புதுச்சேயில் சங்க அமைப்பு தின சிறப்புக்
கூட்டம்
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை
மாதாந்திர பொதுக்குழு கூட்டம் நடப்பதுபோல இம்மாதம் சங்க அமைப்பு தினத்தையும் சேர்த்து
12-08-2017 அன்று சிறப்புக்கூட்டமாக நடந்தது. திரு.M.ராமகிருஷ்ணன் தலைவர் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் D..அன்பழகன்
வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் 74 பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
கூட்டத்தில் கடந்த மாதம் ஓய்வுபெற்ற திரு.
C..ராமதாஸ், A.மகேஷ்வரன், A..கணேசன், மற்றும் திரு.P.லோகநாதன், திருமதி.R.சரோஜினிதேவி,
திரு. T.அந்தோணிமுத்து, திரு.K.கோதண்டபாணி,
திரு.K.திருநாவுக்கரசு, திரு. J.விஜயகுமார், திரு.E.R வர்கீஸ், திருமதி,J. சொர்ண அமிர்தம்,
திருமதி. S.தனலட்சுமி,, திருமதி.S. சரசு, திருமதி.R. தையநாயகி, திருமதி.M. அமுர்தா,
ஆகிய குடும்ப ஓய்வூதியர்களூம் சேர்த்து 15 பேர் ஆயுள்சந்தா உறுப்பினர்களாக இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து
கெளரவிக்கப்பட்டனர்.
இவர்களைச் சேர்த்து தற்போது ஆயுள்சந்தா
உறுப்பினர் சேர்ப்பு 209 ஆனது ( அதிகாரிகள்:39,
STS/SSS: 61, TM: 70, Family Pensioner: 39 ).
ஆண்டுசந்தா உறுப்பினர் இல்லை.
78.2 நிலுவை பெற்றவர்கள் நன்கொடைகளை வழங்கினர்.
ஆயுள்சந்தா உறுப்பினர்கள் 200-ஐ தாண்டி 209 ஆக உயர்ந்திருக்கிறோம்
என செயலர் அறிவித்தவுடன் அவை கைதட்டி பாராட்டியது. ஆயுள் சந்தா உறுப்பினர் அடையாள அட்டை
பதிவுசெய்த உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. 78.2 நிலுவைத் தொகை இதுவரை 50 தோழர்களுக்கு கிடைத்துள்ளது, அதில் 42
பேர் நன்கொடை கொடுத்துள்ளனர். இன்னும் 30 பேர்களுக்கு
கிடைக்க வேண்டியதுள்ளது. சங்க அமைப்பு தின வரலாறு அதன் சாதணைகள் பற்றி ஒரு நான்கு பக்க
பிரசுரத்தை செயலர் வெளியிட்டார்.. உறுப்பினரின் பிறந்த தேதியன்று காலையில் அவர்களுக்கு
சங்க சார்பாக பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் முறையை கடைப்பிடித்து ஜுலை- மாதத்தில்
15 தோழர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
சங்க அமைப்பு தின வாழ்த்துரையாக
திரு.S.சதாசிவம், மாநில உதவி பொருளாளர், கடலூர் மாவட்ட துணைத் தலைவர் திரு,P. ஜெயராமன்,
திரு. அசோகன், மு.மாநில செயலர் (SNEA-I), திரு.K.சந்திரமோகன்,,மு.மாவட்டச் செயலர்,
கடலூர், திரு. பால்கி @ N.பாலகிருஷ்ணன்,
SNEA(I) முன்னாள் செயலர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்ட முடிவில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
பொருளாளர் லோகநாதன் நன்றி கூறினார்.
LONG LIVE AIBSNLPWA
No comments:
Post a Comment