Friday 31 May 2019

நம் தொலைத் தொடர்பு துறைக்கு காபினட் அந்தஸ்துள்ள அமைச்சர் கிடைத்துள்ளார் .
மாண்புமிகு ரவி சங்கர் பிரசாத் அவர்கள் தொலைத் தொடர்பு துறைக்கான காபினட் அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 
வரவேற்கிறோம் அவர் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.  

Thursday 30 May 2019


வருந்துகிறோம்

மதுரை மாவட்ட முன்னாள் செயலாளர், இந்நாள் தமிழ் மாநில துணைத் தலைவர் தோழர் G .R .தர்மராஜன் அவர்களின் மனைவி திருமதி  
D .ரங்கநாயகி அம்மாள் ( வயது 75 )அவர்கள் இன்று மதியம் காலமானார் எனும் வருத்தமான செய்தியினை மிக வேதனையுடன் அறிவிக்கிறோம். GRD அவர்களின் சங்கப்பணிகளுக்கு அம்மையார் மிக உறுதுணையாக விளங்கி வந்தார் . அவர் மறைவு அன்னாருக்கு மிகப்பெரிய இழப்பாகும். அம்மையாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
விலாசம்
3 சேக்கிழார் தெரு (Extn)
நமது BSNL PGM  அலுவலகம் அருகில்.
மதுரை.625002. 452 2522020, 9443966650.
திருமதி ரங்கநாயகி அம்மாள்  அவர்களின் அகால மறைவு ஆழ்ந்த துயரத்தை அளிக்கிறது. தோழர் தர்மராஜனுக்கு ஈடு செய்ய இயலா இழப்பு . மத்திய , மாநில சங்கங்களின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். --மத்திய, மாநில சங்க நிர்வாகிகள் --           D .கோபாலகிருஷ்ணன் , K .முத்தியாலு , V .ராமராவ் , R . வெங்கடாச்சலம் .

தமிழ் மாநில சங்கத்தின் சார்பாக தமிழ் மாநில பொருளாளர் தோழர் S காளிதாசன் அவர்கள் இறுதி சடங்குகளில் கலந்து கொண்டு சங்கத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்துவார் --மாநிலத் தலைவர்   மற்றும் மாநில செயலர் .






Wednesday 29 May 2019

AIBSNLPWA Salem West District 
has just conducted its 
14th Annual General Body Meeting 
in Salem Tamil Sangam Building. 
The news of the AGB Meeting 
has appeared in Tamil News Papers 
1.Dina Sooriyan and in 
2.Urimaikkural 
The news have been posted here  for 
you

Tuesday 28 May 2019

சேலம் மேற்கு மாவட்ட 14 வது ஆண்டு மாநாடு சேலம் தமிழ்ச்சங்க கட்டிடத்தில்  27 -05  -2019 அன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
தோழர் P.கங்காதர ராவ் அவர்கள் 
அகில இந்திய பொது செயலாளர் ,
தோழர் D.கோபாலகிருஷ்ணன் அவர்கள் 
அகில இந்திய துணைத் தலைவர் ,
தோழர் K.முத்தியாலு அவர்கள் 
அகில இந்திய துணைச் செயலாளர் ,
தோழர் R.வெங்கடாச்சலம் அவர்கள் ,
தமிழ் மாநில செயலாளர் 
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் .
சுமார் 300 க்கும் மேற்பட்ட தோழர்கள் , தோழியர்கள் மிக ஆர்வமாக கலந்து கொண்டு ஆண்டு மாநாட்டினை சிறப்பித்தார்கள் 
காலை சுமார் 9 -30  மணிக்கு துவங்கிய ஆண்டு விழா மாலை 4 -00 மணி வரை நடைபெற்றது . காலை 11 -00 மணிக்கும் , மாலை 3 -00  மணிக்கும் சிற்றுண்டிகள் அளிக்கப்பட்டன . அறுசுவை உணவு மதியம் 1 -00 மணிக்கு வழங்கப்பட்டது.
தலைவர்கள் ஆற்றிய உரை காலத்திற்கு மிகவும் ஏற்றதாக இருந்தது.
ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் வருமாறு 
தோழர் M.P.வேலுச்சாமி  ( CGM Retd ) - கௌரவத் தலைவர் 
தோழர் R. சுப்ரமணியன் (DFA Retd  ) - மாவட்ட தலைவர்.
தோழர் T .S . ரகுபதி  ( SDE  Retd )               -  மாவட்ட செயலர் 
தோழர் S . திருஞான சம்பந்தம் (JTO Retd ) - மாவட்ட பொருளாளர் .
மாவட்டத்தில் இதுகாறும் சிறப்பாக பணியாற்றியுள்ள மாவட்ட சங்க நிர்வாகிகளும் , அகவை 70 அடைந்த உறுப்பினர்களும் கௌரவிக்கப்பட்டார்கள் . 
CLICK HERE TO SEE ALL PHOTOS
















AIBSNLPWA Salem East District Branch organised a special get together meeting on 27th May 2019 at 1700 hourns .
Com. D.Gopalakrishnan.
CHQ Vice president
And
Com R.Venkatachalam.
TN Circle Secretary
were chief guests and delivered very important issues in brief  
ie,. Future Pension condition ,Medical reimbursement  problems etc . More than 80 members  including ladies attended and made it a  grand success.
With Fraternal Greetings,
V.Pattabiraman
ACS. TN Circle.

Saturday 25 May 2019

CHQ calls upon all members all over the country to donate liberally to the Odisha Relief fund immediately. Branch Secretaries are requested to collect the same and remit the entire amount to the Current Account opened by our Odisha circle branch for the purpose. The details are available in he Special circular given below.
With Regards,
P Gangadhara Rao, 
General Secretary


பென்சனுக்கு வரி விதிப்பதை எதிர்த்து  ஒரு சொல்  :
பென்சனர்களுக்கு நேரடி வரி விதிப்பு பற்றி பென்சன் மற்றும் பென்சனர் நலத்துறை கர்நாடக P&Tபென்சனர் சங்க பொதுச் செயலரும், SCOVA அமைப்பின் உறுப்பினருமான தோழர் k. B. கிருஷ்ணராவ் அவர்களிடம் கருத்து, ஆலோசனைகளை கேட்டுள்ளது. இதுபற்றி வருமானத்துறையிடம்  பட்ஜெட் உருவாக்கத்தில் வைப்பதற்கு உதவும் என கேட்கப்பட்டுள்ளது. தோழர்.கிருஷ்ணாராவ் அவர்கள் நமது AIBSNLPWA சங்கத்திடம் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கேட்டுள்ளார். நமது சங்கமும் கீழ்கண்ட ஆலோசனைகளையும் அதற்கான காரணங்களையும் தெரிவித்துள்ளது :
ஆலோசனை :
முன்னாள் அரசு ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அரசே பென்சன் வழங்குவதால் அதற்கு வரி விதிக்கக் கூடாது.

காரணங்கள் :
1. பென்சன் சம்பளம் அல்ல. அப்படியே சம்பளமாக கருதப்பட்டாலும், அது தரப்பட வேண்டியபட்டு வாடாவே என நீதிமன்றம் கருதியது. கால தாமதப்படுத்தப்பட்ட நிலுவை சம்பளம் அல்லது பென்சன் பட்டுவாடா செய்யும்போது ஊழியர் தம் படிவம் 10E - ன் படி . குறிப்பிட்ட வருடத்திற்கான ஆய்வின் மொத்த தொகையையும் கணக்கிடுவது கிடையாது.

2. முன்னாள் MP-க்கள், அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் பென்சனுக்கு வரி கிடையாது. ஏனென்றால் " பென்சன் சம்பளம் அல்ல, இதர வழியாக (other sources)  கிடைக்கும் வருமானம்,, என கருதப்படுகிறது. இதர வழியாக (othersources) என்பது ஒன்றுமில்லை, அரசு நிதியிலிருந்து தான் தரப்படுகிறது. இந்திய அரசு, அரசின் நிதியிலிருந்து தான் அவர்களுக்கு பென்சன் தரப்படுகிறதே ஒழிய, அவர்களை தேர்வு செய்த மக்களிடமிருந்து அல்ல. அவ்வாறே அவர்களின் குடும்பத்தினருக்கு குடும்ப ஓய்வூதியத்தை இந்திய அரசு தான் வழங்குகிறது' அதே சமயம், பதவியில் உள்ள MP-க்கள் Ex-MP-க்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும், மருத்துவ சலுகைகள் CGHS மூலம் மத்திய அரசு ஊழியர்கள், பென்சனர்களுக்கு நிகரான சலுகைகள் தரப்படுகிறது. முன்னாள் MP, மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு வழங்கப்படும் பென்சனுக்கு வரி விதிக்காத பட்சத்தில், அதே அரசில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினர் பெறும் பென்சனுக்கும் வரி விதிப்பது நியாயமில்லை.

3. பிரேசில், ரஷ்ய கூட்டமைப்பு, இலங்கை மற்றும் USA -வில் உள்ள மாகாணங்களிலும் பென்சனுக்கு வரி விதிப்பது கிடையாது .
= தமிழாக்கம்: .அன்பழகன், மாவட்டச் செயலர், புதுச்சேரி
Article appearing in CHQ web site is  translated in Tamil By DS Pondy.