Saturday 10 August 2019


10.08.19 அன்று சங்க அமைப்பு தின சிறப்புக் கூட்டம் தலைவர் K .R . சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். D.அன்பழகன், மாவட்டச் செயலர் வரவேற்புரையாற்றினார் .தன்னுடைய வரவேற்புரையின் போது புதுச்சேரியில் நிரந்தர ஊழியர்கள் 260 பேர் தான் உள்ளனர். ஆனால் நமது ஓய்வூதியர் சங்கத்தில் 302 பேர் சேர்ந்து அதிகம் பேர் சேர்ந்துள்ள முதன்மைச் சங்கமாக உள்ளது. செயல்பாட்டினால் உறுப்பினர் சேர்வது மற்றவர்களுக்கு கண்  உறுத்துகிறது. நிர்வாக மும் மிரளுகிறது. நம் மால் உருவாக்கப்பட்ட பென்சனர் குறைதீர்வுக்குழுவில், மாற்றுச் சங்கமும் கலந்து கொள்ள வழி செய்திருக்கிறோம். அகில இந்திய துணைத் தலைவர் A. சுகுமாறன் தனது சிறப்புரையில் CDA பென்சன் கோருவதால் ஏற்படும் சாதக பாதகங்களை புள்ளி விபரத்துடன் எடுத்துரைத்தார். அனைத்து சங்கங்களும் கூட்டாக செயல்பட, கோரிக்கை வைக்க அழைத்ததற்கு மாற்றுச் சங்கம் (AIBDPA) வரவில்லை .மாறாக
        நமது கோரிக்கை பேரழி வானது என்றனர். தற்போது நமது கோரிக்கை ஏற்கப்பட்டால், இனிமேல் BSNL சம்பளமாற்றம் பற்றி கவலைப்பட தேவையில்லை, அடுத்தடுத்த மத்திய சம்பளக் கமிஷனில் தானாக பென்சன் மாற்றம் கிடைக்கும் என்றார். மாநிலச் செயலர் RV பேசுகையில் பென்சன் பிரச்சனையில் நமது சங்கம் மட்டுமே அதிக பிரச்சனைகளை தீர்த்து வருகிறது. அதன் மூலம் அதாலத்திற்கு தரும் குறைகள் குறைந்து வருகின்றன. பிரச்சனைகளை தேடி எடுத்து தீர்வு காண விழைகிறார் மாவட்டச் செயலர் அன்பழகன். அவரின் செயல் பாராட்டத்தக்கது. அது மட்டுமல்ல அகில இந்திய செய்திகளை தமிழாக்கம் செய்து மற்ற மாவட்டங்களிடம் பாராட்டு பெறுகிறார் அன்பழகன். அவருக்கு மாநிலச் சங்கத்தின்  வாழ்த்துக்கள். மருத்துவ பட்டுவாடா இனிமேல் BSNL -ல் கிடைப்பது கஷ்டம். அதனால் CGHS மருத்துவ வசதி பெறுவது நல்லது. அதற்கான முயற்சியில் மத்திய, மாநிலச் சங்கம் முயற்சி எடுத்து வருகிறது. மாநில அமைப்புச் செயலர் M.சாம்பசிவம் பேசுகையில் சில அதிகாரிகள் கூட்டு சேர்ந்து நம்மை எதிர்க்கிறார்கள். நமது ஒற்றுமையை கண்டு குறுக்கு வழியில் பிரச்சனை ஏற்படுத்து கின்றனர் என்றார்.

ஆயுள் சந்தா உறுப்பினர் அடையாள அட்டைகளை உறுப்பினர்களுக்கு மாநிலச் செயலர் வழங்கினார்.

புதிய உறுப்பினர்கள் சால்வை போர்த்தி கெளரவப்படுத்தப்பட்டனர். ஆயுள் சந்தா உறுப்பினர் எண்ணிக்கை 303 ஆனது. அனைவரும் கை தட்டி வரவேற்றனர்.
பொருளாளர் R. லோகநாதன் நன்றி கூறினார்.
கூட்ட முடிவில் அனைவருக்கும் சாப்பாடு வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment