Monday 17 February 2020

மனக்குமுறல் .
'வெளியேறலாம்'
சட்டத்தை மதிக்காத இந்நாட்டில் இருப்பதை விட தொலை தொடர்பு துறை வழக்கில் உச்ச நீதி மன்ற நீதிபதி அருண் மிஸ்ரா வேதனை
உச்ச நீதி மன்ற ஆணையை மதிக்க வேண்டாம் என, ஒரு சாதாரண அதிகாரி எப்படி கூறலாம்? இது தான் இந்நாட்டின் சட்டமா?  நீதி மன்றங்களை இப்படித்தான் நடத்துவீர்களா? இது எனக்கு மிகுந்த மன வேதனையை தந்துள்ளது இந்த நீதிமன்றத்திலும், ஏன், இந்த நீதித்துறையிலேயே பணியாற்ற கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டு உள்ளது
நான் இது வரை இப்படி கோபபட்டதில்லை. ஆனால், இந்த நாட்டில் இப்படிபட்ட ஒரு நடைமுறையில் எப்படி பணி யாற்றுவது என, எனக்கு தெரியவில்லை
சொலிசிட்டர் ஜெனரல் என்ற முறையில், கடிதத்தை திரும்ப பெறுமாறு, அந்த அதிகாரி இடம் கேட்டு இருக்க வேண்டும். அவ்வாறு கேட்கபட்டதா? இதை எல்லாம் எங்களால் பொறுத்து கொள்ள முடியாது.
இதுபோன்ற நடை முறையில் எங்களால் செயல் பட முடியாது . இந்த  அளவிற்கு அந்த அதிகாரிக்கு துணிச்சல் இருந்தால், உச்ச நீதி மன்றம் எதற்க்கு? அதை மூடி விடலாம்
உச்சநீதிமன்ற ஆணைக்கு ஒரு அதிகாரி தடை போடுகின்றார் என்றால், அவர் என்ன, இந்த உச்ச நீதி மன்ற தை விட மேலானவரா? இந்த நாட்டில் இருப்பதை விட, வெளி ஏறுவதே மேல் என்ற எண்ணம் எழுகிறது .
அந்த அதிகாரி மீதும், பாரதி ஏர்டெல், வோடோ போன் ஐடியா, டாடா டெலி services நிறுவங்களின் சீராய்வு மனு தள்ளுபடி ஆன பிறகும், அவை, நிலுவையில் ஒரு பைசா கூட செலுத்த வில்லை. இந்திய நீதி துறை யின் ஆரோக்கியம், அது செயல் படும் விதம் ஆகியவை கவலை அளிக்க கூடிய வையாக உள்ளன
நிறுவனங்களுக்கு உதவவே அந்த அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார். அவராக அதை அனுப்பி இருக்க முடியாது. அவர் கடிதம் ஏழுதியத்தின் பின்னணியில் பணம் விளையாடியதா என, தெரியவில்லை
நீதி மன்ற அவமதிப்புக்கு உள்ளான அவர் சிறைக்கு போகவும் கூடும்.

No comments:

Post a Comment