Saturday 30 March 2019

Our Association has sought for a meeting with CGM Tamilnadu and also sent a Grievance List to CGM TN. On receipt of our grievance letter, he has sent to respective SSAs seeking detailed report from those SSAs. 



Friday 29 March 2019

The Price Index stood at 309 points. So
will be
Total IDA will be 141.4%


   AIBSNLPWA meeting of Nagercoil District  was held on 26th March Tuesday  at Kasturba Mathar Sangam at 1430 hrs. It  was celebrated as  International Womens' Day.  Ms.Malarvathy,Writer spoke. More than 100 members participated including 15 ladies.
Photos taken on the occasion are posted here .
With Fraternal Greetings,
Chelliah
DS.


Thursday 28 March 2019

சென்னை CCA அலுவலகத்தில் ஜாயிண்ட் CCA அதிகாரியாக பணி புரிந்து வந்த திரு நா .மோகன் அவர்கள் இம்மாத இறுதியில் பணி ஒய்வு பெறுகிறார். நாம் கொண்டு சென்ற பல ஓய்வூதியர் பிரச்சினைகளை மிகவும் சாதகமாக முடித்துக் கொடுத்துள்ளார். பிரச்சினைகளை மனிதாபிமானத்துடன் அணுகி தீர்த்து வைத்து எல்லோர் பாராட்டையும் பெற்ற அதிகாரி. அவருக்கு நம் சங்கத்தின் சார்பாக நன்றி பாராட்டி வாழ்த்து வழங்க அகில இந்திய துணைத்தலைவர் தோழர் D கோபாலகிருஷ்ணன் , அகில இந்திய துணைப் பொதுசசெயலர் தோழர் கே .முத்தியாலு , தமிழ் மாநில தலைவர் தோழர் வி.ராமராவ் , தமிழ் மாநில செயலர் தோழர் ஆர்.வெங்கடாசலம் , சென்னை STR கோட்ட செயலர் தோழர் எஸ்.சுந்தரகிருஷ்ணன் ஆகியோர் அவர் அறைக்கு வந்தனர் . 
அப்போது CCA  திரு சித்தரஞ்சன் பிரதான் அவர்களும் அங்கு வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். Dy . CCA  திரு சங்கர பாண்டி அவர்களும் உடனிருந்தார் .  தோழர் DG சால்வை அணிவிக்க மற்ற தலைவர்கள் நம் சங்க பெயர் பொறிக்கப்பட்ட  கடிகாரத்தை அன்பு பரிசாக அளித்தார்கள். நன்றியுடன் பெற்றுக்கொண்ட அந்த அதிகாரி நம் சங்கத் தலைவர்களின் அணுகு முறையினை வெகுவாக பாராட்டி தன் இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்தார் .   




Wednesday 27 March 2019



     17-03-2019 அன்று நமது மாநில செயற்குழு முடிந்தவுடன் சுமார் 30 க்கு மேற்பட்ட தமிழ்மாநில மற்றும் சென்னை தொலைபேசி மாநில சங்க நிர்வாகிகள் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் இருக்கும் கஜா புயலினால் மிகவும் பாதிக்கப்பட்ட கொறுக்கை எனும் சிற்றுரில் இருக்கும் திருவள்ளுவர் அருள்நெறி நாடு நிலைப்பள்ளி சென்றார்கள் . தரை மட்டமாகி போன அந்த பள்ளியை நம் சங்கம் தேர்ந்தெடுத்து ௫.௫௦ லட்சம் ரூபாயில் இடிந்துபோன அந்த பள்ளி கட்டிடங்களை சீரமைத்து மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்கள் . அப்போது பிடிக்கப்பட்ட சில படக்காட்சிகள்
    நம் சங்கத்தின் பெயரும் சின்னமும் பொறிக்கப்பட்ட 
நுழைவு வாயிற் கதவு 
நிகழ்ச்சிகளை படமெடுக்க , தகவல் சேகரிக்க வந்த 
ஊடகவியலார்மற்றும் காவலர் 
முதல் வகுப்பில் பயிலும் சிறுமி அபர்ணா நம் அனைவருக்கும் திக்கல், தடங்கல் , அச்சம் , மிரட்சி எதுவுமின்றி மிக சரளமாக நன்றி உரைத்தது நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக இருந்தது 
                                    நன்றி பெருக்கோடு நால்வர் பாடும் பாட்டு
              மாணவ மாணவிகளுக்கு எழுத்து பொருட்கள் வழங்கப்பட்டன