Wednesday, 24 February 2021
ஓய்வூதியம் மற்றும் மற்ற பயன்களை பெறுவதற்கு உண்டான வழிமுறைகளை மேற்கொள்வதற்கு முன் ஒரு ஓய்வூதியர் மரணமடைந்து விட்டால் , ஓய்வூதிய தீர்வுகளை அடைவதற்கு  மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை DOP &PW  (ஓய்வூதியர் மற்றும் ஓய்வூதியர் நலன் இலாகா) விளக்குகிறது
 


Tuesday, 23 February 2021

 

சிறப்பு கூட்ட நிகழ்வுகள் தொகுப்பு.

இன்று 23 02 2021 செவ்வாய்க்கிழமை மாலை  மூன்று முப்பது மணிக்கு தஞ்சை தந்தி அலுவலக வளாகத்தில் சிறப்பு கலந்துரையாடல் கூட்டம்  25கும் மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும் பங்கு பெற்று சிறப்பித்தனர். கூட்டத்தின் முக்கிய ஆய்படு பொருள் வருகின்ற உலக மகளிர் தினத்தை இந்த கொரானா காலத்தில் எப்படி கொண்டாடலாம் என்பது பற்றி கருத்து கேட்பு கூட்டம்.

தோழர் இருதயராஜ் தலைமையேற்க செயலர் சாமிநாதன் முன்னின்று நடத்த மாநில அமைப்புச் செயலர் பிரான்சிஸ் சேவியர் முன்னிலை வகித்தார். தோழியர் சாரதா சந்தான கோபாலன் கடவுள் வாழ்த்து இசைத்திட தோழர் சந்தான கோபாலன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலர் தலைவரின் முன்னுரைக்கு பிறகு உறுப்பினர்களின் கருத்துக்களை பதிவிட கோரினார். உறுப்பினர்கள் சந்திரகுமாரி,  மல்லிகா,  சுகுமாரன்,  பத்மினி , லைலா பானூ, செந்தாமரை,  கைலாசம்,  என் பாலகிருஷ்ணன்2,  அய்யனார்,  நடராஜன்,  முகிலன்,  செல்வராஜ்,  சந்தானகோபாலன் ஆகியோர் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.  அனைவரது கருத்துக்களையும் கேட்டறிந்து முடிவாக கீழ்க்கண்ட முடிவுகள் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

1.    தோழியர்கள் சந்திரகுமாரி, மல்லிகா சுகுமாரன், பத்மினி, லைலா பானு டி உஷா, பொன்னழகு, செந்தாமரைச் செல்வி ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டது. தோழர் அய்யனார் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

2.    சிறப்பு அழைப்பாளராக GM,  BSNL  தஞ்சை அவர்களை அழைப்பது என முடிவு செய்யப்பட்டது.

3.    21.03.2021. மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் மகளிர் தினத்தை கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.

4.    மாதாந்திர கலந்துரையாடல் நிகழ்வுகளை பகல் 10-11 மணிக்குள் நடத்தி பிறகு 11 மணி முதல் ஒரு மணி வரை உலக மகளிர் தினத்தை கொண்டாடுவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

5.    முதன்மை விருந்தினராக ஒரு பெண் மருத்துவரை அழைப்பது எனவும் அவரது சிறப்பு உரைக்குப் பிறகு கலந்துரையாடல் செய்திடவும் முடிவு செய்யப்பட்டது.

6.    பகல் 11-12 மணிக்குள் மகளிர் தினத்திற்கான சிறப்பு பட்டிமன்றத்தை நடத்திடவும் முடிவு செய்யப்பட்டது.

7.    நன்கொடை கட்டாயமில்லை ஆனால் கொடுப்பவர்களுக்கு தடையும் இல்லை என முடிவு செய்யப்பட்டது.

8.    25-02-2021 அன்று காலை 11மணிக்கு மகளிர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தோழர் சீனு பொருளாளர் நன்றி நவில, கூட்டம் இனிதே முடிவுற்றது. இடையில் அனைவருக்கும் தேனீர் விருந்து வழங்கப்பட்டது.


Sunday, 14 February 2021

 


 

AIBSNLPWA கடலுார் பகுதி மாதாந்திர இரண்டாம் சனிக்கிழமை கூட்டம் தோழர்.சாந்தகுமார். தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.
கோரானா தொற்று காரணமாக 2020 மார்ச் மாத கூட்டத்திற்கு பிறகு
நடத்தப்பட்ட இந்த வருடத்தின் முதல் கூட்டம் இது. 25 தோழியர்கள் உள்பட 100 தோழர்கள் கலந்து கொண்டனர். மேலும் தலைவர் சாந்தகுமார் அவர்களின் 67. வது பிறந்தநாளையொட்டி Birthday cake  வெட்டி தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அவருக்கு அனைத்து தோழர்களும் தெரிவித்துக் கொண்டனர்.
 
கூட்டத்தில் பகுதி செயலர் தோழர்.G.அசோகன் கடந்த கூட்டத்திற்கும் இன்றைய கூட்டத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த நம் சங்கம் குறித்த அனைத்து தகவல்களையும் கூறினார்  மாவட்ட தலைவர் ழர்.P.ஜெயராமன்,
மாநில துணை தலைவர் தோழர்.K. சந்திரமோகன் சிறப்புரை ஆற்றினார்கள் நம் சங்க அலுவலகத்திலேயே life certificate, GCHS, ID CARD, MEDICAL CARD
உறுப்பினர்களுக்கு பெற்று தருவதற்கான அத்துணை பணிகளையும் மிக சிறப்பாக செய்து வருகின்ற தோழர்கள் .மகேஷ், N.நாகராஜன்,D.ராஜேந்திரன்.KCM மற்றும் நந்தகுமார் ஆகியோரை பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். Smt.சுந்தரி (Rtd CAO) செல்வர்சு மேரி V.விஜயலட்சுமி, k.சீனிவாசன் ஆகியோரும் நம் அனைத்து தலைவர்களும் நம் ஓய்வூதியர் நலம் காத்திட ஆற்றிடும் பணிகள் குறித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து உரையாற்றினர்.
சாலை விபத்தில் உயிர் நீத்த JTO  தோழர். சட்சிதானந்தத்தின்
மனைவிக்கு நம் சங்க உறுப்பினர்கள் வழங்கிய நன்கொடை
தொகை ரூ.20000/ நம் சங்க சார்பில் அவருடைய மனைவி நர்மதா விடம் வழங்கப்படுகிறது என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இது நம் சங்கத் தோழியர்கள் ராஜம் (Sde) சென்னை, ராஜம் JTO சென்னை  விஜயலட்சுமி அவர்களும் தோழியர் நர்மதா விற்கு நேரடியாக நன்கொடை தொகையை அனுப்பியுள்ளனர்.
இன்றைய கூட்டத்தில் தோழர். P.சிவகுமாரன் , தோழர் .K இளங்கோ அவர்களும் உரை ஆற்றினார்.
இன்றைய கூட்ட செலவுகள் அனைத்தையும் தலைவர் சாந்தகுமார் அவர்களே ஏற்று செய்துக் கொடுத்தார் இறுதியாக பொரு லாளர்.தோழர் N.S  நன்றி உரை கூறிட கூட்டம் இனிதே முடிவடைந்தது. இந்த செய்தியை மாநில web site யில் வெளியிடும் படி அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறேன்.நன்றி .