Sunday, 15 March 2020


         புதிய உறுப்பினர் (VRS) வரவேற்புக்கூட்டம்
14-03-2020 அன்று காலை  கிளைத்தலைவர்
 திரு. பாண்டித்துரை அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மறைந்த தோழர்.M.நாகசுந்தரம் அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கிளைச்செயலர் K.சுந்தரராஜன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். கிளைப்பொருளர் S.இராஜேந்திரன் அவர்கள் கிளை அமைப்புநிலை மற்றும் நிதிநிலை பற்றி உரையாற்றினார்

புதியதோழர்களை வரவேற்றதோடு சங்கம் சாதித்த பல்வேறு சாதனைகள் பற்றி மிகவிரிவாக தனது துவக்கஉரையில் மாவட்டபொருளர் R.பூபதி அவர்கள் எடுத்துரைத்தார். மூத்ததோழர்.திரு.K.இராஜகோபாலன்
அவர்கள் இன்றைய தினம் 79-வது வயதை முடித்து 80-ல் நுழைவதையொட்டி அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு மற்றும் காரம் வழங்கி தன் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

காரைக்குடி பகுதியில் VRS-ல் சென்றவர்கள் 62 பேர்
பணிநிறைவு  இரண்டுபேர். 64 பேர்களில் 47 பேர் நமது சங்கத்தில் உறுப்பினர்களாகியுள்ளனர்.
புதிய தோழர்களை வரவேற்று மாநில துணைத்தலைவர் S.ஜெயச்சந்திரன்,   மாவட்டத்தலைவர்         P. முருகன் கிளைத்தலைவர்
D. பாண்டித்துரை       மாவட்டச்செயலர்       N. நாகேஷ்வரன்
கிளைச்செயலர்.K. சுந்தரராஜன்      மாவட்டப்பொருளர்.      R. பூபதி
கிளைப்பொருளர் S. இராஜேந்திரன்        மாவட்டதணிக்கையாளர்.
I.யாக்கூப் ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.

புதியதோழர்கள் சார்பில் சங்கரன் அவர்களும் கோபாலகிருஷ்ணன் அவர்களும் பேசினர்.
மாவட்டத்தலைவர் முருகன் மாவட்டச்செயலர் நாகேஷ்வரன்
NFTE மாவட்டச்செயலர் மாரி மற்றும் மாநிலதுணைத்தலைவர் ஜெயச்சந்திரன் ஆகியோர் ..இரண்டு மாத சம்பளமில்லாமல் வெறுங்கையோடு வீட்டுக்கனுப்பப்பட்ட VRS தோழர்களுக்கு  நமது சங்கம் மூலம் Provisional Pension வாங்கிக்கொடுத்தது பற்றியும்
GPF பட்டுவாடாவுக்கு ஏற்பாடு செய்தது பற்றியும் சொசைட்டி தலைவருக்கு மாநில சங்கத்தால் கடிதம் எழுதியது பற்றியும்
சங்கத்தின் பத்து ஆண்டு சாதனைகள் பற்றியும் குடும்ப ஓய்வூதியர்கள்பால் அக்கரை எடுத்து அவர்களின் பிரச்னைகளை அணுகுவது பற்றியும் விரிவுரை ஆற்றினார்கள்.

பணியில் இருக்கும் மாரி அவர்களின் உரையிலிருந்து....
* 31-01-2020 க்குப்பிறகு அனைத்து அலுவலகங்களும் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
* காவலர் இல்லாத சூழ்நிலையில் மகளிர் காவலராக பணியாற்றவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
* பணியிலிருக்கும் அனைவருக்கும் பணிச்சுமை.....
* VRS-ல் சென்றாலும் மீதமுள்ள காலத்திற்குரிய ஊதியத்தை கருணைத் தொகையாக பெறுவதால் பழுதகற்றும் பணியில் எப்பொழுதும் ஈடுபடுவோம் என்று இன்றும் பல தோழர்கள் ஈடுபட்டுக்கொண்டிருப்பது
பாராட்டுதலுக்குரியது.
* ஊதிய உயர்வுக்கும் மருத்துவ வசதிக்கும் BSNL -ன் வளர்ச்சி அவசியமானது.
*ஓய்வு பெற்ற மூத்தவர்களும் இளையவர்களும் BSNL வளர்ச்சிக்காக சேவைச்சங்கங்கள் குரல்கொடுக்கும் பொழுது ஆதரவு தரவேண்டும்
காரடையார் நோன்பு காரணமாகவும் முத்துமாரியம்மன் கோவில் பால் குடமெடுப்பு காரணமாகவும் அதிக தோழர்கள் கலந்து கொள்ள முடியவில்லை. இருந்த போதிலும் 87பேர் கலந்து கொண்டனர்.
புதியதோழர் G.கணேசன் இடைப்பலகாரம் மற்றும் தேநீர் செலவை ஏற்றுக்கொண்டார்.
ஓய்வூதியம் GPF போன்றவற்றை விரைவில் பெற்றுத்தந்தமைக்காக
புதியதோழர்.பாண்டிக்குமார் சங்க முன்னணித்தோழர்களுக்கு
கைத்தறி ஆடை அணிவித்து நன்றியை புலப்படுத்தினார்.
இணைச்செயலர் துரைபாண்டியன் அவர்கள் நன்றிகூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.


1 comment:

  1. காரைக்குடி தோழர் ஓர் புதிய கருத்தை தெரிவிதுள்ளார். Remaining period க்காக ஆண்டுக்கு 25 நாள் சம்பளம் Ex gratia தரும்போது நாம் ஏன் Volunteer ஆக பணி செய்யக்கூடாது என்கிறார். இன்றைய தேவை மக்களுக்கு சேவை. நன்றி. வாழ்த்துக்கள் By.nnr.tnj.

    ReplyDelete