநிலச் சங்க நிர்வாகியாய்அகில இந்திய நிர்வாகியாய் அவரது  தொழிற்சங்க வரலாற்றில் தொடக்கத்தில் இருந்து நேற்றுவரை அவரற்றிய  பணி மகத்தானது .ஈடு இணை இல்லாதது என புகழ்ந்தார்கள்
👌அவருடைய நேர்மை,
👌அவருடைய எளிமை,
👌 அவருடைய பணிவு,
👌எது நடந்தாலும் அமைதிகாக்கும் மனச் சமநிலை,
👌எல்லோருக்கும் ஓடி ஓடி உதவிடும் மாண்பு,
👌பிஎஸ்என்எல் பணியாளர் மட்டுமன்றி பிறதுறை களின் தொழிற்சங்கம் சார்ந்த அனைத்து அரசு விதிகளையும் நன்கு அறிந்து பிறருக்கு புரியும் வகையில் எளிதாக விளக்குகின்ற ஒரு பேராற்றல் கொண்டவர் என்றும் சிறப்பித்தார்கள்.

 
பிஎஸ்என்எல் பணியாளர்கள், ஓய்வூதியர்கள் இல்லங்களில் நடக்கின்ற அனைத்து விழாக்களிலும்  தவறாமல் கலந்து சிறப்பிப்பது இவர் வழக்கம்.
 
மாதம் தன்னுடைய சொந்த ஓய்வூதியத்தில் உத்தேசமாக 5 ஆயிரம் வரை செலவழித்து தினமும் அலுவலகத்திற்கு வருவதுபோல் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள நம்முடைய AIBSNLPWA  மாவட்ட சங்க
நெல்லை வண்ணார்பேட்டை  அலுவலகத்திற்கு வந்து காலையிலிருந்து மாலை வரை அனைத்து பணிகளையும் அவரே தம் கைப்பட செய்ததை எல்லோரும் நினைவு கூர்ந்தார்கள்.

 
அதுவும் குறிப்பாக பொதிகை தென்றல் இதழினை வடிவமைப்பதில் வெளிக்கொண்டு வருவதில் அவருடைய முத்தாய்ப்பான செயல்களை எல்லோரும் பாராட்டினார்கள். இவரின் கடும் முயற்சியில் இரண்டு தினங்களுக்கு முன்னால் தோழர் DG அவர்களின் அணிந்துரையுடன் நமது AIBSNLPWA மாநில சங்கம் சார்பில்  வெளிவந்து பலரின் பாரட்டினை பெற்ற மத்திய அரசு மருத்துவ  உதவி திடடம் பற்றிய கை ஏடு பற்றி சிறப்பாக எடுத்துரைத்தார்கள்.வழக்கம் போல் சில நண்பர்கள் இந்த CGHS கையேட்டினை தங்கள் வெளியீடு போல் மறுபதிப்பு செயதுள்ளாதாக செய்திகள் உலாவில்.
இப்படி மறு பதிப்பு செய்யும் போது இதனை ஆக்கியோனுக்கு நன்றி சொல்லி வெளியிடுவது நலம் மெய் வருத்தம் பாராமல்
பசி நோக்காமல்
கண் துஞ்சாமல்
இமைப்பொழுதும் சோராது
பொது நலப் பணி ஆற்றி
நேற்று பிரபஞ்ச அம்சமாம் பஞ்ச பூத சக்திகளுடன் கலந்த
தோழர் அருணாச்சலம் அவர்களுக்கு
 
நாம் காட்டுகின்ற நன்றி அவர் விட்டுச் சென்ற பணியை தொய்வில்லாமல் மிக நேர்த்தியாக செய்வதாக எல்லோரும் சபதம் எடுத்துக் கொண்டார்கள் .
 
அனைவரின் இரண்டு நிமிட மவுன அஞ்சலி யோடு நினைவஞ்சலி கூட்டம் முடிவுக்கு வந்தது

 
இந்த நினைவஞ்சலி கூட்டத்தில் தொலைத்தொடரபுத்துறை அஞ்சல் துறை மற்றும் பிற துறைகளைச் சார்ந்த ஓய்வூதியர்கள் பலரும் பங்கெடுத்து தங்கள் இதய அஞ்சலியை செலுத்தினார்கள்

Courtesy: TVL Web