Wednesday 30 October 2019


FINAL  APPEAL.

To,

All CSs / DSs / BSs ,
Dear Comredes ,

CHQ expresses its gratitude to all of you for responding to the call and for crediting nearly 30 Lakhs towards PMNRF till now against our Target of 45 Lakhs.

 Last date is over.

 Some of the units are yet to send the money to CHQ after collecting. The last date for remitting the same is  2- 11- 19. We will consolidate the amount in the first week.
As per our original plan , we will make over the cheque to a Cabinet Minister in the second week. Arrangements are being made for that.
CHQ will not accept any relief fund from 4-11-19.
This is my FINAL APPEAL. I hope all will act swiftly.

P Gangadhara Rao GS


Monday 28 October 2019


OUR CASE: ARGUEMENTS OVER
Today, CAT Ernakulam took up our OA 346/18 for arguments. All the Central government pensioners are getting pension @50% of their last pay drawn now irrespective of their date of retirement. But it is not applied in the case of BSNL staff retired before 2006 though all are covered by the same CCS Pension Rule 1972. As a test case, we filed an application against this injustice before CAT Ernakulam. We want that all BSNL pensioners retired before 2006 should also get their pension re-fixed at the rate of 50% of their last pay drawn with all consequential benefits. P S Ramankutty, All India President of AIBSNLPWA is the first applicant.
The case was listed and postponed again and again several times. Finally, today the case was taken up for arguements. Government pleader argued that the new orders are not applicable to IDA pensioners. Our lawyer Adv. Sreeraj countered the same effectively.
Finally, the Judge reserved the case for decision. While going through the arguments and orders, if he desires so he may ask some clarification from the advocates. Otherwise he may pronounce his judgment on a later date which is not declared.
Anyway, arguments are over.
 That is a progress.


Friday 25 October 2019


தஞ்சை அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நல சங்கத்தினர் தீபாவளி கொண்டாட்ட செய்திகள்.
அன்பு தோழர்களே, தோழியர்களே, அனைவருக்கும் காலை வணக்கம். நமது சங்கமும் பிஎஸ்என்எல் உதவும் உள்ளங்கள் அமைப்பும் சேர்ந்து சென்ற 22 ,23, 24 10 2019ஆகிய மூன்று தினங்கள் தஞ்சை சேவாலயா முதியோர் இல்லம் தஞ்சை மனநலம் குன்றியோர் காப்பகம் ஆன அன்பாலயம் மற்றும் ஓசானம் முதியோர் காப்பகம் சென்று அங்குள்ள அங்கத்தினர் உடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தோம். திரு வீ. சாமிநாதன் மாவட்ட செயலர் உடன் நமது சங்க நிர்வாகிகளும் ஆர்வம் மிகு தோழர்களும் தோழியர்களும் மேற்கண்ட இடங்களுக்கு சென்று கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு தீபாவளி புதிய ஆடைகள் பட்டாசுகள் இனிப்பு கார வகைகள் அனைத்தையும் அளித்து அங்குள்ள நண்பர்களுடன் ஒட்டி உறவாடி அளவளாவி இனிய விதமாக தீபாவளி பண்டிகை கொண்டாடி வந்தோம்.
அன்பாளையத்தில் அமையப்பெற்ற நிகழ்வுகள் மனதை மிகவும் கவர்ந்ததாக அமைந்தது ஏனெனில் அங்குள்ள மனநல மற்றோரின் குழந்தைத்தனமான செய்கைகளும் அவர்களது மன மகிழ்ச்சி காட்சிகளையும் காண்பது பெரும் பாக்கியமாக அமையப்பெற்ற தோடு அல்லாமல் வாழ்நாள் முழுதும் நினைத்து நினைத்து மகிழக்கூடிய அம்சமாக மனதில் ஆழ பதிந்தது.
அதுபோல ஓசானம் முதியோர் காப்பகம் சேவாலயா முதியோர் காப்பகம் நிகழ்வுகள் அங்குள்ள முதியோர் உடன் கொண்டாடிய விழா நிகழ்வுகளும் அவர்களது ஆசைகளும் நமக்கு அவர்கள் அளித்த அருள் ஆசிகளும் நித்தம் நித்தம் நினைந்து மகிழும் படியான காட்சிகளாக அமைந்தது. இதுபோன்ற நிகழ்வுகள் சென்ற 20 ஆண்டு காலமாக நடைபெற்று வருவதோடு அல்லாமல் வரும் காலங்களிலும் நன்கு நிகழ்வுகள் அமைந்திடவும் நடை பெற்றிடவும் இறைவனின் அருளை பெற வேண்டி விரும்பி பிரார்த்தனை செய்கிறோம்.
நன்றி, வணக்கம்.
வாழ்க, வளர்க, அகிலஇந்திய பிஎஸ்என்எல் ஓய்வுதியம் நல சங்கம், தஞ்சை மாவட்டம்.


Wednesday 23 October 2019

CASE AGAIN POSTPONED
Our Case before Ernakulam CAT for pension at the rate of 50% of Last Pay Drawn for all pre-2006 retirees was posted for final disposal today. Our lawyer was ready to argue the case. The bench took up the case also. The government pleader was not present. 
A junior lady lawyer appeared for the government side informed that she was not prepared for argument. So the case is posted for 25-10-2019 for final disposal.

Monday 21 October 2019


19 10 2019 சனிக்கிழமை தஞ்சை அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நல சங்கம் மற்றும் தஞ்சை பிஎஸ்என்எல் உதவும் உள்ளங்கள் இணைந்து இரண்டாவது முறையாக தீபாவளி பண்டிகையினை தஞ்சை அன்னை சத்யா பள்ளி, கில்ட் ஆஃப் சர்வீசஸ் ஆண்கள் பள்ளி மற்றும் பெண்கள் பள்ளி, இந்தியன் ரெட் க்ராஸ் மாணவர்கள் காப்பகம் ஆகியவற்றுக்குச் சென்று சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். அங்கு உள்ள சிறுவர் சிறுமிகள் மாணவர்கள் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு தீபாவளிக்கான உடைகள் இனிப்பு கார பலகாரங்கள் மற்றும் பட்டாசுகள் கொடுத்து அங்குள்ள நிர்வாகிகள் மற்றும் அங்குள்ள குழந்தைகள் மாணவ மாணவிகள் உடன் அளவளாவி சிறப்பாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். இதுபோன்ற நிகழ்வுகள் கிட்டதட்ட சென்ற 20 வருடங்களாக தங்குதடையின்றி அனைத்து நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் பிஎஸ்என்எல் உதவும் உள்ளங்கள் உறுப்பினர்கள் அனைவரது ஒத்துழைப்புடனும் ஆதரவு உடன் நல்ல முறையிலே நடந்து வருகிறது. இன்னும் வரும் காலங்களிலும் இது போன்ற நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற அனைவரது ஒத்துழைப்பையும் ஆதரவினையும் அளிக்க வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டு இந்த தீபாவளி பண்டிகை அனைவருக்கும் இனிதாய் அமைய இறைவனிடம் பிரார்த்தித்து வாழ்த்துக்களை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். இன்றைய நிகழ்ச்சியில் மாவட்ட செயலர் வீ. சாமிநாதன் தலைமையில் ஆர்வமிக்க முன்னணி தோழர்களும் தோழியர்களும் ஆர்வமாகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்தியதற்காக நன்றிகளை இதயபூர்வமாக செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நல சங்கம் மற்றும் பிஎஸ்என்எல் உதவும் உள்ளங்கள்அமைப்பு கூட்டாக ஒன்றிணைந்து நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி நன்றி நன்றி.



Thursday 17 October 2019

உண்ணா நோன்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது 

அக்டோபர் 23 ம் தேதிக்குள் செப்டம்பர் மாத ஊதியம் வழங்க BSNL  CMD ஒப்புக்கொண்டதன் பேரில் நாளைய உண்ணாவிரதம் நடைபெறாது என்று  அறிவிக்க பட்டுள்ளது  .
 மாநில செயலர் 

Wednesday 16 October 2019



செப்டம்பர் மாத ஊதியம் வழங்க வேண்டும்
 என்ற கோரிக்கை உள்ளிட்ட
5 அம்ச கோரிக்கைகளை 
வலியுறுத்தி 
18.10.2019 நாடுதழுவிய 
உண்ணாவிரத போராட்டத்துக்கு
அறைகூவல் விடுத்துள்ள 
அனைத்து ஊழியர்கள் அதிகாரிகள் 
AUAB 
கூட்டமைப்பு அறைகூவலுக்கு 
நமது ஆதரவை அளித்திடுவோம்.
---மாநில செயலாளர்.



சோழர் பூமி தஞ்சையில் தீபாவளி கொண்டாட்டம்.
அன்புப் பெரியோர்களே, அருமைத் தாய்மார்களே, போற்றுதலுக்குரிய தோழர்களே, தோழியர்களே, அனைவருக்கும் காலை வணக்கம். இன்று 15 10 2019 மங்களகரமான செவ்வாய்க்கிழமை தஞ்சை மாவட்ட அகில இந்திய BSNL  ஓய்வூதியர் நல சங்கம் தஞ்சை BSNL  உதவும் கரங்கள் இணைந்து நடத்திய தீபாவளி கொண்டாட்ட நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு.

இன்று காலை அகில இந்திய BSNL ஓய்வூதிய நல சங்க உறுப்பினர்கள் மற்றும் BSNL  உதவும் உள்ளங்கள் உறுப்பினர்கள் கிட்டத்தட்ட இருபதிற்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியரும் மாநில செயலர் தோழர் ஆர்வி தஞ்சை மாவட்ட செயலர் வீ.சாமிநாதன் மாநில அமைப்புச் செயலர் தோழர் பிரான்சிஸ் சேவியர் மற்றும் தலைவர் தோழர் மதுரை ராஜேந்திரன் தோழர் பட்டுக்கோட்டை சிவி தங்கையன்  மற்றும் ஆர்வமிக்க முன்னணி தோழர்களும் தோழியர்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டு தீபாவளி விழாவினை பண்டிகைக்கு முன்பாகவே( இன் அட்வான்ஸ்) சிறப்பாக கீழ்க்கண்ட இடங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

காலையில் அன்னை சத்யா மகளிர் காப்பகம் அரசு கண்பார்வையற்றோர் பள்ளி காதுகேளாதோர் பள்ளி மற்றும் மனநலம் குன்றியோர் காப்பகம் அன்பாலயம் முதலிய இடங்களுக்கு சென்று அங்குள்ள உறுப்பினர்களுடன் கிட்டதட்ட 350 மேற்பட்ட மாணவ மாணவிகள் காது கேளாதோர் கண்பார்வையற்றோர் மனநலம் குன்றியோர் ஆகிய நமது உடன்பிறவா குடும்ப உறுப்பினர்களுக்கு தீபாவளி ஆடைகள் தீபாவளி இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கி அனைத்து இடத்திலும் அவர்களிடம் ஊடாடி அளவளாவி மிகுந்த மகிழ்ச்சியுடன் காலை நிகழ்ச்சிகளை ஆனந்தமாக கொண்டாடி மகிழ்ந்தனர். மாலையில் தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுக்கா கடுவெளி கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆதரவற்றோர் காப்பகத்திற்கு நமது தஞ்சை மாவட்ட முதன்மை பொது மேலாளர் ஸ்ரீ C.வினோத் ITS, நமது மாநில செயலர் தோழர் R.வெங்கடாசலம், தோழர் மதுரை ராஜேந்திரன் தலைவர், தோழர் வீ. சாமிநாதன் மாவட்ட செயலர், தோழர் பிரான்சிஸ் சேவியர் மாநில அமைப்புச் செயலர், மற்றும் ஓய்வுபெற்ற துணைப் பொது மேலாளர்கள் கோட்ட அதிகாரிகள் துணை கோட்ட அதிகாரிகள் கணக்கியல் அதிகாரிகள் மற்றும் ஆர்வமிக்க முன்னணி தோழர்களும் தோழியர்களும் கிட்டத்தட்ட முப்பதற்கும்  மேற்பட்ட  ஆர்வலர்கள் கலந்துகொண்டு தீபாவளி பண்டிகையை அந்த காப்பகத்தில் உள்ள நிர்வாகிகள் மற்றும் காப்பகத்தில் நிரந்தரமாக தங்கியிருக்கும் முதியோர்கள் ஆதரவற்ற மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு தீபாவளி பண்டிகை நிகழ்வுகளை இனிதாக நம்முடைய உறுப்பினர்களுடன் கலந்து உரையாடி சிறப்பான ஆனந்தமான முறையில் கொண்டாடி மகிழ்ந்தனர். இதுபோன்ற நிகழ்வுகள் தஞ்சை மாவட்ட சங்கத்தினால் கடந்த இருபது வருடங்களாய் போற்றத்தக்க வகையில் பாராட்டும் வகையிலும் நடைபெற்று வருகிறது என்பது விசேஷமான அம்சமாகும். முதலாவதாக நமது முதன்மை பொது மேலாளர் மற்றும் மாநில செயலர் சிறந்ததொரு உரையாற்றி நிகழ்வுகளுக்கு சிறப்பு சேர்த்தனர். அடுத்து நமது பொது மேலாளர் மாநில செயலர் மற்றும் அனைத்து தோழர்களும் தோழியரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆதரவு அற்றோர் காப்பக தலைவர் அவர்களால் பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அடுத்து முறையாக காப்பக தலைவர் மற்றும் நிர்வாகிகள் நமது உறுப்பினர்களால் பொன்னாடை போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். அடுத்து அங்கு உள்ள நானூறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு தீபாவளி புதிய ஆடைகள் இனிப்பு கார வகைகள் மற்றும் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசுகள் நமது உறுப்பினர்களால் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. அப்பொழுது நிகழ்வுற்ற காட்சிகள் ஆனந்தம் ஆனவை. அபூர்வமானவை. வாழ்க்கையிலே ஒவ்வொருவரும்அனுபவிக்க பட வேண்டிய கண்கொள்ளாக் காட்சிகள். ஆனந்தம் ஆனந்தமே. இந்த நிகழ்வுகள் கடந்த இருபது ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்பதோடு அல்லாமல் இன்னும் வரும் காலங்களிலும் சிறப்பாக நடைபெற ஆண்டவனின் அருளும் உங்களது ஏகோபித்த ஆதரவும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இனி நடைபெற இருப்பவை நல்லதாக அமைய பிரார்த்தனை செய்கிறோம்.
வாழ்க, வளர்க அகில இந்திய BSNL  ஓய்வூதியர் நல சங்கம் மற்றும் தஞ்சை மாவட்ட BSNL  உதவும் உள்ளங்கள் அமைப்பு.
நன்றி, வணக்கம்.

Monday 14 October 2019

Saturday 12 October 2019


இன்று 12 10 2019 இரண்டாம் சனிக்கிழமை தஞ்சை மாவட்ட ஏ ஐ பி எஸ் என் எல் நல சங்கத்தின் மாதாந்திர பொதுக்கூட்டம் தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் காலை சரியாக பத்து முப்பது மணிக்கு தொடங்கிற்று. தலைவர் தோழர் மதுரை ராஜேந்திரன் தலைமை ஏற்க தோழர் பிரின்ஸ் செயல் தலைவர் தோழர் ஏகே தனபாலன் கௌரவத் தலைவர் தோழர் பிரான்சிஸ் சேவியர் மாநில அமைப்புச் செயலர் முன்னிலையில் தோழர் வீ. சாமிநாதன் மாவட்ட செயலர் முன்னின்று நடத்தினார். முதலில் தோழியர் தங்கம் சேவியர் கடவுள் வாழ்த்து இசைத்திட தோழர் என் நடராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார்.125க்கும்மேற்பட்ட தோழர்கள், தோழியர்களும் கலந்து கொள்ள முதல் நிகழ்வாக மறைந்த அண்மையில் 80 வயது நிறைவு பெற்று விழா கொண்டாடிய தோழர் வி. நடராஜன் துணை கோட்ட பொறியாளர் மன்னார்குடி அவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இன்றைய கூட்டத்தில் தோழர்கள் பிரின்ஸ், பிரான்சிஸ் சேவியர், கைலாசம் ,என் பி2, மோகனசுந்தரம் ஆகியோர் உரையாற்றினர். பொதுவாக நமது ஓய்வூதிய மாற்றம் குறித்து கருத்துக்களை பதிவு செய்தனர். வழக்கம்போல் சென்ற மாதம் பணி ஓய்வு பெற்ற இரண்டு தோழர்களின் மணி விழாவும் இந்த மாதம் பிறந்தநாள் அமையப்பெற்ற தோழர் தோழியர்கள் பிறந்தநாள் விழாவும் சந்தன மாலை அணிவிக்கப்பட்டு கேக் வெட்டப்பட்டு அனைத்து உறுப்பினர்களின் வாழ்த்து கோஷங்களுடன் இனிதாக கொண்டாடப்பட்டது. நிறைவாக தோழர் டி. கணேசன் நன்றி கூற மதிய தஞ்சை பாரம்பரிய இன்சுவை விருந்துடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
வாழ்க வளர்க ஓய்வூதியர் நல சங்கம்.
தஞ்சை மாவட்டம். நன்றி .வணக்கம்.

Thursday 10 October 2019

Vellore SSA special  meeting was conducted on 10-10-2019. Com Thangaraj presided over the meeting . After Anjali , com M Rajendiran welcomed. Com N SUKUMARAN read out Membership and Donors List. Com C.MURUGAN EXPLAINED DIST ASSN FUNCTIONING. NEW MEMBER COM C.ARUMUGAM DFA Rtd spoke. Com. S. SUNDARAKRISHNAN ACS  and Com. V.S.MUTHUKUMARAN CVP Gave SPecial  Speeches . AFTER DELICIOUS TIFFIN MEETING was concluded . More than 125 members including lady comrades attended the meeting.