Tuesday 30 April 2019



இன்று 30.04.2019 கடலூர் SSA BSNL நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட ஏப்ரல் 30 2019 முதல் பணி ஓய்வு பெறும் தோழர்கள் T.அன்பழகன் DE TNV,  P. இராதா பாய் JTO KAC,  K.குமார் TTA TNV   R. வேலாயுதம் TTA VLU   P.முரளி தாஸ் TTA  CDM,   M.விசுவாலிங்கம்  TTA VDC ,  A.,ரத்தினம் TTA VLU ,V.நல்லதம்பி TTA VEPPUR ,  R.கற்பகம் AS.TT VLU ஆகியோருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடத்தப்பட்டது .
தொழிற்சங்க நிர்வாகிகள் AIBSNLPWA தோழர்கள் PJ ,மற்றும்  NT வாழ்த்துரை வழங்கினர். நிர்வாகம் சார்பில் GM , DGM CFA ,DGM CM ,AGM Admin , SDE OL மற்றும் Unit officers பாராட்டுறை வழங்கினர். ணி ஓய்வு பெறும் தோழர்கள் அனைவரும் ஏற்புரை நிகழ்த்தினார்கள்அனைவரும் BSNL - வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம் என்று சொல்லியது பாராட்டுக்குரியது . வளர்த்துவிட்ட இந்த BSNL.நிறுவனத்தை மறககக்கூடாது. என்றும் கூறினார்கள் .
இன்று ஒய்வு பெறும் ஒன்பது பேரில் ஆறு உறுப்பினர்கள் நம் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் விரைவில் 800 உறுப்பினர் இலக்கினை அடைய உள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
மாவட்ட சங்கதிற்காக
N.திருஞானம்
முன்னாள் மாவட்ட செயலர்.



Saturday 27 April 2019


Since the Lok sabha election results are to be announced on        23-05-2019, the  AGB meeting of our Salem West has been postponed to 27th May 2019 Monday, instead of 24th May 2019. Our leaders have conveyed their opinion to change the date of the meeting.  Please inform this change of Date to all our members. Your good cooperation is highly solicited and request you all to make the AGB meeting  a grand  success.
With Fraternal Greetings
T.S.Raghupathy.
District Secretary,
Salem west


Friday 26 April 2019


மாவட்ட செயலர்கள் கவனத்திற்கு  
Adalat தில் விவாதத்திற்கு 
மாநில சங்கம்
மூலம் எடுக்க வேண்டிய 
பிரச்சனைகளை 
மே 10 திற்குள் அனுப்பி வைக்கவும். மாவட்டங்கள் நேரடியாக அனுப்பினால்
 நகல் ஒன்றை   மாநில சங்கத்திற்கு  
அனுப்பிவைக்கவும். 
                                    -----மாநில செயலாளர்

Thursday 25 April 2019

Department Of Telecommunications has released the date of Pension adalat to be held in Chennai on 21-06-2019 Friday at 1400 hours in The Hall of Inspiration, Annaroad Telephone Exchange, Dams Road Chennai 2. The Format for submission of Grievance is furnished below. The Last date to send Grievance with relevant Documents is on or before 21-05-2019 .
To 
Joint Controller of Communication Accounts,
O/o Principal Controller of Communication Accounts, TN Circle,
1st Floor,  TNT Complex,
60 Ethiraj Salai, 
Chennai -8
60 00 08

Sunday 21 April 2019

மயிலாடுதுறை கிளையின் 9-வது கிளைக் கூட்டம் இன்று 21.04.2019 தோழர் R.சண்முகவேல் தலமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மா..செ. தோழர் R.ஜெயராமன் கலந்து கொண்டு, மாநில செயற்குழு,SAMPAAN, நிதி நிலமை பற்றி சிறப்புரை ஆற்றினார். 45 தோழர்,தோழியர் கலந்து கொண்டனர். தோழர் செந்திலாதிபன் கூட்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
தோழியர். S.V.பாஞ்சாலி நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது.
                                                                      500+
                                                450
Department Of Telecommunications has released the date of Pension adalat to be held in Chennai. This adalat is for those who had retired from DOT, BSNL Tamilnadu Circle, Chennai Telephones , STR and STP. Relevant date particulars are furnished below.
To send Grievance with full details as prescribed in the Proforma along with requisite Documents is on or before 21-05-2019.
To 
Joint Controller of Communication Accounts,
O/o Principal Controller of Communication Accounts, TN Circle,
1st Floor,  TNT Complex,
60 Ethiraj Salai, 
Chennai -8
60 00 08
Adalat will be held on 21-06-2019 Friday at 14-00 hours in The Hall of Inspiration, Anna Road Telephone Exchange, DAMS Road, Chennai 60 00 02.

Monday 15 April 2019

சி சி   ஆஃபீசிஸ் ல் விசாரித்த தின்  அடிப்படையில்  அடுத்த  Adalat கூட்டம் 2019  ஜூன்  இரண்டாவது  வாரத்தில் நடைபெறும்   
----மாநில  செயலாளர்

Sunday 14 April 2019


 13-04-2019 அன்று காலை 10-30 மணியளவில் திரு.D.பாண்டித்துரை தலைமையில் பொதுமேலாளர் அலுவகத்தில் நடைபெற்றது. 
ஜாலியன்வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டு துவக்கநாளில்
அந்நாளில் மரணமுற்ற தியாகிகளின் நினைவேந்தலுடன் காஷ்மீரில் தீவிரவாதிகளால் படுகொலைக்கு ஆளான 40 இந்திய எல்லை பாதுகாப்பு வீரர்களின் மரணத்திற்கும், கிளையின் மூத்ததோழர் வைரவன் இறப்பிற்கும் ஆபரேட்டர் கதிரேசன் அவர்களின் மனைவி மறைவிற்கும் தேவகோட்டை AL.சுப்பையா அவர்களின் மகன் மறைவிற்கும் ஒருநிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கிளைச்செயலர் சுந்தரராஜன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கூட்டத்தில் 15 மகளிர் உட்பட 66 பேர் கலந்து கொண்டனர்.
மாவட்டத் தலைவர் P.முருகன் அவர்களும் மாவட்டச் செயலர் N.நாகேஷ்வரன் அவர்களும் காரைக்குடி கிளை உறுப்பினர்களின் தீர்க்கப் பட்ட பிரச்னைகள் பற்றியும் தீர்க்கப்படாமல் தேங்கியுள்ள பிரச்னைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தனர். 
மருத்துவப்படி மருத்துவபில்கள் பட்டுவாடா பற்றியும் கும்பகோணத்தில் நடந்துமுடிந்த மாநில செயற்குழு முடிவுகள் பற்றியும்  தெரிவித்தனர்.
 2018 ஏப்ரல் மாதத்திலிருந்து 2019 மார்ச் மாதம் வரை பணிநிறைவுபெற்ற தோழர்கள் Without Voucher-ல் மருத்துவப்படி பெறுவதற்கு உரிய படிவங்களை தர செயலர் வேண்டுகோள் விடுத்தார்.
 NFTE-ன் மாவட்டச்செயலரும் ஓய்வூதியர் கணக்கதிகாரியுமான V.மாரி அவர்கள் VRS, BSNL இன்றையநிலை ஓய்வூதியர் பிரச்னைகளை தீர்த்த தனது அனுபவங்கள் பற்றி குறிப்பிட்டார்AO (Pension) பதவி தனக்கு கிடைத்த வரமென்றும் மூத்த தோழர்களுக்கு
சேவைசெய்ய இந்தப்பதவி உதவிகரமாக இருந்தது என்றும் குறிப்பிட்டார்.
இணைச்செயலர் S.துரைபாண்டியன் நன்றிகூறி கூட்டத்தை முடித்துவைத்தார்.
பங்குனி-சித்திரை மாதத்து வெயிலை பொருட் படுத்தாமல் கூட்டத்தில் கலந்து கொண்டோர் அனைவரும் பாராட்டுதலுக்குரியவர்கள்.
அதுமட்டுமல்லாமல் மருத்துவப்படி பெற்றோர் மனமுவந்து கிளைவளர்ச்சிக்கு நன்கொடை தந்தது பெரிதும் பாராட்டுக்குரியது.



13 4 2019  சனிக்கிழமை அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நல சங்கம் தஞ்சை மாவட்டத்தின் மாதாந்திரபொதுக்கூட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது .காலை  பத்து முப்பது மணிக்கு தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் சுமார் 150 தோழர்களும் தோழியர்களும் கலந்துகொண்டு சிறப்பாக நடைபெற்றது .மாவட்ட தலைவர் தோழர் மதுரை ராஜேந்திரன் தலைமை ஏற்க தோழர் வி.சாமிநாதன் மாவட்ட செயலர் முன்னின்று நடத்த தோழர் ஏகே தனபாலன் கடவுள் வாழ்த்து இசைத்திட தோழர் .அய்யனார் இணைச் செயலர் வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர் பிரின்ஸ்  செயல் தலைவர் தோழர் கே தனபாலன் கௌரவ தலைவர் மற்றும் தோழர் பிரான்சிஸ் சேவியர் மாநில அமைப்புச் செயலர் ஆகியோர் சங்க செயல்பாடுகள் பற்றி வாழ்த்தி பேசினார்கள்.
தோழர் வி. சாமிநாதன் மாவட்ட செயலர் வருகின்ற மாதாந்திர பொதுக்கூட்டத்தில் சென்ற செப்டம்பர் 19 1968 போராட்டத்தில் பங்குபெற்று விழுப்புண் பெற்ற தோழர்கள் தோழியர்கள் வருகின்ற மாதாந்திர பொதுக்கூட்டத்தில் சிறப்பிப்பது பற்றியும் நமது மாவட்ட சங்க ஓய்வூதியர் கதிரவன் இருபத்தைந்தாவது எடிசன் அடுத்த மாதம் வெள்ளி விழா கொண்டாட்டமாக அமைய இருப்பதால் அதற்கு நமது தோழர் கே. முத்தியாலு நமது மத்திய சங்க துணைத் தலைவர் அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நல சங்கம் அவர்களை அடுத்த பொதுக்கூட்டத்திற்கு அழைத்து வந்து சிறப்பாக நடக்க இருப்பதாக அறிவித்தார்கள். மற்றும் இன்றைய மாவட்ட சங்க செயல்பாடுகள் பற்றியும் சிறப்பாக உரையாற்றி நிறைவு செய்தார்.
தோழர் கே. சந்தானகோபாலன், மாவட்ட  துணைத் தலைவர் தற்போதைய IDA, MRS  பேமெண்ட் பற்றியும் SAMPANN  பற்றிய செய்திகளையும் நமது ஓய்வூதிய மாற்றத்தின் இன்றைய நிலையைப் பற்றியும் நாம் நமது சங்கத்திற்கு தவறாமல் நிலுவை இல்லாமல் சந்தா செலுத்த வேண்டிய அவசியத்தையும் நமது மாவட்ட சங்கத்தின் மாண்புகளையும் திறம்பட செயல்படுகின்ற விதத்தினையும் மற்ற கிளைகளுக்கு முன்னுதாரணமாய் நாம் நடப்பது பற்றியும் சிறப்பானதொரு உரையாற்றி நிறைவு செய்தார். தோழர் எம் இருதயராஜ் ஆன்மீக மருத்துவ குறிப்புகளை பகிர்ந்தளித்தார். பிறகு இந்த மாதம் பிறந்தநாள் அமையப்பெற்ற தோழர் தோழியர்களின் பிறந்தநாள் விழாவும் சென்ற மாதம் ஓய்வுபெற்ற 3 தோழர்களின் மணி விழாவும்   சந்தன மாலை அணிவித்து ஆளுயர ரோஜா மாலைகள் அணிவிக்கப்பட்டு கேக் வெட்டப்பட்டு அவரவர் குடும்ப உறுப்பினர்களுடன் வாழ்த்து கோஷங்கள் விண்ணதிர இனிதாக கொண்டாடப்பட்டது.
தோழியர்  மல்லிகா சுகுமாரன் சென்ற மாதம் நடைபெற்ற உலக மகளிர் தினத்திற்கு ஒத்துழைத்த அனைத்து சங்க உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார். முடிவாக எம் கணேசன் அலுவலக செயலர் நன்றி நவில மதிய தஞ்சை புகழ் சிறப்பு விருந்து உடன் கூட்டம் இனிதே நிறைவேறியது. தோழர் தோழர் கே சந்தானகோபாலன் துணைத் தலைவர் விழாவின் புகைப்படங்கள் எடுத்து தொகுப்பினையும் தொகுத்து விழா காணொளியையும் தயாரித்து நமது சங்கத்தின் சார்பாக பதிவு செய்தார்கள்.
இப்படிக்கு,
வி. சாமிநாதன்,
மாவட்ட செயலர்,
தஞ்சை மாவட்டம்.