Saturday, 14 March 2020


இன்று 14-03-2020 காலை புதுச்சேரி மாவட்டச் சங்க மாதாந்திர பொதுக்குழுக் கூட்டம்  ராமகிருஷ்ணா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது . தலைவர் K .R .சிவகுமார் தலைமை தாங்கினார் . 115 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் .
கூட்டத்தின் ஆய்படு பொருளாக , அஞ்சலி, MRS அட்டை திருப்பித் தருதல்  மற்றும் CGHS வசதி பெற விளக்கம். என அறிவிக்கப்பட்டது.
பி.காமராஜ் (NFTE மாநிலத்தலைவர்) ( புதுச்சேரியில் நமது உறுப்பினர் ) பென்ஷன் மாற்றத்திற்கு  நீதிமன்றம் செல்லவேண்டாம் என்கிற தோழர் க .முத்தியாலு அவர்களின்  கருத்தை வலியிருத்தி ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார், K.அசோக்ராஜன், வழி மொழிந்து ,இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அதை ஆய்படு பொருளாக சேர்க்க கோரினார் .  புதுச்சேரி மாவட்ட மாநாடு ஏப்ரலில் நடத்தவேண்டும், எப்போது நடைபெறும்  என்று முன்னாள் மாவட்டச் செயலர் சதாசிவம் அதை ஆய்படு பொருளில் சேர்க்க கடிதம் கொடுத்தார் .  இரண்டையும் தலைவர் அனுமதித்தார்.
MRS மற்றும் CGHS விவரங்களை செயலர் அன்பழகன் விவரித்தார். துணைத் தலைவர் M .V .ராமகிருஷ்ணன் விளக்கிப் பேசினார் .  அடுத்த மாநாடு பற்றிய கேள்விக்கு மே மாதம் இரண்டாவது வாரத்தில் நடத்தப்படும் என்று பதிலளிக்கப்பட்டது . வரவேற்புக் குழு அமைக்க செயற்குழு கூட்டப்படும் என்று முடிவு செய்யப்பட்டது .

தோழர்.P .காமராஜ்  நீதிமன்றத்திற்கு செல்லவேண்டாம் என்ற தீர்மானத்தை வலியுறுத்தி உரையாற்றினார் . அசோக்ராஜன் வழிமொழிந்து பேசினார் .   தலைவர் முத்தியாலு அறிக்கையை அன்பழகன்,  மறுப்பு பெயரால் ,அவரது செயலுக்கு ஒரு திட்டம் உள்ளதாக ஏன் சந்தேகிக்க வேண்டும் என்றார் .  மாநில அமைப்புச் செயலர்  M .சாம்பசிவம் , இந்த விஷயம் மேல் மட்டத்தில் பேசவேண்டியது, அதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் . தீர்மானம் தேவையில்லை என்றார் .

செயலர் பதிலளிக்கும் பொது , DGS முத்தியாலு அறிக்கை வெளியிட்ட பின் தன்னிடம் அது பற்றி கருத்தை கேட்டதாகவும், அதையொட்டி,  தான் கருத்து தெரிவித்தாகவும் , அதற்கு அவரும் " தங்கள் அறிவுரைக்கு நன்றி அன்பு " என சொன்னார் .  மற்றபடி பென்ஷன் மாற்றம் பிரச்சனையில் 2013 ஆம் ஆண்டு முதல் 6 வருடங்களுக்கு மேல் கடிதங்கள் , பேச்சுவார்த்தைகள் , MP-க்கள் சந்திப்பு, அமைச்சரே முடியாது என்ற பிறகு தான் வேறு வழியில்லாமல் கடைசியாகத்தான் நீதி மன்றத்திற்கு செல்ல முடிவெடுக்கப் பட்டுள்ளது.  மொத்தமுள்ள நிர்வாகிகளில் இரண்டே பேர் எதிர்ப்பதால்   பெரும்பான்மை கருத்தை எப்படி தள்ளிவிடமுடியும்,  அரசியல் மாற்றம் வரும் வரை காத்திருக்கவேண்டும் என்றால், வழக்கறிஞர் கூறியது போல " இடதுசாரி ஆட்சி வரும் வரை காத்திருக்க முடியுமா " தலைமை முடிவுக்கு, மாநிலச் சங்க வழிகாட்டுதல் படித்தான்  செயல்பட முடியும். பெங்களூர் செயலக கூட்டத்தில் தன் கருத்தை ஏற்காததால் அறிக்கை விட இருந்தேன், குந்தகம் விளைவிக்கும் என்பதால் பொறுத்தேன்  என்கிறார்.  இப்போதைய அறிக்கை வந்திருக்கும் நேரம் மட்டும் என்னவாம் , VRS -ல் சென்றவர்களிடம்  சந்தா வாங்கவேண்டிய நேரத்தில் இந்த அறிக்கையை  பார்த்து இந்த சண்டையில் நாம் அங்கு செல்லவேண்டுமா என யோசித்தால் என்னாவது? கோரக்பூர் செயற்குழு கூட ஒரு வாரம் இருக்கையில் ஏன் இந்த அவசரம். முத்தியாலு அறிக்கைக்கு சரியான பதிலை பொதுச்செயலர் தெரிவித்திருக்கிறார். வெளிவந்துள்ள பென்சனர் பத்திரிக்கா இதழில் வெகு விளக்கமாகவும் , ஆதாரங்களுடனும் பதில் வந்துள்ளது. பாருங்கள்.   .ஆகையால் , மேல் மட்டத்தில் முடிவு எடுக்கவேண்டிய இவ்விசயத்தில் மாவட்ட அளவில் தீர்மானம் தேவையில்லை . தலைமை எடுத்த முடிவை நான் ஏற்கிறேன் . என்று சொன்னார்.

முடிவில்  தங்கள் எதிர்ப்பை பதிவு செய்கிறோம், தீர்மானம் தேவையில்லை  என முடிவு செய்வதாக தலைவர் அறிவித்தார். அவை ஒப்புதல் அளித்தது .
VRS-2019 -ல் ஓய்வுபெற்றவர்களில் 30 பேர் ஆயுள் சந்தா செலுத்தினர் . இதன்மூலம் ஆயுள் சந்தா உறுப்பினர் எண்ணிக்கை 340 ஆக உயர்ந்தது என செயலர் அறிவித்தார் .                                                            
 பொருளாளர் R .லோகநாதன் நன்றி கூறினார் .  


No comments:

Post a Comment