Monday, 31 December 2018

தருமபுரி மாவட்டத்தில் பென்ஷனர் தின விழா

AIBSNLPWA தருமபுரி மாவட்டச் சங்கத்தின் சார்பில் 29-12-2018, சனிக்கிழமை அன்று ஓய்வூதியர் தின சிறப்புக் கூட்டம் கிருஷ்ணகிரி வெங்கடேஷ்வரா மஹால் சுபம் ஹாலில் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் தோழர் முனியன்,மாவட்ட கவுரவத்தலைவர் தோழர் வி சுந்தரம் தலைமையேற்க கிருஷ்ணகிரி கிளைச்செயலாளர் தோழர் கே தங்கவேலு,ஒசூர் கிளைச்செயலாளர் தோழர் சத்தியேந்திரன், தருமபுரி கிளைச்செயலாளர் தோழர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகிக்க கூட்டம் தமிழ்த் தாய் வாழ்த்துடன் காலை 11-00 மணிக்கு துவங்கியது.
தோழர் S.T.சத்தியேந்திரன் அஞ்சலி உரையாற்றினார். மாவட்டச்செயலாளர் தோழர் சுப்ரமணியம் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாநிலத் துணைத்தலைவர் தோழர் T.வேடியப்பன் அவர்கள் ஓய்வூதியத்தின் வரலாறு குறித்தும்,ஓய்வூதியர் தினம் கொண்டாட வேண்டிய அவசியம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்து துவக்க உரையாற்றினார்.தமிழ் நாடு அரசு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்க மாவட்டத்தலைவர் தோழர் K.துரை, சேலம் கிழக்கு மாவட்ட துணைச்செயலாளர் தோழர் M.குமரேசன், அகில இந்திய வானொலி சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் விபரம் இலங்கை தோழர் சிவப்பிரகாசம், NFTE மாநில அமைப்புச் செயலாளர் தோழர்  கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர் 75வயது,80வயது நிறைவு செய்த 13 தோழர்கள் பொன்னாடை போர்த்தி மெடல் அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்
அகில இந்திய துணைப் பொதுச் செயலாளர் தோழர்  S.அருணாசலம் தனது ஒரு மணி நேர சிறப்புரையில் 17-12-1982 அன்று வழங்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு குறித்தும், அதற்கு பின்னர் அமைக்கப்பட்ட மத்திய அரசின் ஊதியக்குழு ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றம் குறித்தும் பரிந்துரைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது குறித்தும் BSNL/MTNL ஓய்வூதியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைத்த அடிப்படையில் ஓய்வூதியம் மாற்றி அமைக்க சங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் தற்போது அதன் நிலை குறித்தும்,மாற்று சங்கத்தின் அணுகுமுறை குறித்தும் மிகச்சிறந்த முறையில் விளக்கினார்.
மாவட்டப் பொருளாளர் தோழர் P.வணங்காமுடி பாடல் பாடி, நன்றி கூறி முடித்து வைத்தார். நான்கு தோழியர்கள் உட்பட 65 ஓய்வூதியர்கள் பங்கேற்றனர். முடிவில் அனைவருக்கும் மதிய விருந்து வழங்கப்பட்டது.   
R.சுப்ரமணியம்,
மாவட்டச்செயலாளர்.


IDA Increase for BSNL employees and pensioners is 
                             3.2%
Total IDA From January 2019 will be
                             138.8%


Sunday, 30 December 2018

மதுரை சங்க வரலாற்றில் இன்று ஒரு புதிய பொன்னேடு உருவாகியுள்ளது. ஆம் மதுரை மாவட்டத்தின் முதல் கிளை சங்கம் வத்தலகுண்டு நகரில் இன்று 30-12-2018 ஞாயிறு காலை 10-00 மணிக்கு உதயமாகியுள்ளது.
தொலைபேசி நிலைய வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்திற்கு மதுரையிலிருந்து தோழர்கள் தர்மராஜன், சுந்தரேசன் . சத்தியசீலன் ,வீராச்சாமி, சூரியன் , திண்டுக்கல் நேசன் , மாநில அமைப்பு செயலர் தேனீ பாலசுப்ரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 
தோழர் எம்.சவுந்தரராஜன்   (DGM - ஒய்வு )அவர்கள் தலைவராகவும் , தோழர் வி. பெரியசாமி ( TT ஒய்வு) அவர்கள் செயலாளராகவும் , தோழர் ஜி .ரெங்கசாமி (STS ஒய்வு ) அவர்கள் பொருளாளராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
45 உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள வத்தலகுண்டு முதற் கூட்டத்திற்கு 41 உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள் . இது சங்கத்தின் பால் அவர்கள் கொண்டுள்ள வேட்கையை பறைசாற்றியது.
அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்த தோழர் ராஜாராம் அவர்கள் பெரும் பாராட்டுக்குரியவர் . நம் சங்கத்தலைவர் தோழர்கள் முத்தியாலு DGS , அருணாச்சலம் AGS , ராமராவ் தமிழ்மாநில தலைவர், வெங்கடாச்சலம் தமிழ்மாநில செயலர் மற்றும் பலர் வாழ்த்து செய்திகள் அனுப்பி பாராட்டியுள்ளனர்.அனைவருக்கும் நா மணக்கும் இன்சுவை உணவு பரிமாறப்பட்டது.




Saturday, 29 December 2018

SAMPANN நேரடி காணொளி ஒளிபரப்பு
இன்று இந்திய பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் ஓய்வூதியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய பட்டுவாடாவை நேரடியாகவே அவரவர்கள் வங்கி கணக்கில் செலுத்தும் SAMPANN ( SYSTEM FOR ACCOUNTING AND MANAGEMENT OF PENSIONS) திட்டத்தினை வாரணாசியில் காணொளி கண்காட்சி மூலம் துவக்கி வைத்து பேசினார். அந்த காணொளியினை நேரடியாக நேரடி ஒளி/ஒலி பரப்பு சென்னை அண்ணாசாலை தொலைபேசி நிலாயத்தில் உள்ள "ஹால் ஆப் இன்ஸபிரேஷன் " ஹாலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த வாய்ப்பினை நம் சங்கம் அதன் தலைவர்கள் நல்ல முறையில் பகிர்ந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சி வாரணாசியில் பிரதமரின் மற்ற அலுவல்கள் காரனாக துவங்க சற்று கால தாமதமானது.அந்த சமயத்தை பயன்படுத்தி PCCA மற்றும் CCA அவர்களுடன் கலந்தாலோசனை நடைபெற்றது. இந்த திட்டத்தின் சாதகங்களை தன் உரையில் எடுத்துரைத்தார் PCCA அவர்கள். 
நம்  சங்கத்தலைவர்கள் தோழர்கள் G.நடராஜன் , K.முத்தியாலு, T.S. விட்டோபன், V.ரத்னா , V. ராமராவ் , R. வெங்கடாசலம் , N.S. தீனதயாளன் , S. காளிதாஸ் , சென்னை தொலைபேசி மாநில M.முனுசாமி, S.தங்கராஜ் , M.கண்ணப்பன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள் .ஓய்வூதியர்களின் குறைகள் இந்த ஏற்பாட்டின் மூலம் விரைவில் தீர்க்கப்பட்டால்தான் இந்த திட்டம் வெற்றி அடைந்துள்ளது எனக்கொள்ளலாம் . தபால் நிலையம் சேமிப்பு அக்கவுண்ட் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இந்த திட்டம் விஸ்தரிக்கப்படுமா? என கேள்வி எழுப்பினர்.
CCA திரு பிரதான் அவர்கள் பேசும்போது KYP  என்பது அத்தியாவசியமானதல்ல , KYP  விவரங்கள் இல்லாமலேயே ஓய்வூதியம் அவரவர் வங்கி /தபால் நிலைய அக்கவுண்டில் சேர்க்கப்படும். தபால் நிலைய கணக்குகளுக்கு SAMPANN ஐ விஸ்தரிக்க சற்று கால தாமதமாகும். தபால் நிலைய சேமிப்பு அக்கவுண்ட் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் பென்சனர்களை வங்கி க்கு மாறும்படி நாங்கள் கோரவில்லை ஆனால் அவர்களாகவே வங்கி யில் சேமிப்பு கணக்கு உண்டாக்கி அதன் வழியாக பென்ஷன் வாங்க முயற்சித்தால் நாங்கள் வரவேற்போம். ஓய்வூதியர்கள் குறைகளை களைய ஒவ்வொரு SSA தலைமையகத்திலும்  ஓய்வூதியர் குறைதீர்க்கும் மையம் ஏற்படுத்தப்படும். அம்மையங்களை பென்சனர்கள் அணுகி தங்கள் குறைகளை விரைவாக தீர்த்துக்கொள்ளலாம்.
பிறகு நேரடியாகவே காணொளி நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 100 தோழர்கள் இதனை கண்டு பயனுற்றார்கள் இத்திட்டத்தை செயல்படுத்த இன்னும் கால நிர்ணயம் செய்யப்படவில்லை.













Friday, 28 December 2018


கடலூர் மாவட்ட AIBSNLPWA _வின் சார்பாக 27.12.2018 அன்று ஓய்வூதியர் தின சிறப்பு கூட்டம் தலைவர். P.ஜெயராமன் தலைமையில் சிறப்பாக நடந்தது .மாநில செயலாளர் தோழர்.R.வெங்கடாச்சலம், தோழர். ஜார்ஜ் கேரள மாநில செயலாளர் மற்றும் சமூக சேவகர்.தோழர்.சிவானந்தன் கொச்சி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். தோழர்கள் KVR , KCM ,,மாநில துணை தலைவர்,இளங்கோவன் & NT வாழ்த்துரை வழங்கிட தோழர் ஹாஜா கமலுதீன் நன்றி கூறினார்.மாவட்டம் முழுவதிலும் இருந்து 250 க்கும் அதிகமான தோழர்கள் கலந்து கொண்டது சிறப்பு  நன்றி.
புதுச்சேரியில் பென்சனர் தின விழா .    27.12.2018 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றதுவிழாவினை நடத்திட கான்பிரன்ஸ் ஹாலை  கேட்டோம். வார நாட்களில் தரமுடியாது என மறுத்து விட்டது நிர்வாகம் . ஒரு கதவு சாத்தப்பட்டால், மறுகதவு திறக்கும் என்ற நியதியை மறந்து விட்டார்கள் போலும். மேலும் சீப்பை மறைத்து வைத்து விட்டால், கல்யாணம் நின்று போகும் என்ற மனப்பால் களித்தது நிர்வாகம். அரங்கத்தின்  உள்ளே அனுமதியில்லையா ? வேண்டாம், அரங்கத்தின் உள்ளே பேசுவதை விட , வெளியில் பேசினால் நிர்வாகமும் கேட்கும், மற்றவர்களும்....... கேட்பார்கள் . அதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்திருப்பதாக எடுத்துக் கொள்கிறோம்


G. M, BSNL, கட்டிட முகப்பில் வீதியில் சாமியானா அமைத்து அரங்கம் போல் அமைத்து, 150 பேர்களுக்கு மேல் கலந்து கொண்டு , மதியம் 2 மணி வரை உறுப்பினர்கள் காத்திருந்து மாநிலச் செயலர் திரு. R.வெங்கடாசலம் அவர்களின் நெடிய உரையை உள்வாங்கினர் என்றால் அவர்களின் சங்கப் பற்று எத்தகையது என்பதை நோக்கும் போது IMPOSSIBLE MADE  Possible என்ற செறுக்குடன்  குவிந்தனர். 70 வயது முதல் 78 வயதுள்ள மூத்த உறுப்பினர்களை சால்வை அணிவித்தும் , நினைவுப்பரிசுப் பொருள் அளித்தும் விழா நிகழ்ச்சி அமைந்தது. NFTE, SNEA, AIBSNLEA,,  மாவட்டச் செயலர்கள், தோழர். K. அசோக் ராஜன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில அமைப்புச் செயலர் M.சாம்பசிவம் வாழ்த்துரையில் பாண்டியில் சங்கத்தின் வளர்ச்சியை கண்டு அதை குறைக்க பலப்பல வழிகளில் சூழ்ச்சிகள் நடக்கிறது. மாநிலச் செயலர் எங்கள் பிரச்சனைகளை மாநில நிர்வாகத்திடம் சொல்லியிருக்கிறார். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு பரிமாறப்பட்டது.




A Direct Video Conference program is being arranged in 
Hall Of Inspiration
Anna Road Telephone Exchange Complex
on 29-12-2018 Saturday at 
1530 hours 
to view the Inaugural Function of 
CPMS SAMPANN by 
Hon.Prime Minister Of India 
Sh. Narendra Modi 
in Mumbai.
All are requested 
to attend the 
Video conference program.
Circle Secretary,                                      Circle Secretary,
TN Circle.                                                 ChTD Circle

Thursday, 27 December 2018

Mother in Law of Com. D Gopalakrishnan expired today. She was 93. The funeral will take place in a village near Guduvancherry, outskirts of Chennai city tomorrow on 28-12-2018 after arrival of some relatives from other places.
CHQ and Tamilnadu Circle convey heartfelt condolences to Smt. Gomathy Gopalakrishnan and other members of the family .