Friday 27 December 2019

மதுரை மா நகரில் 22-12-2019 , மாவட்ட AIBSNLPWA சங்கம் ஓய்வூதியர் தின விழாவை ஒரு பிரமாண்டமான திருவிழாவாக நடத்தியது. ஓய்வு பெற்ற நம் ஓய்வூதியர்கள் , அகவை 70 ஐ கடந்தவர்கள் சுமார் 320 பாராட்டி கௌரவிக்கப்படுவார்கள் என வலைத் தளத்திலும், வாட்ஸ் அப் மூலமாகவும், போன் அழைப்பு மூலமாகவும், நேரிலே கண்டபோதும் நினைவுறுத்தினார்கள் .சுமார் 10-30 மணிக்கு விழா துவங்கியது. 
இறை வணக்கப்பாடலை திருமதி கல்யாணி சுந்தரேசன் அவர்கள் திருக்குறள் பொது மறை பண் பாமாலையாக பாடியது மிகவும் போற்றுதற்குரியது.  
சமீப காலங்களில் மறைந்த நெல்லை அருணா மற்றும் மாவட்ட சங்க தோழர்களின் மறைவிற்காக ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தலைவர் தோழர் தர்மராஜன் அஜெண்டாவை அறிவித்து அவையோரின் ஒப்புதல் பெற்றார் .பிறகு தமது தலைமையுரையில் ஓய்வூதியர் தினத்தின் அருமை, பெருமைகளையும் , அதை ஏன் கொண்டாடுகிறோம் என்றும் எடுத்துக் கூறினார்.
மாவட்ட செயலர் தோழர் வீராச்சாமி  வந்திருந்த  அனைவரையும் வரவேற்று பேசினார். சரித்திர வரலாறு மிக்க நாள் மேலும் 320 ஓய்வூதியர்களை ஒன்றாக வவைத்து ஒரே விழா மேடையில் தலைவர்களை கொண்டு பாராட்ட செய்து , பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்துவது இதுவே முதன் முறையாகும். இது போல் இனி வருமா என்பதுவும் யாரும் உறுதியாக கூற முடியாத நிகழ்வு இது என்று பெருமை யுடன் பேசினார்.
முதன்மை பொது மேலாளர் நம் சங்கத்தை பாராட்டி " நான் ஜீன் 2020ல் ஒய்வு பெற்றபின் ஜூலை மாதம் முதல் உங்கள் சங்கத்தில் இணைந்து பணியாற்றுவேன் " என்றார் . துணை பொது மேலாளர் திரு சந்திரசேகரன் அவர்கள் பேசும்போது " விரைவில் உங்களுடன் இணைவேன் என்னால் இயன்ற உதவிகளை சங்கத்திற்கு செய்வேன்." என்று கூறினார் . மற்றோரு துணை பொது மேலாளர் திரு விஜயகுமார் அவர்களும் மற்றும் விருதுநகர் மாவட்ட தலைவர் தோழர் சண்முகம் அவர்களும் விழாவிற்கு வந்திருந்தார்கள் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள் .
மாநில உதவி செயலர் தோழர் சூரியன் தமதுரையில் நமது சங்கம் எந்தவித சாதி, மதம், இனம், கட்சி , பதவி இவைகளை சாராமல் தனித்துவமாக இயங்கி வருகிறது. ஓய்வூதியர் நலத்தில் மட்டுமல்லாமல் சமூக அக்கறையுடன் உழைத்து வருகிறது. இதற்கு சான்றாக கஜா புயலினால் முற்றும் சேதமுற்ற கொறுக்கை எனும் சிற்றுரில் முழுவதுமாக இடிந்து விழுந்த நடு நிலைப் பள்ளியை சீரமைத்து கொடுத்துள்ளோம். மேலும் நாட்டில் பல இடங்களில் வெள்ளத்தால் சேதமுற்ற மாநிலங்களின் சீரமைப்புக்கு வெள்ள நிதியாக ரூ 40 லட்சம் பிரதமர் தேசிய நிவாரண நிதியாக அளித்துள்ளோம்.. எனவே சொந்த விருப்பில் ஓய்வு பெறும் ஓய்வூதியர்களை நம் சங்கத்தில் இணைய அவர்களை அணுக வேண்டும் என்றார்
மாநில செயலர் தோழர் R .வெங்கடாசலம் சுமார் ஒரு மணி 10 நிமிடங்கள் உரையாற்றினார்கள். 7வது ஊதியக் குழு பரிந்துரைகளை நமக்கு நம் சங்கம் நிச்சயம் பெற்றுத்தரும். நம் சாதனைகளை தம் சாதனைகளாக சில சங்கங்கள் நோட்டிஸ் அடித்து பொய் சொல்லி வருகின்றன. அவைகளை நம்ப வேண்டாம். மிகவும் கஷ்டமான பிரச்சினை களை நம் விடா முயற்சியின் மூலம் தீர்த்து வைத்துள்ளோம் இதற்கு சான்றாக குடந்தையில் ஓவியா எனும் 13 வயது சிறுமிக்கு மறைந்த அவரது தந்தையின் குடும்ப ஒய்வு வூதியம் பெற்று தந்ததையும் , தஞ்சை யின் மற்றொரு கேசையும் எடுத்துக்கூறி பல லட்சங்கள் நிலுவைத் தொகையினை பெற்றுத்தந்ததையும் சங்கத்தின் சாதனையினை பலத்த கைத்தட்டல் களுக்கிடையே கூறினார்
MRS திட்டத்திலிருந்து CGHS  திட்டத்திற்கு மாற அறிவுறுத்தினார். CGHS விபரங்கள் குறித்த கையேடு தோழர் நெல்லை அருணா அவர்கள் மூலம் வெளியிட்டுள்ளோம் . அது எல்லோருக்கும் வழங்கப்படும். BSNL ஓய்வூதியர்கள் CGHS Non Covered பகுதியில் இருந்தாலும் அதில் இணைந்து பயன் பெறலாம். அதற்கு செலுத்தப்படும் சந்தா தொகையை BSNL  நிர்வாகம் நமக்கு திரும்ப தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது மிகப்பெரிய நன்மை பயப்பதாகும் , விரைவில் மதுரையிலும், கோவையிலும் CGHS  வெல்னஸ் சென்டர்கள் துவங்கப்பட உள்ளன என்று கூறி உணவு வேளை நேரம் நெருங்கி விட்டதால் தமது உரையை முடித்துக்கொண்டார்.
தோழர் நடராசன் துணை பொது மேலாளர் ஒய்வு  நன்றியுரை கூற விழா பேச்சரங்கம் இனிது முடிவுற்றது.
பிறகு அகவை 70 ஐ கடந்த தோழர்கள் சுமார் 200 பேர்களுக்கு மேல் ஒவ்வொருவரும் விழா மேடைக்கு அழைக்கப்பட்டு முதன்மை பொது மேலாளர், மாநில செயலர் ,மாநில உதவி செயலர் மற்றும் மாவட்ட செயலர் அவர்களால் பொன்னாடை போர்த்தப்பட்டு , அஜந்தா சுவர் கடிகாரம் நினைவு பரிசும் வழங்கி நிழற் படம் எடுக்கப்பட்டு  கௌரவிக்கப்பட்டார்கள் . உணவருந்தும் பகுதியில் தோழர் வீராச்சாமி அனைவரையும் நன்கு கவனித்து உணவு வகைகளை சரியாக பரிமாற செய்து கருத்தாக கவனித்துக்கொண்டார். மேலும் CGHS  கையேடுகளை அனைவருக்கும் வழங்கினார்.
இன்றைய விழாவிற்கு 600 பேர்களுக்கு மேல் வந்து சிறப்பித்தனர் அரங்கத்தில் இட நெருக்கடி காரணமாக நூற்றுக்கணக்கான தோழர்கள் வெளிப்புற இடங்களில் சவுகரியமாக அமர்ந்தபடி நிகழ்வுகளை கண்காணித்தது பாராட்டுதற்குரியது .உணவு சுவையாக சூடாக மதுரை பாரம்பரியத்தை பறை சாற்றும் விதமாக இருந்தது. அன்புடன் சமையற்கலை ஊழியர்கள் உணவு பரிமாறியது அதன் சுவையை மேலும் கூட்டியது.
மதுரை மாநகரில் கடல் அலைகள்  ஆர்ப்பரிக்க சாத்தியமில்லை 
மதுரை சங்க அரங்கில் மனித தலைகள் இருப்பதில் ஆச்சரியமில்லை.


No comments:

Post a Comment