Tuesday, 28 January 2020

27-01-2020 அன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியலூர் கிளையில் , ஜெயங்கொண்டம், அரியலூர் பகுதிகளில் உள்ள VRS ல் செல்லும் தோழர்களுக்கு ஹோட்டல் லயா -இன்  குளிர்பதன அரங்கில் மிக அற்புதமான பணி நிறைவு பாராட்டு விழா நடத்தப்பட்டது. AIBSNLPWA சங்கத்தின் தமிழ் மாநில தலைவர் தோழர் V.ராமராவ் , தமிழ் மாநில செயலர் தோழர் R .வெங்கடாசலம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
நிகழ்ச்சிக்கு முன்பாக தொலைபேசி நிலைய வளாகத்தில் நம் சங்க கொடியை மாநில செயலர் ஏற்றி வைத்தார் அங்கு நிறுவப்பட்ட நம் சங்க கல்வெட்டினை மாநில தலைவர் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே திறந்து வைத்தார். சுவைமிகு மதிய உணவிற்குப் பின் 2-00 மணிக்கு நிகழ்ச்சி கோலாகலமாக துவங்கப்பட்டது.
இந்த கூட்டத்தின் அரிய நிகழ்வு என்னவென்றால் , VRS ல் செல்லும் 20 தோழர்கள் தங்கள் இல்லத்தரசிகளுடனும் மற்ற குடும்ப உறவுகளுடன் குதூகலத்துடன் கலந்து கொண்டதுதான். இந்த செயல்களை மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மிகவும் பாராட்டி பேசினார்கள் .
நம் திருச்சி மாவட்ட சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் தோழர் V.P. காத்தபெருமாள் , மாவட்ட செயலர் தோழர் T .செல்வராஜ் , மற்றும் மாவட்ட செயலர் தோழர் R .சுதர்சனன் ஆகியோர் வாழ்த்திப்பேசினார்கள் .
தங்கள் சங்கத்தில் இருக்கும் VRS ல் செல்லவிருக்கும் தோழர்களை AIBSNLPWA  வில் இணையும்படி அறிவுறுத்தி ,
அவர்களை வாழ்த்தி வழியனுப்பி  NFTE BSNL  சங்க மாநில செயலர் தோழர் நடராஜன் , மாவட்ட செயலர் S பழனியப்பன் , ஜெயங்கொண்டம் கிளை செயலர் தோழர் G. .செல்வராஜ் ஆகியோர் பேசினார்கள் .
VRS ல் செல்லும் தோழர்கள் சால்வை போர்த்தி, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள் .
அரியலூரில் JTO  மற்றும் SDE  ஆக  பணிபுரிந்து ஒய்வு பெற்ற தோழர் V..துரைராஜ் அவர்கள் தம்முடன் பல்லாண்டு காலம் பணிபுரிந்த தோழர்கள் VRS ல் செல்வதை அறிந்து , அவர்கள் அளித்து வந்த சேவையினை பாராட்டும் முகத்தான் அனைவருக்கும் சுவர் கடிகாரம் அளித்து பாராட்டி பேசினார்.
ஒய்வு பெறும் தோழர்களின் வாரிசுகள் சிலர் மேடையில் தங்கள் தந்தையை போற்றி, பாராட்டி பேசியது நெஞ்சை நெகிழ செய்தது. கிளை பொருளாளர் தோழர் ஷேக் தாவுத் நன்றி கூற விழா பிரியா விடை பெற்றது.


குடந்தையில் இன்று நடைபெற்ற குடந்தை அவுட்டோர் மற்றும் குரூப்ஸ் தோழர்களுக்கு நடைபெற்ற விருப்ப பணி ஓய்வு பாராட்டு விழா முதன்மை பொதுமேலாளர் திரு C.V.வினோத் அவர்கள் தலமையில் நடைபெற்றது. நமது சங்கத்தின் சார்பில் தோழர் R.ஜெயராமன், மா..செயலாளர் வாழ்த்திப் பேசினார்.
ஜெயராமன்.R
மா..செயலாளர்
AIBSNLPWA,
கும்பகோணம்.


அன்புத் தோழர்களே,
சமீப காலத்தில் நான் மேற்கொண்ட இடைவிடாத தொடர் சுற்றுப்பயணங்கள் காரணமாக  தொண்டை  தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு மிகுந்த வலியுடன் , பேச சிரமப்படுகிறேன். இரண்டு நாட்கள் பூரண ஒய்வு தேவை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளேன் . விரைவில் நலம் பெற்று மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.
தோழமை வாழ்த்துக்களுடன் ,
R . வெங்கடாசலம் ,
தமிழ் மாநில செயலர்.

Friday, 24 January 2020


 FLASH ...FLASH

OUR ANOMALY CASE 

Delhi High Court has dismissed the Appeal from Dept.  We just now received the following  message from our lawyer Sh. Ranvir Singh:

" The judgement was delivered today, the 24th January 2020 rejecting the appeal WP ( C ) No. 10019 of the Union of India.
2. The judgement is running in 20 pages. Second last para states clearly that the administrative instructions are invalid against the Statutory Provisions.
3. In the last para, eight weeks time is given to the respondents to make the payment In Terms of the Government Order of 1999".
....
CONGRATULATIONS TO ALL.
ANOTHER VICTORY FOR AIBSNLPWA.
...P Gangadhara Rao, GS.

Thursday, 23 January 2020


நேற்று 22 1 2020 புதன்கிழமை காலை பட்டுக்கோட்டை ராஜா மஹாலில் பட்டுக்கோட்டை கோட்ட பகுதியை சார்ந்த 33 வீஆர்எஸ்ல் செல்ல இருக்கின்ற தோழர்களுக்கு பாராட்டு விழா திரு பிரகலாதன் கோட்ட பொறியாளர் தலைமையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நமது முதன்மை பொது மேலாளர் பிஎஸ்என்எல் தஞ்சை மற்றும் உயரதிகாரிகள் பிஎஸ்என்எல் மற்றும் வீ ஆர் எஸ் எல் செல்லும் தோழர்கள் தங்களது குடும்பத்தினருடன் மற்றும் பட்டுக்கோட்டை பகுதியை சார்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் நமது தஞ்சை மாவட்ட பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலர் வீ. சாமிநாதன் மற்றும் பட்டுக்கோட்டை கோட்ட பகுதியை சார்ந்த நமது தோழர்களும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். நமது மாவட்ட செயலர் விழாவில் பங்குபெற்று வாழ்த்துரை வழங்கி வீஆர் எஸ் எஸ் செல்லும் தோழர்களை நமது ஓய்வூதியர்கள் சங்கத்தில் இணையுமாறு வேண்டுகோள் விடுத்தார். வீ ஆர் எஸ் எல் செல்லும் தோழர்களுக்கு நமது சங்கத்தின் மூலம் பொன்னாடைகள் போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். வாழ்க ,வளர்க, பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நல சங்கம்.
இப்படிக்கு,
தோழமை வாழ்த்துக்களுடன்,
வீ.சாமிநாதன்,
மாவட்ட செயலர்
தஞ்சாவூர்.


நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலில் இன்று 23.01.2020 நடைபெற்ற விருப்ப பணி ஓய்வு பாராட்டு விழாவில் நமது சங்க மாவட்டத் தலைவர் தோழர் இசக்கிமுத்து, மா..செயலாளர் தோழர் ஜெயராமன், மாநில .செயலாளர் தோழர் தனபாலன் மற்றும் நாகை வேலுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு பணி ஓய்வு பெறுகின்ற தோழர், தோழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கதராடை அணிவித்தனர். தோழர்கள் பெருமளவில் நமது சங்கத்தில் இணைந்துள்ளனர்
ஜெயராமன்.R
மாவட்ட அமைப்புச் செயலாளர்,
AIBSNLPWA,
கும்பகோணம்.
NAGAPATTINAM SECTION
KARAIKAL SECTION


Sunday, 19 January 2020


AIBSNLEA சங்கத்தின் சார்பில் VRSல் செல்லும்  உறுப்பினர்களுக்கு குடந்தையில் நேற்று (18.01.2020) நடைபெற்ற பணி ஓய்வு  பாராட்டுவிழாவில் நமது மாவட்ட அமைப்பச் செயலாளர் தோழர். R.ஜெயராமன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார். அது சமயம் நமது சங்கத்தின் சாதனைளை சொல்லி, இதுபோல் சாதிக்கின்ற, ஓய்வூதியர்கள் நலனில் அக்கறைக் கொண்ட AIBSNLPWA சங்கத்தில் பணிஓய்விற்குப் பிறகு தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரு வேண்டுகோளையும் வைத்தார். AIBSNLEA மாநில செயலாளர் தோழர். துரைஅரசன் மா..மைப்புச் செயலருக்கு கதராடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தார். அதன் பிறகு மாவட்டத்தலைவர் தோழர் இசக்கிமுத்து, மாவட்டச் செயலர் தோழர் ராமகிருஷ்ணன், மா.து.பொருளாலர் தோழர். வெங்கட்ராமன் இணைந்து முதன்மை பொதுமேலாளர் அலுவலகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரையும் தனிததனியாக சந்தித்து நமது சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்துள்ளோம். நம்மைப் பொறுத்தவரை நல்ல வரவேற்பு இருக்கிறது
மாவட்டச் செயலாளர்
AIBSNLPWA
கும்பகோணம்.