Tuesday, 14 January 2020


தஞ்சையில் பொங்கல் கொண்டாட்டம்.
இன்று 14 1 2020 செவ்வாய்க்கிழமை மதியம் 12 30 மணி அளவில் தஞ்சை அன்பாலயம் மனநலம் குன்றியோர் காப்பகம் சென்று அங்குள்ள 50க்கும் மேற்பட்ட மனநலம் குன்றிய தோழர் தோழியர்கள் உடன் இந்த வருடத்திய பொங்கல் விழாவை மனநிறைவுடன் கொண்டாடி வந்தோம். முதலாவதாக முறைப்படி பொங்கல் பூஜை செய்து பிரார்த்தனை செய்தோம். பிறகு அங்குள்ள தோழர் தோழியர்க்கு சக்கரை பொங்கல், வெண்பொங்கல்,  காய்கறி பதார்த்தங்கள், சாம்பார், வாழைப்பழம்,  கரும்பு இவைகளை முறைப்படி பரிமாறி விருந்தளித்து அவர்கள் முகம் மலர ஆனந்தமாக இந்த வருட பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடி வந்தோம். இது போன்ற நிகழ்வுகள் கடந்த 18 To 20 ஆண்டுகளாக தஞ்சை பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நல சங்கத்தினரால் திறம்பட நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு காரணமாக அமைந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியினை சங்கத்தின் சார்பாக சமர்ப்பிக்கின்றோம். நன்றி, வணக்கம்.

No comments:

Post a Comment