Sunday 30 July 2017


 AIBSNLPWA தமிழ் மாநில தலைவர் தோழர்.V .ராமராவ்  அவர்கள் பலவித சமூக அமைப்பு நிறுவனங்களில் தலைவராக, செயலாளராக இருந்து கொண்டு பொதுமக்கள் மேன்மைக்காக அரும்பாடு பட்டு வருகிறார். சமீபத்தில் தமிழக மின்வாரியம் நடத்திய மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் நம் தலைவர் பங்கு கொண்டு மிக நன்றாக பேசியுள்ளார். அவர் பேசியுள்ள விபரங்கள் தமிழ் ஹிந்து மற்றும் பல தினசரிகளில் வெளியாகியுள்ளன. அதில் ஒரு செய்தி உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.

மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்பாடு செய்திருந்த மக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பேசியவர்கள் வலியுறுத்தினர்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின்தொடர மைப்புக் கழகம் மற்றும் மாநில மின்சுமை பகுப்பு மையம் ஆகியவை தாக்கல் செய்துள்ள மின் கட்டண உயர்வு குறித்த மனுக்கள் மீது பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் சென் னையில் நேற்று நடந்தது.

மின்நுகர்வு அதிகரிப்பு

இந்தக் கூட்டத்தில் மக்கள் விழிப்புணர்வு சங்கம் (நங்கநல்லூர் கிளை) செயலாளர் வி.ராமா ராவ் பேசியதாவது:

கடந்த 2015-ம் ஆண்டுதான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது நிலுவையில் உள்ள மின் கட்டணமே நுகர்வோருக்கு பெரும் சுமையாக உள்ளது. எனவே, மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தக் கூடாது. சென்னை போன்ற நகரங்களில் வசிக்கும் மக்கள் திருட்டு பயம், காற்று மாசுபாடு உள்ளிட்ட காரணங்களால் கோடைக்காலத்தில்கூட இரவு நேரங்களில் வீட்டின் ஜன்னல்களை மூடி தூங்க வேண்டியுள்ளது. இதனால் வீட்டுக்கு ஒரு ஏசி பொருத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மின்நுகர்வு அதிகரித்துள்ளது. எனவே, தற் போது 2 மாதங்களுக்கு 500 யூனிட் வரையிலான மின்சாரத்துக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை 750 யூனிட் வரை உயர்த்த வேண்டும். தற்போது, நகர்ப்புறத்தில் ஒரு வீட்டுக்கு நாளொன்றுக்கு 8.22 யூனிட் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதை 12.5 யூனிட்டாக வழங்க வேண்டும்.

ரூ. 1,000 கோடி இழப்பு

ஜிஎஸ்டி சட்டம் அமல்படுத் தப்பட்டுள்ளதால் நிலக்கரி கொள் முதல் விலை குறைந்துள்ளது. இதனால் மின்னுற்பத்திக் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 6 முதல் 7 பைசா குறைந்துள்ளது. இந்தப் பலனை நுகர்வோருக்கு வழங்க வேண்டும். அண்மையில் வீசிய வார்தா புயலால் மின் கம்பங்கள், வயர்கள் உள்ளிட்டவை சேதம் அடைந்தன. இதனால், மின் வாரியத்துக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. எனவே சென்னை, புறநகர் பகுதிகளில் உயர் மற்றும் குறைந்த மின்னழுத்த கேபிள்கள், வயர்களைப் பூமிக்கடியில் பதிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

26 சதவீத மின் இழப்பு


உற்பத்தி செய்யப்பட்ட மின் சாரத்தை திறம்பட கொண்டு சென்று விநியோகிப்பதில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக டான் ஜெட்கோ நிறுவனத்துக்கு 2011-12-ம் ஆண்டில் 17,583 யூனிட் மின்சாரமும், 2014-15-ல் 20,966 யூனிட் மின்சாரமும் வீணானது. வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்த மின் இழப்பு 10 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. ஆனால், நம் நாட்டில் 26 சதவீதமாக உள்ளது. இந்த இழப்பைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment