Saturday 7 March 2020


சர்வதேச மகளிர் தினம்  08.03.2020
பிறப்பில் சேயாக, பருவத்தில் இளமங்கையாக, தலைவனிடம் தலைவியாக, சேய்க்கு தாயாக என, பிறப்பு துவங்கி இறப்பு வரை, பல்வேறு பரிமாணங்களில் பயணித்து, பிரமிக்க செய் யும் பெண்கள், என்றுமே போற்றுதலுக்கு உரியவர்கள் !
இன்றைக்கு பெண்கள் கால் தடம் பதிக்காத  துறையே இல்லை. 'ஆணுக்கு நிகர் பெண் ' என்ற முழக்கம் போய், ஆணுக்கு ஒரு படி மேல் பெண் 'என்ற நிலை மாரி வருகிறது.
தென்னக ரயில்வே யில் இன்றைக்கு (07.03.2020)மூர் மார்க்கெட் புற நகர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு திருவள்ளூர் வரை சென்று மீண்டும் 10.50க்கு  திரும்ப வரும் மின்சார ரயிலை இயக்கும்  பைலட், Guard, டிக்கெட் பரிசோதகர்கள், பாதுக்காப்பு மற்றும் துப்புரவு பணிகளில் ஈடுபடும் அனைவரும் பெண்களாகவே இருப்பார்கள்  என்ற செய்தி
     "சாதனைகளோடு சரித்திரம் படைக்கின்ற
         கற்பக விருட்சம் தான் பெண்கள்"
என்பதை வெளிப்படுத்து கிறது. இன்று விமான பைலட் ஆகவும் உள்ளனர் பெண்கள். நமது பாதுகாப்பு துறையில் பெண்களுக்கு என்று தனி command பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்று உச்ச நீதி மன்ற தீர்ப்பின் படி தனி பிரிவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
பொறுமை, சகிப்பு தன்மை க்கு இலக்கணமே பெண்கள் தான்.
இவ்வளவு பெருமைகள் கொண்ட 'மகளிர் தினத்தில் ' அவர்கள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள்.
தோழமையுடன்
V. ராம ராவ், மாநில தலைவர்
ஆர் வீ  மாநில செயலாளர்
மற்றும்
மாநில சங்க அனைத்து நிர்வாகிகள்.


No comments:

Post a Comment