Sunday 30 June 2019

தோழர்களே / தோழியர்களே ,
தவிர்க்க இயலாத குடும்ப நிகழ்ச்சி களில் பங்கு கொள்ள வேண்டியிருப்பதால் ஜூலை 1ம் தேதி முதல் 25நாட்களுக்கு மாநில சங்க பணிகளில் கவனம் செலுத்த இயலாது என்பதால் மாநில துணை செயலாளர்கள் தோழர்கள் 
S.சுந்தரகிருஷ்ணன் (கைபேசி எண் 94861 00188)
N.S.தீனதயாளன் (கை பேசி எண்   94449 79576
இருவரிடமும் தொடர்பு கொண்டு பிரச்சினைகளை   தெரிவிக்கவும். நன்றி.
 தோழமையுடன் 
 ஆர் வீ 
 மாநிலச்செயலாளர்

Friday 28 June 2019

IDA INCREASE
 FROM 
01-07-2019  Will be
 5.3%.
Now Total IDA will be 
 146.7%.

Wednesday 26 June 2019

We have given a letter to Tamilnadu Circle Administration seeking date and time to have a meeting with the Administration on behalf of our Pensioners Association to sort out some items.
Items for discussion are already sent to all District Secretaries Vide Circle Union Circular No 6 dtd 28-03-2019.
We have received a letter from the Administration which has been posted here.

Sunday 23 June 2019

On 22-6-19,  Com. P Gangadhara Rao GS along with other leaders FELICITATED Hon'ble Union Minister for Parliamentary Affairs Sri PRALHAD JOSHI JI at Hubli.
Com.PSR.

After congratulating him, we sought his help for our main demand of PENSION REVISION and he assured his help.
P Gangadhara Rao GS

L to R ... Coms. Shreedhar Pawar DS Hubli, Radhakrishna AGS CHQ, S L Pujar OS Hubli, Gandigawad VP Hubli, Shivananda VP KTK Circle,  Sri PRALHAD JOSHI JI, P Gangadhara Rao GS, Tarikeri member Hubli, R Changappa CS KTK Circle.

Saturday 22 June 2019


அன்புத்தோழர்கள் அனைவருக்கும் தோழமை வணக்கங்கள் .
9 மாத இடைவெளிக்குப்பின் பென்ஷன் அதாலத் கூட்டம் சென்னையில்       21 -06 -2019 அன்று நடைபெற்றது. நமது அமைப்பின் சார்பாக தோழர்கள்    D .கோபாலகிருஷ்ணன்,  விட்டோபன் ,ராமராவ் , நெல்லை அருணாசலம்,
V .ரத்னா , R . வெங்கடாசலம், காளிதாசன் சுந்தரகிருஷ்ணன் விக்டர்ராஜூ , தீனதயாளன் , STR நரசிம்மன் மற்றும்  மதுரை, கோவை ,தஞ்சை , சேலம், தூத்துக்குடி, புதுவை , கடலூர் , விருதுநகர் , சென்னை STR  மாவட்ட செயலர்கள் கலந்து கொண்டனர். இது  தவிர தனிப்பட்ட முறையில் பிரச்சினைகளை அனுப்பி இருந்த சில தோழர்களும் வந்திருந்தனர்.
நிர்வாகத்திலிருந்து PCCA , CCA , Dy CCA , மூத்த கணக்கதிகாரிகள் மற்றும் போஸ்டல் , கனரா வங்கி, ஸ்டேட் பாங்க், இந்தியன் வங்கி, ஐஓபி , BSNL தமிழ் மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர் .
மாநில , மாவட்ட சங்கங்களின் சார்பில் 155 பிரச்சினைகள் தெரிவிக்கப்பட்டன . வழக்கமான அறிமுகம் , வரவேற்புரை இல்லாமல் நேரடியாகவே பிரச்சினைகளை விவாதிக்க Dy .CCA முயன்ற போது, இது சரியான முறையல்ல என தோழர் DG கடுமையாக சுட்டிக்காட்டினார் . இதை ஏற்றுக்கொண்ட அந்த அதிகாரி பென்ஷன் கணக்கதிகாரி வரவேற்புரை நிகழ்த்துவார் என்றார்.நம்முடைய பரஸ்பரம் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டு கூட்டம்  துவங்கியது .
9 மாத இடைவெளி என்பது மிகவும் அதிகம் இது தவிர்க்கப்பட்டு குறுகிய மாத இடைவெளிகளில் அதாலத் நடத்தப்பட வேண்டும் என்று கூறிய நம் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டு அடுத்த அதாலத் கூட்டம் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறலாம் என்று நிர்வாகத்தின் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இந்த முறை விவாதங்கள் நல்ல முறையில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஆராய்ந்து விவாதிக்கப்பட்டன . இதற்கு முன் நடைபெற்ற அதாலத்துக்கள் போல் அல்லாமல் பெரும்பாலான அதுவும் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த குடும்ப ஓய்வூதிய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டள்ளது ஒரு நல்ல முன்னேற்றம். இருப்பினும் கீழ்மட்ட BSNL  அலுவலகங்களில்  இருந்து அனுப்பி வைக்கப்பட்ட விவரங்கள் முறையாக கையாளப்படவில்லை என்பதை நாம் சுட்டிக்காட்டினோம்.
அதே நேரத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் SAMPANN முறை மூலம் வழங்கப்படும் பென்ஷன் வழங்கும் முறை சிறப்பாக செயல்பட்டு வருவதாக நம் பாராட்டுதல்களையும் தெரிவித்தோம்.
கூட்ட முடிவில் பேசிய DY . CCA , நாம் மகிழ்வுடன் விடை பெறலாம் என்று கூறியதை நாமும் பிரதிபலித்தோம். இந்த நடைமுறையை கையாண்டால் ஓய்வூதியர் பிரச்சினைகள் தீர்வில்  நல்ல முன்னேற்றம் மற்றும் திருப்தி  ஏற்படும் என்பதை நாம் எடுத்துக்கூறினோம்.
ஒப்புக்கொண்டு உத்திரவிடப்பட்ட அனைத்து பிரச்சினைகளின் நகல்களை தரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
Web Master தோழர் மோகன் அதாலத் நிகழ்வுகளை விரிவாக படமெடுத்தார். அவை நம் இணைய தளத்தில் செய்யப்பட்டுள்ளுன.
தோழமை வாழ்த்துக்களுடன் ,
R .வெங்கடாசலம் ,
தமிழ் மாநில செயலர் .
பின் குறிப்பு : மாவட்ட செயலர்கள் அதாலத்திற்கு  அனுப்பியிருந்த தங்கள் மாவட்டம் சார்ந்த பிரச்சினைகளின் நகலை உடன் மாநில சங்கத்திற்கு அனுப்பி வைக்கவும்.







Friday 21 June 2019

Today (21-06-2019 ) Pension adalath was conducted in The Hall Of Inspiration at 1400 hours. Many of our comrades and leaders had attended the adalath and participated very actively. Among them, Comrades D.Gopalakrishnan, TS Vittoban, S. Arunachalam ,V,Rathna, V.Ramarao, R.venkatachalam,  Kalidasan, Victorraju, S.Sundarakrishnan N.S.Deenadhayalan, Vairamani and many others attended.  Photos taken on the occasion are posted here. Write up will follow soon.
                BSNL Officials
Pensioners
Bank Officials
DOT Officials
DOT Officials

Wednesday 19 June 2019

NEWS  FROM  TAMILNADU  CIRCLE

Complaint for deficiency in service by bank unresolved for a month?
 Visit Banking Ombudsman /bankingombudsman.rbi.org.in  
for help. Give a missed call to 14440.
All District Secretaries are requested to take this matter to their members to solve their problems if any.
RV,
Circle Secretary.

Cuddalore Sends Fani Relief Fund to Odisha
A  sum of RS.21000/- ( Rupees Twenty-one thousand)  collected from our comrades has been remitted to Odisha Fani. Cyclone relief fund on 17.6.2019 by  Cuddalore District AIBSNLPWA branch (Tamilnadu circle)..
N.Thirugnanam for DIST Assn.

Tuesday 18 June 2019

1.   Our case was listed as 79 in court 2 division bench. It was published in the website that the following final disposal cases (46 to 79) are adjourned due to want of time and appropriate dates will be announced by the court. Accordingly the court announced the next hearing date as 16/7/19.
Anyhow our junior lawyer tried to pre pone the date but it didn't succeed. DoT counsel was also absent today.
Circle President Com.Ramarao and ACS Com.Sundarakrishnan attended the court.

2.  COURT CASE

Today our case for grant of pension @ 50% of LPD for all BSNL pensioners  retired prior to 1.1.2006 was listed as Case No. 50. 
But though some  other cases were heard,  our case was far below and hence not taken up  for hearing!  

 Advocate Sri. Sreeraj intimates that he will inform us the next date. 
The other case for 78.2 arrears from 1.1.2007 is listed for 21st instant.  Cannot say what will happen on that day.
... PSR ...



Sunday 16 June 2019

Our CHQ Vice president Com.D.Gopalakrishnan has prepared a very good memorandum to the Finance Ministry to be sent before this budget session starts. I have posted it here. On behalf of Com DG, I  request all our members to send your views, opinions and feed back to me on or before 18-06-2019 ( Tuesday). I will compile all and send to com DG. You can send on whatsapp to my number 
80560 66995 . or e-mail to aibsnlpwatncircle@gmail.com immediately.

Please consider whether we can send the following on behalf of our association to finance ministry

There is a very strong feeling among all the Pensioners throughout the country that pension is to be exempted from income tax for the following reasons

Hon Supreme court time and again declared in various judgements that pension is akin to property rights

NDA government led by Shri Modiji abolished wealth tax in 2015-16 budget foregoing more than 1,000 crore rupees to the exchequer. Earlier it was only 1 percent above Rs.30 lakhs.

In 2017-18 budget income tax to corporates was reduced from 30 percent to 25 percent whose turnover was less than Rs. 50 crore. By this way Government lost a revenue of Rs.7000 crores. It is proposed to increase it to Rs.250 crores. It was told that it was done with a view to increase the employment generation.

Total pension expenditure for the Central government in 2017-18 was Rs.1,31,201 crores which include other retirement benefits also.  Actual pension expenditure might be Rs.80,000 crores. On an average if 10 percent is taken if the government abolishes tax on pension the government may forego only Rs.8000 crores.

Pension amount is spent on consumer goods which generates demand and in turn helps for more production and generate more employment.

Further, the savings of pensioners in banks and post offices helps investment for the industries which in turn helps employment generation.

If NDA government led by Shri Modiji abolish income tax on pension it shall earn the goodwill of nearly 15 crore people consisting pensioners and their family members.

We would request for serious consideration of the above proposal  ".

Please act swiftly and send your opinion through whatsapp or e-mail as mentioned above.

Wednesday 12 June 2019

நமது சங்கத் தலைவர்கள் மத்திய அமைச்சருடன் பேச்சு வார்த்தை
    
MTNL & BSNL  பென்சனர் சங்க கூட்டமைப்பு (CBMPA) தலைவர்கள் M - K. பக்சி, S.S. நந்தாகிசன் சிங் ஆகியோர் 11.06.2019 அன்று மத்திய கனரக தொழிற் மற்றும் பொதுத்துறை  நிறுவன அமைச்சர்  மாண்புமிகு அரவிந் கன்பத் சவந்த் அவர்களை சந்தித்தனர்.அமைச்சர் பொறுப்பேற்றதற்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர். BSNL, MTNL -ல்பென்சன் மாற்றம் குறித்து அவரிடம் விவாதித்து இக்கோரிக்கை மீது தீர்வு காண தனதுஉதவியை நல்கிட கோரினர்.பென்சன் மாற்றம் குறித்து பென்சன் மற்றும் பென்சனர்நலத்துறைஅனுப்பிய கேள்வி மற்றும் ஆலோசனைகளுக்கு DOT - பதில் தரதயங்குவதை எடுத்துக் காட்டினர்அவற்றை பரிவுடன் கேட்ட அமைச்சர் இது விசயமாகதான்  தலையிட்டு உதவி செய்வதாக உறுதியளித்தார்.மேலும் இது சம்பந்தமாக,தேவைப்பட்டால் தொலை தொடர்பு அமைச்சரிடம் பேசுவதாகவும் கூறினார்மேலும்அவர் கூறுகையில் BSNL & MTNL -ல்  நிலவும் சூழ்நிலைகளைக்கு ஒரு தீர்வு காணவும்அரசு மிகுந்த கவனத்தை செலுத்த உள்ளது என்றார்.
BSNL / MTNL - பென்சனர்களுக்காக தன் கதவு எப்போதும் திறந்திருக்கும் என்ற மனம்நிறைந்த பேச்சோடு கூட்டம் முடிந்தது.
மத்திய சங்க செய்தி தமிழாக்கம்அன்பழகன்மாவட்டச் செயலர்புதுச்சேரி )

Tuesday 11 June 2019

Extra Increment Case has been 
postponed 
to 
18-06-2019.

Sunday 9 June 2019


பி எஸ் என் எல் ஓய்வூதியர் நல சங்கம் தஞ்சை மாவட்ட முப்பெரும் விழா நிகழ்வு பற்றிய தொகுப்பு.
இன்று 8 6  2019 இரண்டாம் சனிக்கிழமை மாதாந்திர பொது கூட்டத்துடன் முப்பெரு விழாவும் தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் இரண்டு மணி வரையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 300 க்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும் கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.
இன்றைய முப்பெரும் விழா 1. தஞ்சை ஓய்வூதியர் கதிரவன் வெள்ளி விழா இதழ் வெளியீடு.   2. 1968 செப்டம்பர் 19 போராட்டத்தில் களம் கண்ட வேங்கைகளுக்கு பாராட்டு விழா   3. அகவை 70 நிறைவு அகவை 75 நிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழாவுடன் இந்த மாதம் ஓய்வுபெற்ற 7 உறுப்பினர்களின் மணி விழா மற்றும் இந்த மாதம் பிறந்தநாள் அமையப்பெற்ற தோழர் தோழியர்கள் பிறந்தநாள் விழா ஆகியவை இன்றைய முப்பெரும் விழாவின் முக்கிய அம்சங்கள்.
இன்றைய விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தோழர் எஸ் அருணாச்சலம் மத்திய சங்க உதவி பொதுச் செயலாளர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட செயலர் அழைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார். முப்பெரும் விழாவின் முதல் நிகழ்வாக நமது சங்க கொடியினை தோழர் எஸ். அருணாச்சலம் நமது சிறப்பு அழைப்பாளர் தோழர் தோழியர்களின் மிகுந்த ஆரவார கோஷத்தோடு தொலைபேசி வளாகத்தின் நுழைவாயிலில் ஏற்றி வைத்தார்கள்.
 முதல் நிகழ்வாக தோழியர் சாரதா சந்தானகோபாலன் கடவுள் வாழ்த்து இசைத்திட தோழர் கே. அய்யனார் இணைச் செயலர் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட செயலர் தோழர் வீ. சாமிநாதன் நமது  பொதுச்செயலாளர் மத்திய சங்கம் தோழர் .முத்தியாலு பூர்ண உடல் நலம் பெற்று திகழ்வதற்கான கூட்டு பிரார்த்தனை அனைத்து உறுப்பினர்களின் பிரார்த்தனையோடு நிகழ்த்தினார்.
தோழர் எஸ் அருணாச்சலம் சிறப்பு அழைப்பாளர் தஞ்சை ஓய்வூதியர் கதிரவன் வெள்ளிவிழா இதழை வெளியிட அதனை தோழர் .கே. தனபாலன் கௌரவத் தலைவர் முதல் இதழை பெற்றுக்கொள்ள அனைத்து கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களின் கர கோஷத்தோடு நிகழ்வு நடைபெற்றது. தோழர் வீ.சாமிநாதன் மாவட்ட செயலர் ஓய்வூதியர் கதிரவன் வரலாற்றையும் அது சம்பந்தப்பட்ட செய்திகளையும் பிரதம விருந்தினரான தோழர் எஸ். அருணாச்சலம் அவர்களை வரவேற்றும் சிறப்பானதொரு உரையாற்றி அமர்ந்தார். அடுத்து தோழர் பிரின்ஸ் செயல் தலைவர் தோழர் பிரான்சிஸ் சேவியர் மாநில அமைப்புச் செயலர் தோழர் டி முருகேசன் மாநில உதவிப் பொருளாளர் ஆகியோர் விழாவினை வாழ்த்தி உரை நிகழ்த்தினார்கள்.

அடுத்து 19 9 2018 போராட்டத்தில் களங்கண்ட வேங்கை களுக்கும் அகவை 70 மற்றும் 75 நிறைவு பெற்ற தோழர்களுக்கும் தோழிகளுக்கும் முறையே 1968 போராட்டத்தில் பங்குபெற்று சிறப்பித்த உறுப்பினர்களுக்கு பாராட்டு பத்திரம் மற்றும் பொன்னாடை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.  அகவை 70 நிறைவு பெற்றவர்களுக்கு பொன்னாடையும் அகவை 75 நிறைவு பெற்றவர்களுக்கு பொன்னாடையும் ஷில்டும் வழங்கப்பெற்று கௌரவிக்கப்பட்டார்கள். கிட்டத்தட்ட 170க்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும் இன்றைய முப்பெரும் விழாவில் கவுரவிக்கப்பட்டார்கள். இந்த காட்சி அங்கத்தினர்களின் கரகோஷத்துடன் கண்கொள்ளாக் காட்சியாக அமையப் பெற்றது. தவிரவும் ஏழு ஜோடிகளுக்கு மணி விழாவும் 15 க்கும் மேற்பட்ட பிறந்தநாள் கண்ட தோழர் தோழியர்களுக்கும் வாழ்த்து கோஷங்கள் முழங்கிட சந்தன மாலை அணிவிக்கப்பட்டு கேக் வெட்டப்பட்டு வெகு சிறப்பாக இனிய முறையில் கொண்டாடப்பட்டது.
அடுத்து பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு அழைப்பாளர் தோழர் எஸ் அருணாச்சலம் உதவிப் பொதுச் செயலர் மத்திய சங்கம் சிறப்பானதொரு நிறைவுரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் தற்போதைய நமது சங்கத்தின் செயல்பாடுகள் எம் ஆர் எஸ் இன் இன்றைய நிலை மற்றும் நமது pension ரிவிஷன் போராட்ட நடைமுறைகள் அதை நாம் எப்படி போராட்டம் நடத்தி அடைய இருக்கிறோம் அதைப் பற்றிய நமது நிலை என்ன வருங்காலங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பன போன்ற பல அரிய செய்திகளை விளக்கமாக கூறி நமது தஞ்சை மாவட்ட சங்கத்தின் சிறப்புகளை சிலாகித்து பேசி தனது வாழ்த்துகளுடன் உரையை சிறப்பாக ஆற்றி நிறைவு செய்தார். இன்றைய முப்பெரும் விழாவில் அண்மையில் ஒரிசாவில் பெரும் இழப்பை ஏற்படுத்திய பானிப்புயல் நிவாரண நிதியாக கூட்டத்தில் பங்குபெற்ற தோழர் தோழியர்கள் இடமிருந்து ரூபாய் 10000 ஆயிரம் சுமார் 10 நிமிடங்களிலேயே வசூலிக்கப்பட்டது பெரும் சாதனை. விரைவில் மாநில சங்கத்திற்கு இந்த தொகை அனுப்பி வைக்கப்படும். நிறைவாக தோழர் கே. சீனு பொருளாளர் நன்றி நவில முப்பெரும் விழா இனிதே நிறைவுற்றது. பிறகு தஞ்சை பாரம்பரிய சிறப்பு மதிய விருந்துடன் விழா இனிதே நிறைவுற்றது.
வாழ்க பி எஸ் என் எல் ஓய்வூதியர் நல சங்கம்.
வளர்க பி எஸ் என் எல் ஓய்வூதியர் நல சங்கம்.

                            Please click the above Video clipping
                            to view all events of Mupperum Vizha
                             with audio. Switch on your sound boxes.