எழுச்சியுடன்
நடந்த பரமக்குடி கிளைக்கூட்டம்
அகில இந்திய துணைப்பொதுச்செயலர்.தோழர்.அருணா அவர்கள் கலந்துகொண்ட
கூட்டத்தில் காரைக்குடியில் மாநிலசெயற்குழுவை நடத்துவது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டு
திட்டமிடப்பட்டது. 63 பேர் கலந்துகொண்டகூட்டத்தில்
மாநிலசெயற்குழுவை நடத்தும்வழி முறைகள் பற்றியும் சங்கம் சாதித்த சாதனைகள்
பற்றியும் சாதிக்கவிருக்கும் பிரச்னைகள் பற்றியும் தோழர் அருணா அவர்கள்
விரிவாக எடுத்துரைத்தார்.
தேசப்பிதா
மகாத்மா.. லால்பகதூர் ஆகியோரின் பிறந்தநாளும் பெருந்தலைவர் அவர்களின் நினைவுநாளும் இந்த நாளில் நிகழப்பட்டதால்
அவர்களின் தியாகங்கள்பற்றியும் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
மருத்துவப்படி
பட்டுவாடாவில் ஏற்பட்ட தேக்கநிலை பற்றியும் தற்போதுள்ள
முன்னேற்றம்பற்றியும் மதுரையில் நடந்த அதாலத்தில் நமது
மாவட்டசங்கம் வைத்த பிரச்னைகள்பற்றியும் தீர்வுகள் பற்றியும் மாவட்டச்செயலர் முருகன் அவர்கள்
விளக்கிப்பேசினார்.
தொகுப்பாளராகவும்
ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு கூட்டத்தை சிறப்பாக நடத்தினார் மாநில துணைச்செயலர் நாகேஷ்வரன்
அவர்கள்
ஓய்வுபெற்றவர்கள்
ஒதுங்கி இருக்கவேண்டும்.அலுவலகம் பக்கம் வரக்கூடாது என
நமது முன்னணித்தோழர்கள் இருவர்மீது சமீபத்தில் தாக்குதல் தொடுக்கப்பட்டது.
நாங்கள்
ஓய்ந்துவிட்டவர்கள் அல்ல..ஓய்வில்லாமல் செயல்படுபவர்கள்---சேவைசெய்பவர்கள் என எடுத்துக்காட்டும் வண்ணம்
எழுச்சியுடன்...துடிப்புடன் நடத்தப்பட்ட கூட்டமாக பரமக்குடி கிளைக்கூட்டம் அமைந்தது.
திரு.சேகரன், மணியன், உரப்புலி
ஜெயராமன், முருகேசன், சிவகங்கை சந்திரன், காரைக்குடி சுந்தரராஜன், இராமநாதபுரம் இராமமூர்த்தி, பரமக்குடி காசிநாதன்மற்றும் இராமசாமி ஆகியோர் தங்கள் கருத்துக்களை
பதிவு செய்தனர்.
எதிர்வரும்
ஏழாம்தேதி காரைக்குடியிலும் ஒன்பதாம்தேதி இராமநாதபுரத்திலும் கிளைக்ககூட்டங்கள் நடைபெற
உள்ளது.
No comments:
Post a Comment