Sunday 29 December 2019


தருமபுரி மாவட்டச் சங்கத்தின் சார்பில் "ஓய்வூதியர் தின சிறப்புக் கூட்டம் " 28-12-2019 சனிக்கிழமை காலை சுமார் 11-00மணியளவில் மாவட்ட தலைவர் தோழர் முனியன் தலைமையில், மாவட்ட கவுரவத்தலைவர் தோழர் வி சுந்தரம், ஒசூர் கிளைச்செயலாளர் தோழர் சத்தியேந்திரன்,தருமபுரி கிளை துணைத்தலைவர் தோழர் குப்புசாமி,கிருஷ்ணகிரி துணைச்செயலாளர் தோழர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகிக்க சிறப்பான முறையில் நடைபெற்றது. மாவட்டச்செயலாளர் தோழர் சுப்ரமணியம் அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார். தோழர் சத்தியேந்திரன் அஞ்சலி உரையாற்றினார். மாநில துணைத்தலைவர் தோழர் வேடியப்பன் அவர்கள் சிறப்பு கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். முன்னிலை வகித்த தோழர்களின் வாழ்த்துரைக்குப்பின் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் தோழர் R.துரை வாழ்த்துரை வழங்கினார்.தோழியர்கள் சார்பில் தோழியர்.ஞானவடிவாம்பாள் அவர்கள் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார்.நிர்வாகத்தின்  சார்பில் திரு.வித்யாசாகர் (துணைப்பொதுமேலாளர் -நிர்வாகம்) அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.அகவை 70 நிறைவு பெற்ற தோழர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
நமது மாநிலச் செயலாளர் தோழர் R.V அவர்கள் தனது சிறப்புரையில் ஓய்வூதிய மாற்றத்துக்காக நமது அகில இந்திய சங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், VRS குறித்தும், CGHS குறித்தும் விரிவாக விளக்கி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்.
 மாவட்ட பொருளாளர் தோழர் வணங்காமுடி நன்றி கூற கூட்டம் சுமார் 3 மணியளவில்  நிறைவுற்றது. 6பெண்கள் உட்பட 80 பேர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் வடை பாயசத்துடன் மதிய உணவு வழங்கப்பட்டது. 
தோழமையுடன்
சுப்ரமணியம்
மாவட்டச்செயலாளர்
தருமபுரி.











Friday 27 December 2019

மதுரை மா நகரில் 22-12-2019 , மாவட்ட AIBSNLPWA சங்கம் ஓய்வூதியர் தின விழாவை ஒரு பிரமாண்டமான திருவிழாவாக நடத்தியது. ஓய்வு பெற்ற நம் ஓய்வூதியர்கள் , அகவை 70 ஐ கடந்தவர்கள் சுமார் 320 பாராட்டி கௌரவிக்கப்படுவார்கள் என வலைத் தளத்திலும், வாட்ஸ் அப் மூலமாகவும், போன் அழைப்பு மூலமாகவும், நேரிலே கண்டபோதும் நினைவுறுத்தினார்கள் .சுமார் 10-30 மணிக்கு விழா துவங்கியது. 
இறை வணக்கப்பாடலை திருமதி கல்யாணி சுந்தரேசன் அவர்கள் திருக்குறள் பொது மறை பண் பாமாலையாக பாடியது மிகவும் போற்றுதற்குரியது.  
சமீப காலங்களில் மறைந்த நெல்லை அருணா மற்றும் மாவட்ட சங்க தோழர்களின் மறைவிற்காக ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தலைவர் தோழர் தர்மராஜன் அஜெண்டாவை அறிவித்து அவையோரின் ஒப்புதல் பெற்றார் .பிறகு தமது தலைமையுரையில் ஓய்வூதியர் தினத்தின் அருமை, பெருமைகளையும் , அதை ஏன் கொண்டாடுகிறோம் என்றும் எடுத்துக் கூறினார்.
மாவட்ட செயலர் தோழர் வீராச்சாமி  வந்திருந்த  அனைவரையும் வரவேற்று பேசினார். சரித்திர வரலாறு மிக்க நாள் மேலும் 320 ஓய்வூதியர்களை ஒன்றாக வவைத்து ஒரே விழா மேடையில் தலைவர்களை கொண்டு பாராட்ட செய்து , பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்துவது இதுவே முதன் முறையாகும். இது போல் இனி வருமா என்பதுவும் யாரும் உறுதியாக கூற முடியாத நிகழ்வு இது என்று பெருமை யுடன் பேசினார்.
முதன்மை பொது மேலாளர் நம் சங்கத்தை பாராட்டி " நான் ஜீன் 2020ல் ஒய்வு பெற்றபின் ஜூலை மாதம் முதல் உங்கள் சங்கத்தில் இணைந்து பணியாற்றுவேன் " என்றார் . துணை பொது மேலாளர் திரு சந்திரசேகரன் அவர்கள் பேசும்போது " விரைவில் உங்களுடன் இணைவேன் என்னால் இயன்ற உதவிகளை சங்கத்திற்கு செய்வேன்." என்று கூறினார் . மற்றோரு துணை பொது மேலாளர் திரு விஜயகுமார் அவர்களும் மற்றும் விருதுநகர் மாவட்ட தலைவர் தோழர் சண்முகம் அவர்களும் விழாவிற்கு வந்திருந்தார்கள் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள் .
மாநில உதவி செயலர் தோழர் சூரியன் தமதுரையில் நமது சங்கம் எந்தவித சாதி, மதம், இனம், கட்சி , பதவி இவைகளை சாராமல் தனித்துவமாக இயங்கி வருகிறது. ஓய்வூதியர் நலத்தில் மட்டுமல்லாமல் சமூக அக்கறையுடன் உழைத்து வருகிறது. இதற்கு சான்றாக கஜா புயலினால் முற்றும் சேதமுற்ற கொறுக்கை எனும் சிற்றுரில் முழுவதுமாக இடிந்து விழுந்த நடு நிலைப் பள்ளியை சீரமைத்து கொடுத்துள்ளோம். மேலும் நாட்டில் பல இடங்களில் வெள்ளத்தால் சேதமுற்ற மாநிலங்களின் சீரமைப்புக்கு வெள்ள நிதியாக ரூ 40 லட்சம் பிரதமர் தேசிய நிவாரண நிதியாக அளித்துள்ளோம்.. எனவே சொந்த விருப்பில் ஓய்வு பெறும் ஓய்வூதியர்களை நம் சங்கத்தில் இணைய அவர்களை அணுக வேண்டும் என்றார்
மாநில செயலர் தோழர் R .வெங்கடாசலம் சுமார் ஒரு மணி 10 நிமிடங்கள் உரையாற்றினார்கள். 7வது ஊதியக் குழு பரிந்துரைகளை நமக்கு நம் சங்கம் நிச்சயம் பெற்றுத்தரும். நம் சாதனைகளை தம் சாதனைகளாக சில சங்கங்கள் நோட்டிஸ் அடித்து பொய் சொல்லி வருகின்றன. அவைகளை நம்ப வேண்டாம். மிகவும் கஷ்டமான பிரச்சினை களை நம் விடா முயற்சியின் மூலம் தீர்த்து வைத்துள்ளோம் இதற்கு சான்றாக குடந்தையில் ஓவியா எனும் 13 வயது சிறுமிக்கு மறைந்த அவரது தந்தையின் குடும்ப ஒய்வு வூதியம் பெற்று தந்ததையும் , தஞ்சை யின் மற்றொரு கேசையும் எடுத்துக்கூறி பல லட்சங்கள் நிலுவைத் தொகையினை பெற்றுத்தந்ததையும் சங்கத்தின் சாதனையினை பலத்த கைத்தட்டல் களுக்கிடையே கூறினார்
MRS திட்டத்திலிருந்து CGHS  திட்டத்திற்கு மாற அறிவுறுத்தினார். CGHS விபரங்கள் குறித்த கையேடு தோழர் நெல்லை அருணா அவர்கள் மூலம் வெளியிட்டுள்ளோம் . அது எல்லோருக்கும் வழங்கப்படும். BSNL ஓய்வூதியர்கள் CGHS Non Covered பகுதியில் இருந்தாலும் அதில் இணைந்து பயன் பெறலாம். அதற்கு செலுத்தப்படும் சந்தா தொகையை BSNL  நிர்வாகம் நமக்கு திரும்ப தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது மிகப்பெரிய நன்மை பயப்பதாகும் , விரைவில் மதுரையிலும், கோவையிலும் CGHS  வெல்னஸ் சென்டர்கள் துவங்கப்பட உள்ளன என்று கூறி உணவு வேளை நேரம் நெருங்கி விட்டதால் தமது உரையை முடித்துக்கொண்டார்.
தோழர் நடராசன் துணை பொது மேலாளர் ஒய்வு  நன்றியுரை கூற விழா பேச்சரங்கம் இனிது முடிவுற்றது.
பிறகு அகவை 70 ஐ கடந்த தோழர்கள் சுமார் 200 பேர்களுக்கு மேல் ஒவ்வொருவரும் விழா மேடைக்கு அழைக்கப்பட்டு முதன்மை பொது மேலாளர், மாநில செயலர் ,மாநில உதவி செயலர் மற்றும் மாவட்ட செயலர் அவர்களால் பொன்னாடை போர்த்தப்பட்டு , அஜந்தா சுவர் கடிகாரம் நினைவு பரிசும் வழங்கி நிழற் படம் எடுக்கப்பட்டு  கௌரவிக்கப்பட்டார்கள் . உணவருந்தும் பகுதியில் தோழர் வீராச்சாமி அனைவரையும் நன்கு கவனித்து உணவு வகைகளை சரியாக பரிமாற செய்து கருத்தாக கவனித்துக்கொண்டார். மேலும் CGHS  கையேடுகளை அனைவருக்கும் வழங்கினார்.
இன்றைய விழாவிற்கு 600 பேர்களுக்கு மேல் வந்து சிறப்பித்தனர் அரங்கத்தில் இட நெருக்கடி காரணமாக நூற்றுக்கணக்கான தோழர்கள் வெளிப்புற இடங்களில் சவுகரியமாக அமர்ந்தபடி நிகழ்வுகளை கண்காணித்தது பாராட்டுதற்குரியது .உணவு சுவையாக சூடாக மதுரை பாரம்பரியத்தை பறை சாற்றும் விதமாக இருந்தது. அன்புடன் சமையற்கலை ஊழியர்கள் உணவு பரிமாறியது அதன் சுவையை மேலும் கூட்டியது.
மதுரை மாநகரில் கடல் அலைகள்  ஆர்ப்பரிக்க சாத்தியமில்லை 
மதுரை சங்க அரங்கில் மனித தலைகள் இருப்பதில் ஆச்சரியமில்லை.


Wednesday 25 December 2019

When we are talking about canvassing , AIBSNLPWA Trichy District has gone one step ahead . Yes 16 comrades have joined in Ariyalur Branch of Trichy District and 8 comrades have joined in Trichy District Union. The name list is furnished  below.

அரியலூர் கிளையில் இணைந்த தோழர்கள் .

1.  M.மாரிமுத்து (J.E)  AYL
2.  S.நீலமேகம் (J.E) AYL
3.  M.பெரியசாமி (T.T) AYL
4.  S.கந்தசாமி ( T.T) AYL
5.  M.சிவலிங்கம் (T.T) AYL
6.  R.சின்னதுரை (T.T)  AYL
7.  G.கருணாநிதி (T.T) AYL
8.  P.கருப்புசாமி (T.T) JYK
9.  T.குரல்செல்வம் (T.T) JYK
10. A.வீரமணி (T.T) JYK
11. F.ஸ்டான்லிஅலக்ஸ் (J.E) JYK
12. N.ரவிசந்திரன் (T.T) JYK
13. G.செல்வராஜ் (T.T)  JYK
14. R.முருகேசன்  (T.T)  JYK
15. N.மணிவண்ணன்  (J.E)  JYK
16. R.ராஜேந்திரன்  (T.T)  JYK

பெரம்பலூர் தோழர்கள்:

1.   K.M.செல்வராஜ்   (O.S)
2.   G.ரவிகுமார்          (T.T)
3.   D.காமராஜ்           (T.T)
4.   P.ஜெயராமன்      (T.T)
5.   P.மோகன்குமார்  (T.T)
6.   M.கண்ணயன்     ( T.T)
7.   S.தாமோதரன்      (T.T)
8.   A.ஆய்ஷா             (R.M)

திருச்சி SSA ,  புதுக்கோட்டைபொன்னமராவதி  சேர்ந்த VRS ல் செல்ல இருக்கும் தோழர்கள் , 23-12-2019 அன்று திருச்சியில் நடைபெற்ற ஓய்வூதியர் தின கூட்டம்  தமிழ் மாநில செயலர் தோழர் R .வெங்கடாசலம் கலந்து கொண்டு சிறப்பித்த போது , மாநில செயலர் முன்னிலையில் கீழே குறிப்பிட்டுள்ள செயல் வீரர்கள் நம் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். அவர்களை வருக ! வருக !! என் கரம் கூப்பி வரவேற்கிறோம்.
தோழர்கள்
எஸ் நாகராஜன் II
எம் ஆறுமுகம்
எம் நடராஜன்
எம் ராமன்
என் பரமசிவம்
ராஜேந்திரன்
ஆர் அன்பழகன்

அகில இந்திய BSNL ஓய்வூதியர் நலச் சங்கத்தில்  இணைந்த தோழர்களை அரியலூர் கிளையின் சார்பாக வருக வருக என வரவேற்கிறோம்        
 -R.ஆறுமுகம்(மாநில சிறப்பு அழைப்பாளர்)




நமது மாவட்டச் சங்கம் சாதித்த
முத்தான மூன்று
 சாதனைகள்.
1.  மறைந்த தோழர் செலவகுமார், TM அவர்களின் மனைவி தோழியர் உஷா அவர்களுக்கு வரவேண்டிய குடும்ப ஓய்வூதியம் ஆண்டுக்கணக்கில் வராமல் இருந்தது. அதற்கான முயற்சியை நமது மாவட்டச் சங்கம் எடுத்தது. அதற்குத் தேவையான ஆவணங்களை மயிலாடுதுறை தோழர்கள் சண்முகவேல் மூலமாகப் பெறப்பட்டு அதை நமது மாநில சங்கத்துக்கு அனுப்பி நமது மாநில செயலரின் தொடர் முயற்சியால் அந்த தோழியருக்கு குடும்ப ஓய்வூதியம் ரூபாய் 7.2 லட்சம் கிடைத்திருக்கிறது.

2. மறைந்த தோழர் சந்திரசேகரன், மங்கநல்லூர் அவர்களின் மைனர் வாரிசு ஓவியா அவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் பெறுவதில் சட்டச் சிக்கல் இருந்தது. நமது சங்க ஆலோசகர் தோழர் அனந்தன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மயிலை தோழர். செந்திலாதிபன் அவர்களின் உதவியோடு கார்டியன் ஏற்பாடு செய்து அதற்கான ஆவணங்களை நமது மாநில சங்கத்திற்கு அனுப்பினோம். மாநில செயலரின் தீவிர செயல்பாட்டால் நிலுவைத் தொகை ரூபாய் 1.80 லட்சமும், மாதாமாதம் ஓய்வூதியமாக ரூபாய் 5595/- அந்த மைனர் வாரிசுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.
 நமது சங்கத்தின் மிக வயது (13) குறைந்த குடும்ப ஓய்வூதியர் இவராகத்தான் இருக்கும்.

3. தோழியர்.சூரியபிரபா, SDE,நன்னிலம அவர்களுடைய PPO வில்.கடைசி இலக்கம் தவறாக இருந்ததால் அவர்களிக்கு கிடைக்க வேண்டிய 78.2%  அரியர்ஸ் கிடைக்காமல் இருந்தது. அவர் தானாகவே முயற்சி செய்து எதுவும் நடக்கவில்லை என்றவுடன் நமது சங்கத்தை மயிலை தோழர் நாகராஜன், SDE மூலம் நம்மை அணுகினார். அதுவரை அவர் எந்த சங்கத்திலும் உறுப்பினராக இல்லை. நம்மை அணுகியவுடன் நாம் அதற்கான செயல்களை மாநில சங்கத்தின் மூலம் செய்து அந்த தோழயருக்கு அரியர்ஸ உடன் 31.10.2019 வரை ரூபாய் 2.8 லட்சம் பெற்றுக்கொடுத்து இருக்கிறோம். 

மேலே சொன்ன அனைத்திற்கும் உதவி செய்த தோழர்கள் அனந்தன், மாவட்ட ஆலோசகர், மயிலை தோழர்கள். சண்முகவேல, செந்திலாதிபன், நாகராஜன், மாநில செயலாலர் தோழர் வெங்கடாசலம் மற்றும் அனைத்து தோழர்களுக்கும், CCA அலுவலக அதிகாரிகள், ஊழியர்களுக்கும், வங்கி அதிகாரிகள், ஊழியர்களுக்கும் குடந்தை AIBSNLPWA மாவட்டச்சங்கம் தனது நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது. 
ஜெயராமன்.R
மாவட்ட அமைப்புச் செயலாளர்,
AIBSNLPWA
கும்பகோணம்.


Monday 23 December 2019

இன்று திருச்சியில் ஓய்வூதியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10-00 மணிக்கு துவங்கிய கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தோழர்.V.P.  காத்தபெருமாள் தலைமை ஏற்று தலைமை உரை நிகழ்த்தினார். முதலில் மறைந்த நம் அகில இந்திய உதவி பொது செயலர் தோழர் S. அருணாச்சலம் அவர்களுக்கும் , மற்றும் சமீப காலங்களில் மறைந்த நம் தோழர்களுக்கும் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 
மாவட்ட செயலர் தோழர் T.செல்வராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார்.கூட்டத்தில் முக்கிய விருந்தினராக தோழர் R .வெங்கடாச்சலம் தமிழ் மாநில செயலர் கலந்து கொண்டு சுமார் 1 மணி 30 நிமிடங்கள் தற்போதைய நம் பிரச்சினைகளையும், சங்க செயல்பாடுகளையும் மிகத் தெளிவாக எடுத்துரைத்தார் . 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை நமக்கும் அமல் படுத்த நாம் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளை விளக்கினார். MRS திட்டத்தில் இருந்து CGHS  திட்டத்திற்கு மாறும் படி கூறினார்.விருப்ப ஓய்வில் வரவிருக்கும் தோழர்களை பெருவாரியாக நம் சங்கத்தில் இணைய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தனார்.
கூட்டத்திற்கு 250 உறுப்பினர்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர். இன்றைய கூட்டத்தின் வரவேற்கவேண்டிய விஷயம் என்னவென்றால்,  விருப்ப ஓய்வு கொடுத்த  அரியலூர் பகுதி 15 தோழர்கள் நமது மாநில சிறப்பு அழைப்பாளர் தோழர் ஆறுமுகம் முயற்சி யாலும் பொன்னமராவதியில் 7 தோழர்கள் அப்பகுதி முன்னணி தோழர் நாகராஜன் முயற்சி யாலும் இன்று திருச்சி யில் நடைபெற்ற கூட்டத்தில் நமது அமைப்பில் உறுப்பினர் ஆயினர். இப்பணி, இது போன்ற நிகழ்வுகள் ஒவ்வொரு பகுதியிலும் நடைபெறவேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும்.
மாவட்ட பொருளாளர் தோழர் சுதர்சனம் நன்றி நவில கூட்டம் இனிய நினைவுகளுடன் முடிவுற்றது.  கூட்டம் முடிவடைந்ததும் அனைவருக்கும் சுவைமிகு மத்திய உணவு பரிமாறப்பட்டது









17.12.2019 அன்று கடலூர் மாவட்டம் AIBSNLPWA , விழுப்புரம் பகுதி 7 ஆம் ஆண்டு விழாவும் பென்சனர் தின சிறப்புக் கூட்டமும் மிக சிறப்பாக பாவ்டா மண்டபத்தில் தோழர். ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட தலைவர் .P.ஜெயராமன்  துவக்க உரை ஆற்றிட தோழர்.தக்ஷிணாமூர்த்தி வரவேற்புரை நிகழ்ததினார். வாழ்த்துரை வழங்கியவர்கள்.தோழர்கள்.N.திருஞானம் K.வெங்கட் ரமணன், செல்வரசுமரி,பொன்மலை,ஜெகந்நாதன்,ஜெயகுமார், நாராயணசாமி ,இராதாகிருஸ்ணன் இளங்கோ, வீரராகவன், AAA சிறப்புரை மாநில சங்க துணை தலைவர்கள். விக்டர் ராஜ் & K.சந்திரமோகன்  ஆகியோர் CGHS , கடைசியாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்களுடன் நம் சங்க தலைவர்கள்  7வது CPC ,  அடிப்படையில் CDA pattern  pension  வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை யை ஏற்க தற்போது முடியாது என்றும் BSNL /MTNL REVIVAL PROFITABILITY  காரணம் கட்டிய விவரங்களை பற்றியும் நமக்கு உயர் ஓய்வூதியம் கிடைக்க பாடுபட்ட  தோழர். நகரா வின் முயற்சிகளை என்றென்றும் மறக்கக்கூடாது .இந்த விபரங்களை தங்கள் சிறப்பு உரையில் குறிப்பிட்டனர். இந்த விழாவில் 80 வயதிற்கு மேலான  தோழர்கள்.செல்வராஜ், கணிக்கண்ணன்,ராஜகோபால் ஆகியோரை பாவ்டா அமைப்பு நிர்வாகி ஜோஷ்லின் தம்பி நினைவுப்பரிசு ,பழத்தட்டு, மற்றும் பொன்னாடை போர்தியும் டர்பன் கட்டியும் வாழ்த்தி பேசினார்.நம் சங்கம் மூத்த குடிமக்கள் ஆன நமக்கும் குடும்ப ஓய் வூதியம். பெற்றிட ஆற்றிவரும் பணிகளை பற்றியும் பெருமைப்பட பேசினார். இறுதியாக தக்ஷிணாமூர்த்தி நன்றி கூறினார். மாவட்டம்  முழுவதிலிருந்தும் 200 க்கும் அதிகமான தோழர்கள் கலந்து கொண்டனர். விழா ஆரம்பத்தில் தேசியக்கொடியை தோழர். துரை பாபு வும் சங்க கொடியை தோழர்.அண்ணமலையும் ஏற்றிவைத்தனர்.