Thursday, 12 March 2020


அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நலச் சங்கத்தின் சென்னை மாவட்டம் தந்தி கிளைச் சார்பில் முதல் முறை மகளிர் தினம் நடைபெற்றது. கிண்டியில் உள்ள ஹோட்டல் சங்கீதா வில நடந்த விழாவில் சிறப்பு பேச்சாளராக
தோழர் K.ராஜேஸ்வரி கலந்து கொண்டார்.  தந்தையை இழந்த பின் தாயால் ஐந்து குழந்தைகளோடு
4/5 வயதிலேயே குப்பைகளை பொறுக்க ஆரம்பித்து படிப்படியாக வளர்ந்து  தான் வாங்கிய ஒவ்வொரு அடியையும்
தனது முன்னைற்றத்தின் படிக்கட்டாக ஏற்று, ஏளனங்களை ஒதுக்கி தள்ளி, பட்டப் படிப்பை முடித்து  மத்திய அரசு அலுவலகத்தில் இன்று அதிகாரியாக பணியாற்றி வருவதற்கு
தனது தாயே ரோல் மாடல் என்ற  அவரது அனுபவங்கள்   நம்மை வியக்க வைக்கின்றன. தனது இன்னொரு ரோல் மாடல் என்று அவர் சொன்னவர் யார் தெரியுமா.
புதுவையில் உள்ள   சுடுகாட்டில் காலை முதல் மாலை வரை வேலை செய்யும் கிருஷ்ணவேணி என்ற பெண். அவர் பிணங்களை அலட்சியமாகத் தூக்கிக் எரியூட்டுவது  இந்திய பெண்கள் மிக பலசாலி கள் என்பதையும், சூழ்நிலைகளை தைரியமாக எதிர்கொள்ளும்
ஆற்றல் உள்ளவர்கள் என்று கூறி அனைவரின் கைதட்டலைப் பெற்றார் தோழர் ராஜேஸ்வரி. பெண்கள் தந்தை கணவர் மகன் ஆகியோரைப் சார்ந்தே வாழவேண்டும் என்ற நிலையில் இருந்து மாறவும் சுயச்சார்புடன் வாழ வேண்டும் என்ற அண்ணல் அம்பேத்கர் எடுத்த நடவடிக்கைகள் பற்றியும்  கூறினார்.
பேருக்கு அல்ல
பெண்கள் மேன்மை
உண்மையில் எப்போது.? என வந்திருந்த அனைவரும் சிந்திக்க தூண்டும் வகையில் அமைந்தது அவரது உரை.
பிறகு தோழர் ராமாராவ் தமிழ் மாநிலத் தலைவர் அவர்கள் தம்முடைய உரையில் விருப்ப ஓய்வு பெற்று நம் சங்கத்தில் சேர்ந்த வர்களை வாழ்த்தி வரவேற்றார். பெண்கள் அதிகம் பேர் இருப்பதனால் அவர்களையும் இணைத்து சமுதாயப் பிரச்சினைகளில் குழுவாக செயல்படுவோம் என்றார்.
தோழர்.D.கோபாலகிருஷ்ணன்  அகில இந்திய துணைத்தலைவர் பெண்கள் சமூகத்தில் பெரும்பகுதியானாலும்  உரிய ஒதுக்கீடுகள் கிடைக்வில்லை., எல்லா அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள்  என்று சொல்லி வந்தாலும்
 33 சதவீத ஒதுக்கீடு இதுவரை நிறைவேற்றப்பட வில்லை என்றும் அதற்கான போராட்டத்தை நாம் அனைவரும் முன்னெடுக்க வேண்டும் என்றும் பென்ஷன் அனாமலி , CGHS பற்றியும் விரிவாகப் பேசினார்.
தோழர்.மேரிலில்லிபாய் வாழ்த்திப் பேசினார்.
தோழர் செல்லம்மாள் முற்போக்கு பாடல் பாட,
Traffic Branchல் முதல் முறை பெண்கள் தின கூட்டம் என்பதை பதிவுசெய்யும் வண்ணம் தோழர்.............
ன் மகள் அனுப்பிய கேக்  கர கோஷங்களுடன்,
அனைவரும் "we shall overcome " என்ற சர்வதேசீய பாடலைப் பாட  வெட்டப்பட்டது.
தோழர்.சுந்தர் நன்றி கூற கூட்டம் நிறைவுபெற்றது. VRS2019 optees 50 பேர் ஆயுள் கால உறுப்பினர் ஆனது இன்றைய கூட்டத்தின் சிறப்பு.


1 comment:

  1. தோழர் ஆனந்தம் பாலாஜி யின் மகள் அனுப்பிய....என வரவேண்டும்.

    ReplyDelete