Monday 31 July 2017

THE AICPI (IW) FOR JUNE 2017 IS 280

The All India Consumer Price Index for Industrial Workers for June 2017 is announced by Labour Bureau: It is 280 points.  2 Point Increase from the previous month. In July 2016, one year back, it was 280 points. Then it came down and down gradually. After one year it has come back to the level of 280 points.
CDA will be 5% from July 2017 for Central Government Employees and Pensioners.
1% increase from the existing 4% based on their revised pay and Pension.

தோழர் கே. எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தனது 70-ம் பிறந்த நாளை இந்த ஜீலை திங்கள்2017 விழா கொண்டாடும் வேளையிலே தஞ்சை மாவட்ட அகில இந்திய BSNL ஓய்வூதியர் நலச்சங்க தோழர்கள் அனைவரும் வாழ்த்துக்களை இதயபூர்வமாக வாழ்த்தி வணங்ககிறோம். வாழ்க வளமுடன்.  
தோழர் கேஎஸ்கே  டெலிபோன் ஆப்பரேட்டராக இலாகாவில் நுழைந்து SDE ஆக 2007ல் ஓய்வுபெற்றார். சேவையில் இருந்தபோது தொழிற்சங்கத்தின்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டு அனைத்து போராட்டங்களையும் முன்னின்று நடத்தியுள்ளார். ஒய்வு பெற்றபின் நம் அமைப்பில் சிறப்பாக இயங்கி வருகிறார். அவர் தமிழ் மாநில AIBSNLPWA அமைப்பு செயலாளர் மட்டும் இல்லாமல் இந்த உடல் நலமில்லா நிலையிலும் தனது வீடுஅமைந்துள்ள எல்ஐசி காலனி தஞ்சை பகுதியில் வாழ், குடியிருப்போரின்நலசங்க தலைவர் ஆகவும் பொறுப்பேற்று  நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி நல்லமுறையில் செயலாற்றி வருகிறார்கள். நல்ல உடல் நலம்பெற்று இன்னும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து சேவைகள் பல செய்து இல்லாதோர் வாழ்வினில் ஒளியேற்ற விழையும் அவர் செயல் சிறக்க வாழ்த்துக்கள். 
இவண், 
தோழமை உணர்வுகளுடன், 
தஞ்சை மாவட்ட கிளை சார்பாகவும், 
கே. சந்தானகோபாலன், 
உபதலைவர், 
தஞ்சை மாவட்ட AIBSNLPWA கிளை, 
தஞ்சை.

Sunday 30 July 2017


 AIBSNLPWA தமிழ் மாநில தலைவர் தோழர்.V .ராமராவ்  அவர்கள் பலவித சமூக அமைப்பு நிறுவனங்களில் தலைவராக, செயலாளராக இருந்து கொண்டு பொதுமக்கள் மேன்மைக்காக அரும்பாடு பட்டு வருகிறார். சமீபத்தில் தமிழக மின்வாரியம் நடத்திய மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் நம் தலைவர் பங்கு கொண்டு மிக நன்றாக பேசியுள்ளார். அவர் பேசியுள்ள விபரங்கள் தமிழ் ஹிந்து மற்றும் பல தினசரிகளில் வெளியாகியுள்ளன. அதில் ஒரு செய்தி உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.

மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்பாடு செய்திருந்த மக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பேசியவர்கள் வலியுறுத்தினர்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின்தொடர மைப்புக் கழகம் மற்றும் மாநில மின்சுமை பகுப்பு மையம் ஆகியவை தாக்கல் செய்துள்ள மின் கட்டண உயர்வு குறித்த மனுக்கள் மீது பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் சென் னையில் நேற்று நடந்தது.

மின்நுகர்வு அதிகரிப்பு

இந்தக் கூட்டத்தில் மக்கள் விழிப்புணர்வு சங்கம் (நங்கநல்லூர் கிளை) செயலாளர் வி.ராமா ராவ் பேசியதாவது:

கடந்த 2015-ம் ஆண்டுதான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது நிலுவையில் உள்ள மின் கட்டணமே நுகர்வோருக்கு பெரும் சுமையாக உள்ளது. எனவே, மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தக் கூடாது. சென்னை போன்ற நகரங்களில் வசிக்கும் மக்கள் திருட்டு பயம், காற்று மாசுபாடு உள்ளிட்ட காரணங்களால் கோடைக்காலத்தில்கூட இரவு நேரங்களில் வீட்டின் ஜன்னல்களை மூடி தூங்க வேண்டியுள்ளது. இதனால் வீட்டுக்கு ஒரு ஏசி பொருத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மின்நுகர்வு அதிகரித்துள்ளது. எனவே, தற் போது 2 மாதங்களுக்கு 500 யூனிட் வரையிலான மின்சாரத்துக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை 750 யூனிட் வரை உயர்த்த வேண்டும். தற்போது, நகர்ப்புறத்தில் ஒரு வீட்டுக்கு நாளொன்றுக்கு 8.22 யூனிட் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதை 12.5 யூனிட்டாக வழங்க வேண்டும்.

ரூ. 1,000 கோடி இழப்பு

ஜிஎஸ்டி சட்டம் அமல்படுத் தப்பட்டுள்ளதால் நிலக்கரி கொள் முதல் விலை குறைந்துள்ளது. இதனால் மின்னுற்பத்திக் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 6 முதல் 7 பைசா குறைந்துள்ளது. இந்தப் பலனை நுகர்வோருக்கு வழங்க வேண்டும். அண்மையில் வீசிய வார்தா புயலால் மின் கம்பங்கள், வயர்கள் உள்ளிட்டவை சேதம் அடைந்தன. இதனால், மின் வாரியத்துக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. எனவே சென்னை, புறநகர் பகுதிகளில் உயர் மற்றும் குறைந்த மின்னழுத்த கேபிள்கள், வயர்களைப் பூமிக்கடியில் பதிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

26 சதவீத மின் இழப்பு


உற்பத்தி செய்யப்பட்ட மின் சாரத்தை திறம்பட கொண்டு சென்று விநியோகிப்பதில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக டான் ஜெட்கோ நிறுவனத்துக்கு 2011-12-ம் ஆண்டில் 17,583 யூனிட் மின்சாரமும், 2014-15-ல் 20,966 யூனிட் மின்சாரமும் வீணானது. வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்த மின் இழப்பு 10 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. ஆனால், நம் நாட்டில் 26 சதவீதமாக உள்ளது. இந்த இழப்பைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Com.Muthiyalu is Fine Now
Dear Comrades,
                                Our Circle Secretary Com.K.Muthiyalu is fine now. As per doctors advise he is taking rest. The blockage in blood path could be cured by medicines. Pain on knees has made him immovable slightly. He is taking medicines under doctors' guidance. The great leader who has worked hard and hard for the welfare of entire comrades of Telecom Field for decades together will resume his normal activities by all your prayers and well wishes.
Kindly do not disturb him through phones. Let him take complete rest.









Saturday 29 July 2017

Com.Muthiyalu is Hospitalised
Our Circle Secretary Com K. Muthiyalu is suffering from heart problem. He was hospitalized yesterday for one day and Anjiyo and ECG tests were taken for him. It was found that 30% block is there in the vessels and also found that oxygen supply for his lungs was very poor. He is taking oxygen mask during night time to improve oxygen intake to his lungs. He is also suffering from leg &  knee joint pain and unable to walk now.  Doctors have given medicines and advised him to take rest. 
We wish him to get well soon.


This is to inform you that an amount of Rs.23,400/- to CHQ and Rs.13,800/- to TN Circle towards 78.2% Donation for 32 members and LM Quota for 37 members have been paid through concerned SB accounts on 27-07-2017. 
Totally 78.2% donation Rs.2,16,000/- to CHQ and Rs.86,400/- to TN Circle paid till this date.  
Also LM Quota paid for 653 members from Madurai Dist. Br. (TN) as on date.
Please confirm the remittance and send the receipt accordingly.  The list of 37 additional LM Quota paid members will be sent by post or another email.

Friday 28 July 2017


All India BSNL Pensioners' Association, Salem -Annual General Body Meeting on 26.7.2017 in Salem Tamil Sangam Auditorium--

இனிய உசாவல்கள்.... அன்பு சீண்டல்கள்... தொலைந்த    நாட்கள் பற்றிய உணர்வுமிக்க மீள் நினைவுகள்... குடும்ப உறவுகள் பற்றிய குதூகல செய்திப் பரிமாற்றங்கள்  ......இனிவரும் காலம் பற்றிய எதிர்பார்ப்புகள் ... கவலைகள் ...  வயது   ஏற்படுத்தும்  உடல் ரீதியான   தோற்ற மாற்றங்கள் ஒருபுறம் ... ஆச்சர்யமூட்டும்   குணநல மாற்றங்கள்  ஒரு கால விசித்திரம் ....எத்தனை முகங்கள் .... எத்தனை  நினைவுகள்...
இவற்றின் ஊடே  நமது சங்கத்தின்  சென்ற ஆண்டு செயல்பாடுகள், சாதனைகள், நிகழ் கால திட்டங்கள் , எதிர்கால இலக்குகள் ,.. இவை பற்றியும்  பேசப்பட்டன .......திறன்மிகு  தலைவர்கள் , அனுபவசாலிகளான முன்னோடிகளின்   வழிகாட்டல்கள் , செயல்திறன் மிக்க நம் தோழர்கள் ..... புதிய நிர்வாகிகள்புதிய உத்வேகத்துடன்  நம் சங்கத்தை  பொலிவுறச் செய்ய இதோ வந்துவிட்டார்கள்.....    















தஞ்சை மாவட்ட AIBSNLPWA கிளை.
எதிர் வரும் இரண்டாம் 
சனி கிழமை 12.08.2017 
அன்று தஞ்சை மாவட்ட AIBSNLPWA கிளை
அகில இந்திய BSNL ஓய்வூதியர் நலச்சங்க
அமைப்பு தினம் 
மற்றும் தஞ்சை மாவட்ட சங்க 
14-ம் ஆண்டு துவக்க விழா 
சிறப்பு பொதுக்குழ கூட்டம் 
நடத்த முடிவு செய்யப்பட்டு 
சிறப்பான முறையில் நடைபெற
ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
அதன் அழைப்பிதழ் 
இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.  
அனைவரையும் மனமுவந்து 
அழைத்து மகிழ்கிறோம்.
வருக! வருக!!

 இவண் தோழமை உணர்வுகளுடன்,
அழைப்பின் மகிழ்வில்,
K. சந்தானகோபாலன்,
துணைத்தலைவர்,
தஞ்சை மாவட்ட AIBSNLPWA சங்கம்,
 தஞ்சை.


Wednesday 26 July 2017

மாவட்ட செயலர்களுக்கு ஓர் வேண்டுகோள்.
நம் AIBSNLPWA உருவான அமைப்பு தினத்தை 20-08-2017 அன்று அல்லது ஆகஸ்டு மாதத்தில் ஏதாவது ஒரு நாளில் சிறப்பான முறையில் ஒவ்வொரு கிளையிலும் கொண்டாட வேண்டும் என மத்திய சங்கமும் , தமிழ் மாநில சங்கமும் கோரிக்கை விடுத்துள்ளது. அதன் பிரகாரம் மதுரை மாவட்ட கிளை 20-08-2017 அன்று அமைப்பு தின சிறப்பு கூட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது மிகவும் பாராட்டுதலுக்குரியது.
அதைப்போல எல்லா கிளைகளும்  அமைப்பு தின சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஏற்பாடு செய்த பிறகு உடனடியாக அது குறித்த தகவல்களை :--  நாள், இடம், நேரம், சிறப்பு அழைப்பாளர் பெயர் போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.. அந்த விபரங்களை நமது வெப் சைட் ல்  பதிவு செய்ய வசதியாக இருக்கும்.மேலும் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடக்கும் சமயம் போட்டோக்களை எடுத்து அனுப்பவும்.மொபைல் போனில் எடுத்து 
அனுப்பினால் போதும்.
அனுப்ப வேண்டிய முகவரி :- e -mail மூலமாக அனுப்ப நினைத்தால் aibsnlpwatncircle@gmail.com  அல்லது whatsapp மூலம் அனுப்ப நினைத்தால் மொபைல் எண் :--  8056066995. அல்லது போன் மூலமாக நேரிடையாக தெரிவிக்க விரும்பினால் 8056066995 என்ற எண்ணுக்கு missed call கொடுத்தால் போதும், நானே உடனே உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்.
எல்லா மாவட்ட செயலர்களும் /தலைவர்களும் நம்முடைய web site அல்லது whatsapp பார்ப்பதில்லை. எனவே இந்த பதிவினை காணும் அன்புத்தோழர்கள் இதில் கூறப்பட்டுள்ள விபரங்களை செயலருக்கு/தலைவருக்கு எடுத்துக்கூறி நீங்களே மேற்குறித்த தகவல்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.அமைப்புதின கொண்டாட்டங்களில் தமிழ்மாநிலத்தில் உள்ள  அனைத்து மாவட்டங்களும்  ஆர்வம் மிகக்கொண்டு செயலாற்ற வேண்டும்.
உங்கள் மாவட்டத்தின் பெருமைகளை பார் அறியச்செய்ய தமிழ்மாநில website காத்திருக்கிறது.
--வெப் மாஸ்டர் .
80560 66995./ 04425584646 























Tuesday 25 July 2017

AIBSNLPWA  அமைப்பு தினத்தை கொண்டாடுங்கள்.
நம் சங்கத்தை வலுப்படுத்துங்கள்.
அனைத்திந்திய BSNL ஓய்வூதியர் நல சங்கம் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20-ம் தேதி உருவாக்கப்பட்டது.இந்த நாள் BSNL ஓய்வூதியர்களின் வாழ்வில் ஒரு பொன்னாள் .எனவே இந்த அமைப்பு தினத்தை சிறப்பாக கொண்டாடுவோம்.
ஓர் அருமையான அமைப்பு
பணி ஒய்வு பெற்றபின் நமக்குள் CGM ஓய்வூதியர் , ரெகுலர் மஸ்தூர் ஓய்வூதியர் எனும் பாகுபாடு நம்மிடையே கிடையாது. சேவையில் நாம் இருந்த போது எந்த பதவியில் இருந்திருந்தாலும்,ஒய்வு பெற்றபின் நாம் எல்லோருக்கும் ஒரே பெயர்தான் அது " BSNL ஓய்வூதியர் " என்பதுதான். ஆகவேதான் இந்த சங்கத்தில் ஒய்வு பெற்ற CGM முதல் RM வரை அனைவரும் ஒன்றாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளோம்.
சேவையில் இருந்த போது நாம் பல்வேறு அமைப்புக்கள், சங்கங்களில் அங்கத்தினர்களாக இருந்து பணியாற்றினோம்.அவையனைத்தும் ஒய்வு பெற்ற பின் மறைந்து விட்டன.ஒரே சங்கம் ,ஓய்வுதியர் நலனே நம் கடமை என்று இச்சங்கத்தில் இணைந்து விட்டோம்.
ஓய்வூதிய மாற்றம்:
BSNL நிறுவனம் துவங்கப்படுவதற்கு முன்பாக நமக்கு ஓய்வூதியம் உறுதி செய்யப்பட வேண்டும் என்று ஒரு கால வரையற்ற வேலை நிறுத்தத்தை மேற்க்கொண்டோம் போராட்டத்தின் முடிவில் மத்திய அரசும் நமக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தது. 2009 ல் அதிகாரிகளின் ஊதிய விகிதம் 01-01-2007 மு தல் மாற்றி அமைக்கப்பட்டதுஆனால் அதே சமயம் ஒய்வு பெற்ற அதிகாரிகளின் ஓய்வூதியம் மாற்றி அமைக்கப்பட்ட வில்லை .நாம் புது டில்லி சென்று ஓய்வூதிய மாற்றத்திற்காக போராடியபோது  " BSNL என்பது ஒரு பொதுத்துறை நிறுவனம்.எனவே ஓய்வூதிய மாற்றமெல்லாம் கிடையாது " என்று DOT மறுத்து கூறிய போது தான் நமக்கென்று ஓர் அனைத்திந்திய அமைப்பு தேவை என்ற நிலை ஏற்பட்டது. 
அனைத்திந்திய   அமைப்பு உருவாக்குதல்
இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து சுமார் 454 ஓய்வூதியர்கள் 20-08-2009 அன்று சென்னையில் ஒன்று கூடி பிரச்சினைகளை எடுத்துக்கூறி தீர விவாதித்து ஒரு மனதாக AIBSNLPWA அமைப்பினை உருவாக்கினார்கள்.இந்த அமைப்பிற்கு தோழர்கள் முத்தியாலு மற்றும் ராமன்குட்டி முறையே தலைவர் மற்றும் அகில இந்திய பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
செய்யறியாதனவற்றை செய்து காட்டினோம்.
எத்தனையோ பல்வேறு கோரிக்கைகள் ஓய்வூதியர்களிடையே குவிந்து கிடந்த போதிலும்," 2007 க்கு முன் ஒய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய மாற்றம் " எனும் கோரிக்கையை முக்கியமானதாக கருதி முன்னிறுத்தினோம். ஓய்வூதிய மாற்றம் பெற்றிட நாம் நடத்திய தர்ணாக்கள்,போராட்டங்கள் பல பல. பிறகு அரசு ஓய்வூதிய மாற்றத்திற்கான உத்தரவினை 15-03-2011 அன்று வெளியிட்டது. இது நாம் பெற்ற மாபெரும் வெற்றியாகும். கிட்டத்தட்ட 60,000 ஓய்வூதியர்கள் தங்கள் ஓய்வூதியம் சுமார் இரு மடங்காக உயர்வடைந்ததை கண்டு மகிழ்ச்சியுற்றனர்.
நாம் வென்றெடுத்த மற்ற கோரிக்கைகள்
நம் சங்கம் நாளடைவில் பல்வேறு கோரிக்கைகளை நிர்வாகத்தின் முன்வைத்து வென்றுள்ள.அவைகளில் ஒருசில (1) உரிய காலத்தில் IDA , (2) ஓய்வூதிய கணக்கீட்டிற்கு Extra increment (3) சேவையில் இருப்போர்க்கு இணையான மருத்துவ ஈட்டு பெறுதல்.(4) குடும்ப ஓய்வூதியர்க்கும் MRS வசதி .(5) Broad band கட்டணத்தில் சலுகை வசதி (6) காலியாக இருக்கும் குடியிருப்புக்களை ஓய்வூதியர்களுக்கும் வழங்குதல் (7) நமக்கும் இரவு நேரங்களில் இலவச தொலைபேசி அழைப்பு வசதி.(8)ரசீது இல்லாமல் மருத்துவ அலவன்ஸ் பெரும் வசதி போன்றவற்றை முக்கியமாக சொல்லலாம் .பென்ஷன் அனாமலி வழக்காடு மன்றம் மூலமாக உத்தரவு பெற காத்திருக்கிறோம். இவை அனைத்துக்கும் மேலாக பல்லாயிரக்கணக்கான குடும்ப ஓய்வூதியர்கள் தங்கள் துயரம் நம் சங்கத்தால் களையப்பட்டு நிம்மதி அடைந்துள்ளனர்.
60% : 40% விகிதத்தை தகர்த்து, 78.2% IDA இணைப்பு உத்தரவு பெற்றது
மூன்றாண்டு கடும் போராட்டங்களுக்குப் பின் ஓய்வூதிய மாற்றத்திற்கு தடையாக இருந்த 60:40 சத விகிதாச்சார முறை முற்றிலுமாக நீக்கப்பட்டு 78.2% சத IDA இணைப்பு உத்தரவுகள் வெளியாகின. இது நம் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை .நம்முடைய இந்த மாபெரும் வெற்றியினைக்கண்டு சேவையில் உள்ள தோழர்களும் மகிழ்வெய்தினர் . நம் சங்க உறுப்பினர்களின் மகிழ்ச்சியும் , ஆனந்தமும் எல்லையற்றதாக விளங்கின என்று கூறினால் அது மிகையல்ல.
7வது சம்பள கமிஷன்
7வது சம்பள கமிஷன் தன் பரிந்துரைகளை அளித்துள்ளது. அதன் அடிப்படியில் நம் ஓய்வூதியங்களும் மாற்றியமைக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்து பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகிறோம். இந்த கோரிக்கையில் நாம் வெற்றி பெற்று விட்டால் , எப்பொழுதெல்லாம் மத்திய அரசு தன் ஓய்வூதியர்களின் ஓய்வூதியங்களை மாற்றி அமைகிறதோ , அப்பொழுதெல்லாம் நம் ஓய்வூதியங்களும் மாற்றி அமைக்கப்படும் .
மத்திய செயற்குழு மாநாட்டின் முடிவுசெய்துள்ளது, செய்த வண்ணம் உள்ளது. இதன் பலனாக நம் ஓய்வூதியர்கள் மத்திய அரசு ஓய்வூதியர்களை காட்டிலும் மிக நல்ல நிலையில் உள்ளனர். ஓய்வூதியர்கள் இச்சங்கத்திற்கு நன்றி பாராட்டுவது எனில் அது உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்துவது மூலமாகத்தான் இருக்க .வேண்டும்..BSNL  ல் ஓய்வூதியர்கள் சுமார் 2 லட்சம் பேர்கள் உள்ளனர். ஓய்வூதியர்கள் அமைப்புகளில் நம் அமைப்புதான் மிகப்பெரியது. ஆனால் நம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் கூட இல்லை. மற்ற அமைப்புகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.எனவே மிக அதிக எண்ணிக்கையில் ஓய்வூதியர்கள் எந்த வித சங்கத்திலும் உறுப்பினர் ஆகாமல் தனியே இருக்கின்றனர். அவர்களை கண்டறிந்து நம் சங்க உறுப்பினராக ஆக்க வேண்டும். இது அனைவரின் கடமையாகும்.
நமக்கு சில SSA க்களில் கிளை அமைப்பு இல்லை. இந்த நிலைப்பாடும் தீவிரமாக  விவாதிக்கப்பட்டு ,கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது." சில மாநிலங்களில் ,சில SSA க்களில் நம் கிளை அமைப்பு இல்லாத நிலை உள்ளது.கிளை அமைப்புகள் இல்லாத அத்துணை SSA க்களிலும் நம் கிளைகளை ஏற்படுத்த எல்லா முயற்சிகளும்  எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்."
அமைப்பை உறுதிப்படுத்த தக்க தருணத்தில் உழைத்திடுவோம்.
78.2% IDA நிலுவையில் பெற்றபின் அதிகப்படியான ஓய்வூதியர்களை நம் உறுப்பினர்களாக்க வழிமுறைகள் மேற்கொள்ள வேண்டுமென்று மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. நம் தோழர்களும் 78.2% நிலுவைத்தொகை பெற்று வருகிறார்கள். இந்த நிலுவைத்தொகை பெற முக்கிய காரணமாக இருக்கும் நம் சங்க
சாதனைகளை எடுத்துக்கூறி நம் உறுப்பினராக்க முயலுவதில் எந்தவித கஷ்டமும் இருக்காது. அதைப்போல ஆண்டு சந்தா தாரர்களை ஆயுள் உறுப்பினராக மாற்ற முயற்சிக்க வேண்டும்.
நாம் நம் குஜராத் தோழர்களை மிகவும் பாராட்ட கடமைப்பட்டுள்ளோம்..
குஜராத்தில் "பவ நகர்  " பகுதியில் நம் சங்கத்தின் சார்பில் ஒரு புதிய கிளையை அமைத்து அதில் சுமார் 200 தோழர்களை உறுப்பினர்களாக தோழர் பிரம்பட் இணைத்துள்ளார்.குஜராத்தில் இது நமக்கு கிடைத்த பெரிய வெற்றியாகும்.இதைப்போலவே கர்நாடகத்தில் 2 புதிய கிளைகளும், உத்தர பிரதேசத்தில் சில புதிய கிளைகளும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இது வெகுவாக பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஜார்கண்ட் மாநிலத்தில் நம் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஆயுள் உறுப்பினர்கள் என்ற செய்தி மிகவும் மகிழ்வூட்டக்கூடியதாக உள்ளது. எனவே அனைத்து SSA களிலும் சரியாக திட்டமிட்டு நடைமுறைப்படுத்த இதுவே தக்க தருணமாகும்.
ஆகஸ்டு மாதத்தில் நம் அமைப்பு தினத்தைக் கொண்டாடுங்கள்
நம் சங்கம் உருவான தினமான ஆகஸ்ட்/20 எல்லா கிளைகளிலும் கொண்டாடப்பட வேண்டும்.ஒருவேளை ஆகஸ்ட் 20ல் கொண்டாட முடியவில்லை எனில் ஆகஸ்ட் மாதம் ஏதாவது ஒரு நாளில் விழா எடுத்து கொண்டாடலாம்.அப்போது நம் சாதனைகளை பட்டியலிட்டு கூறுங்கள்.7வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை நாமும் பெற்றிட பாடுபட்டு வரும் நம் சங்கத்தின் மேன்மைகளை எடுத்துக்கூறுங்கள்.
சேவையில் தற்சமயம் இருக்கும் தோழர்களே நம் எதிர்கால பலம்,சொத்து. நம் சாதனைகளை பட்டியலிட்டு நோட்டிஸ்களாக/கையேடுகளாக அச்சிட்டு அவர்களுக்கு வழங்குங்கள்.ரித்திரம் போற்றும் சாதனைகளை புரிந்துள்ள ஒன்றுபட்ட நம் சங்கத்தின் சிறப்புக்களை விளக்குங்கள். மத்திய , மாநில நிர்வாகிகளை கூட்டத்திற்கு அழைத்து தீவிரமாக ஆலோசியுங்கள்  அமைப்பு நாளை கொண்டாடாத கிளையே தமிழ் மாநிலத்தில் இல்லை என்ற நிலை உருவாகட்டும்.
வாருங்கள் தோழர்களே  நம் சங்கத்தை பலப்படுத்துவோம்.
ஒன்றுபடுவோம் ,நம் .உறுப்பினர் எண்ணிக்கையினை அதிகப்படுத்துவோம்.
நம் நலம் காக்கும் சங்கம் . எதிர்காலம் நம் வசம்.
தோழமை வாழ்த்துக்களுடன்
க.முத்தியாலு
தமிழ் மாநில செயலர்