Thursday 26 September 2019

A MEETING WITH JOINT CCA
Sri. V. Gunasekaran, Joint. CCA, TN Circle, Ethiraj Salai is  to retire on 30-09-2019 on superannuation. Com M. Kannappan, CHTD Circle Treasurer, Com A.S. Vaidyanathan, Villiwakkam Branch Secretary, , Com A. Subramanian,  CHTD Circle  Executive Member,Saidapet Br. and Com S. Narasimhan, ADS, STR Divn, Com S. Sivasankaran, Asst. Divisional Secretary, STR Divn. had a nice meeting with him  in his chamber and wished him a very  happy, healthy and a long retired life.


Extra Increment Case was listed as number 59 under the caption
               "High on board for final disposal".
Our lawyer at 1030 mentioned that he had come prepared for final argument and it could be heard today itself as agreed on 5/9/19
But DOT  lawyer said that he was not prepared today for argument and wanted a few days time.

Then Hon Judge asked our lawyer "How much time you require for argument". Our lawyer replied that since there was  already Hon Kerala HC judgement, he might  require only 10 to 15 minutes.
Then Judge asked the DOT lawyer the same question and he replied that he might  also require the same time only
Ultimately Hon Judge adjourned the case to 03/10/2019 for final argument and disposal.
CHQ VP Com A Sukumaran and TN Circle ACS Com S Sundarakrishnan attended the court today.
RV C/S


தென்காசி கிளையின்  பொதுக்குழு கூட்டம்
தென்காசி மாவட்டம் தென்காசி கிளையின்  பொதுக்குழு கூட்டம்
24 .- 9 - 19  அன்று காலை 10 மணிக்கு தலைவர் திரு .V .பரமசிவன் அவர்கள்  தலைமையில் நடைபெற்ற்றது .தோழர் திரு .துரைராஜ் இறைவணக்கம் பாடினார் .கிளை செயலர் தோழர் S .செல்லப்பா வரவேற்புரை நிகழ்த்தினார் . பொருளாளர் தோழர் N . வேலாயுதம் வரவு செலவு ஆண்டறிக்கை சமர்ப்பித்து ஒப்புதல் வாங்கினார் .. பொதுக்குழு வரவு செலவு கணக்கு அறிக்கைக்கு ஒப்புதல் செய்தது . செயலர் கிளையின் அமைப்பு நிலைகளை விளக்கி பேசினார் .கிளையின் வளர்ச்சிக்கு அனைத்து உறுப்பினர்களும் உறுதுணையாக இருக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டார் கீழ்கண்ட தீர்மானங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் ஏகமனதாக நிறைவேறற்றப்பட்டது.
1 தென்காசி புதிய மாவட்டமாக மாறியதால்  AIBSNLPWA  தென்காசி கிளையைஉடனடியாக   தென்காசி மாவட்ட கிளையாக மாற்றிட வேண்டும்.
2. மதுரையில் 11-2-2015 அன்று   நடந்த சமாதான கூட்டத்தில் ஒப்புக்கொண்ட படி, உடனடியாகதென்காசி கிளையிலிருந்து இதுநாள்வரை திருநெல்வேலி கிளையில் இருக்கும் தென்காசி பகுதியை சேர்ந்த ஓய்வூதியர்களை கண்டிப்பாக தென்காசி கிளையில் சேரும்படி செய்யவேண்டும்.
3. தென்காசி பகுதியிலிருந்து புதிதாக பென்ஷனர்களை திருநெல்வேலி கிளையில் சேர்க்கக்கூடாது. இதுவரை புதிதாக சேர்ந்தவர்களுக்கான தென்காசிகிளைக்கான கோட்டா(பகுதி பணம் ) இதுவரை தரவில்லை அதனை உடனடியாக தரவேண்டும்.
4. தூத்துக்குடியில் நடக்கவிருக்கும் மாநில செயற்குழுவில் தென்காசி பகுதி நிர்வாகிகளை கலந்து கொள்ள அனுமதிக்கவேண்டும்.
5. தென்காசி கிளையில் புதிதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கான திருநெல்வேலி கிளைக்கான பகுதி பணம் அனுப்ப வேண்டாம்..
இவை தவிர பொது பிரச்சனைகளும் தீர்மானிக்கப்பட்டு,அது சம்பந்தமாக உயர் அதிகாரிகளுக்கு  கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டன. பொதுக்குழுவில் தென்காசி ,மேலகரம் ,செங்கோட்டை  ,கடையநல்லூர் ,புளியங்குடி ,வாசுதேவநல்லூர் ,சிவகிரி ,கடையம்,பாவூர்ச்சத்திரம்,சுரண்டை பகுதியிலிருந்து திரளான ஓய்வூதியர்கள்  கலந்து கொண்டார்கள்.
                                                                        
 இப்படிக்கு ,
 ( S .செல்லப்பா,  )
 செயலாளர் AIBSNL PWA ,
தென்காசி -627811



Wednesday 25 September 2019



தஞ்சை மாவட்ட AIBSNLPWA 
            கூட்டத்தின் தொகுப்பு. 
இன்று 14 9 2019 இரண்டாம் சனிக்கிழமை தஞ்சை மாவட்டத்தின் அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நல சங்கத்தின் மாதாந்திர பொதுக்கூட்டம் தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் காலை  பத்து முப்பது மணிக்கு தொடங்கி இனிதாக நடைபெற்றது. 150க்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியரும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். தோழர் மதுரை ராஜேந்திரன் மாவட்ட தலைவர் தலைமை ஏற்க தோழர்கள்  பிரான்சிஸ் சேவியர், ஃபிரின்ஸ், ஏகே தனபாலன், முறையே மாநில அமைப்புச் செயலர், மாவட்ட செயல் தலைவர், மாவட்ட கௌரவ தலைவர் முன்னிலையில் தோழர் வீ.சாமிநாதன் மாவட்ட செயலர் முன்னின்று கூட்டத்தினை நடத்தினார். முதலில் தமிழ் தாய் வாழ்த்து இசைத்திட தோழர் ஐயனார் இணைச் செயலர் வரவேற்புரை ஆற்றினார்.
அடுத்த நிகழ்வாக பெண் பொறியாளர் தோழியர் சுபஸ்ரீ  சென்னை பள்ளிக்கரணையில் சாலையில் அமைக்கப்பட்டிருந்த பேனரால் தாக்கப்பட்டு
உயிர்நீத்த தோழியருக்கு அஞ்சலி செலுத்தும் முகத்தான் ஒரு நிமிடம் மௌனம் காத்து இது போன்ற நிகழ்வுகளை இனி நடைபெறாமல் இருக்க பொதுமக்களாகிய நாமும் அரசாங்கமும் ஒரு சேர சேர்ந்து செயலாற்ற வேண்டிய பொறுப்புக்களையும் விளக்கி தலைவர் தனது உரையை நிறைவு செய்தார்.
தோழர்கள் பிரின்ஸ் பிரான்சிஸ் சேவியர் கே சந்தானகோபாலன் இருதயராஜ் சிவி தங்கையன் புருஷோத்தமன் மற்றும் மாவட்ட செயலர் கூட்டத்தில் உரையாற்றினார்கள். இன்றைய காலகட்டத்தில் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப நாம் நமது ஓய்வுஊதிய மாற்றம் மற்றும் தொடர்ந்து எம் ஆர் எஸ் பெறுவது நலிவுற்ற பிஎஸ்என்எல் நன்முறையில் இயங்க தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். மாவட்ட செயலர் பிரதம மந்திரி நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கிடவும் வருகின்ற மாநில செயற்குழு கூட்டத்தில் நாம் ஆற்ற வேண்டிய கடமைகளைப் பற்றியும் தனது உரையில் குறிப்பிட்டு நிறைவு செய்தார். அடுத்ததாக சென்ற மாதம் பணி ஓய்வு பெற்ற தோழர்களின் மணி விழாவும் இந்த மாதம் பிறந்தநாள் வாய்க்கப்பெற்ற தோழர் தோழியரின் பிறந்தநாள் விழாவும் ஐம்பதாவது திருமண நாள் விழா கண்ட தோழரின் திருமணநாள் விழாவும் சந்தன மாலை அணிவிக்கப்பட்டு கேக் வெட்டப்பட்டு வாழ்த்து கோஷங்களுடன் இனிதே நடைபெற்றது. நன்றி உரையினை தோழர் ராஜேஷ் நிகழ்த்திட மதிய இன்சுவை விருந்துடன் காலை நிகழ்வுகள் நிறைவேறியது.

மதியம் இரண்டு முப்பது மணிக்கு மாவட்ட செயற்குழுக்கூட்டம் ஆரம்பமாகி மாலை 5 மணி அளவில் முடிவுற்றது. 35க்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். அனைத்து கருத்துக்களையும் ஏற்றுக்கொண்டு முடிவாக ஒருமித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நமது மாவட்ட சங்கத்தின் அமைப்பு நிலையை பலப்படுத்தவும் பிரதம மந்திரிவெள்ள நிவாரண நீதிக்கு நன்கொடை வழங்கிடவும் வருகின்ற மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு நமது ஓய்வு ஊதிய மாற்றத்திற்கான நமது மாவட்ட சங்கத்தின் ஒத்துழைப்பை மாவட்டம் மாநில அகில இந்திய சங்கத்தின் வழிகாட்டுதலுக்கு இணங்க அளித்திடவும் ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாழ்க வளர்க அகில இந்திய பி எஸ் என் எல் ஓய்வூதியர் நல சங்கம்.





Monday 23 September 2019


தோழர்களே, பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு நமது மாநிலத்திற்கு இலக்கு  10,10,300/-    20.9.19 வரை சென்றது 69,910/-  மட்டுமே. இன்னும் பாதியை கூட நாம் எட்டவில்ல. இன்னும் ஓரிரு நாட்களே உள்ளன. எதிலும் முதல் இடத்தில் இருக்கும் நாம் பின்தங்கலாமா?   விரைந்து செயல் படுக என வேண்டுகிறேன்.
 மாநில செயலாளர்.


Sunday 15 September 2019

CUDDALORE DISTRICT  MEETING
கடலூர் மாவட்டம், கடலூர் பகுதி AIBSNLPWA _வின் மாதாந்திர கூட்டம் இன்று14.9.2019 தலைவர் தோழர்.சாந்தகுமார் தலைமையில் தோழர்.ரகோத்தமன் வரவேற்பு உறையற்றிட தோழர்கள் .P.ஜெயராமன் மாவட்ட தலைவர் R.அசோகன் மாவட்ட செயலர் ,K.சந்திரமோகன் மாநில துணை தலைவர், N.திருஞானம் உதவி தலைவர், .K.ரவீந்திரன்  செல்வரஸ்மெரி ஆகியோர் extra increment , pension revision ,CGHS ,medical allowance , PMNRF , பற்றி விளக்க உரை ஆற்றினர். தற்போது மாவட்ட சங்க ஆயுள் சந்தா உருப்பினர்கள் எண்ணிக்கை 832 ஆண்டு சந்தா உறுப்பினர் 4.  இன்றைய கூட்டத்தில் 20 தோழியர்கள் உள்ளிட்ட 75 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இன்றைய கூட்டத்தில் ஸ்நாக்ஸ் மற்றும் தேனீர்   
V.சேகர்  DGM .F (Rtd) அவர்கள் தனக்கு பேத்தி  பிறந்த நிகழ்வை ஒட்டி  வழங்கினர். தோழர். N.செல்வராஜ் நன்றி கூறினார்.

Saturday 14 September 2019

PONDICERRY  SEPTEMBER MONTH MEETING
புதுச்சேரி மாதாந்திர பொதுக்குழு கூட்டம்

14 -09-19 ராமகிருஷ்ணா பள்ளி வளாகத்தில் நடை பெற்றது . தலைவர் KR சிவகுமார் தலைமை தாங்கினார். மாநில அமைப்புச் செயலர் M.சாம்பசிவம் முன்னிலை வகித்தார். 60 பேர் கலந்து கொண்டனர். வருகிற மாநிலச் செயற்குழு பற்றியும்,  CGHS பற்றியும் கருத்துக்கள் கேட்கப்பட்டது.தோழர்கள் அன்பழகன், M. V.ராமகிருஷ்ணன், M.வைத்திலிங்கன் , N. பட்டாபி, S. ராமகிருஷ்ணன், M. தமிழரசன், N.முனுசாமி  , S.சுந்தரம், V- குணசேகரன், M.ரவணையா, S.சதாசிவம் ,M.சாம்பசிவம் ஆகியோர் தங்கள் சுருத்துக்களை கூறினர். மாநிலச் செயலரின் வேண்டுகோளுக்கிணங்க வெள்ள நிவாரண நிதியாக உறுப்பினர் களிடம் ரூ 100 கோரப்பட்டது, பொருளாளர் R.லோகநாதன் நன்றி கூறினார்.

Thursday 12 September 2019

CHQ has fixed the target to collect donation for PMNRF from our members @ 100/- The collected amount should be sent to CHQ accounts before the end of this September 2019 Month. The amounts fixed is shown above.

Tuesday 10 September 2019


Today (10-09-2019) We met CCA Sri. Chittaranjan Pradhan Ji and presented our Tamilnadu Executive Committee meeting to be held on 29th and 30th September 2019 in Tuticorin. The CCA has heartily accepted our invitation and has given his consent to grace the Meeting. During the brief meeting Com. V.Ramarao, Circle President, Com. R.Venkatachalam, Circle secretary and Com. S.Sundarakrishnan, Assistant Circle secretary were present.
With Fraternal Greetins,
R.Venkatachalam.
Circle Secretary.