Sunday 29 August 2021

 

தோழர்களே!
26-08-2021 அன்று நடைபெற்ற நமது பொதுக்குழுவில்
34 தோழர்கள் கலந்து கொண்டனர். பொதுகுழுவை கிளைத் தலைவர் தோழர். SVC குரு தலைமை ஏற்று நடத்த, கிளைச் செயலாளர் தோழர் RG ரங்கன் அனைவரையும் வரவேற்றார்.  இடைப்பட்ட காலங்களில் மறைந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தியப்பின், தலைவர் தமது
உரையில் நமது கிளையின் செயல்பாடுகளை தெளிவுப் படுத்தினார். சிறப்புரையாக  நமது மாவட்ட செயலாளர் தோழர் C துரைசாமி பேசுகையில்,  இன்றைய நிகழ்வுகலான Medical allowance, CGHS, MRS card, இன்னும் மற்ற பிரச்சனைகள் சம்மந்தமாக சிறப்புரையாற்றினார். ஆய்படு பொருள் மீது  விவாதம் நடந்தது, நிதி அறிக்கையை கிளைப் பொருளர் தோழர் காளிமுத்துசாமி சமர்ப்பிக்க, பொதுக்குழு ஏற்று கொண்டது. உதகை AIBSNLPWA கிளை தோழரும் NFTE BSNL தலைவருமான தோழர் K பாலசுப்பிரமணி  மற்றும் BSNLEU  மாவட்ட செயலர் தோழர் மகாலிங்கம் ஆகியோர் வாழ்த்தி பேசினர், தோழர் KV கணேஷ் அவர்கள் கிளையின் செயல்பாடுகளை வாழ்த்தி பேசியதோடு, ஓய்வூதியர்  நலன் கருதி Finger Print Machine வாங்குவதற்கு ரூபாய் 2000/. நன்கொடை வழங்கினார் நாம் நன்றியோடு பெற்றுக் கொண்டோம். இறுதியில் தோழர் RG ரங்கன் பொதுக்குழுவில் கலந்துகொண்ட  அனைவருக்கும் நன்றி கூறினார்.  பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.இந்த பொதுக்குழு சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு  நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நமது AIBSNLPWA குன்னூர் கிளையின் மனமார்ந்த நன்றிகள்!

Friday 27 August 2021

 

14.08.2021 அன்று நடை பெற்ற மாநில செயலக கூட்ட முடிவின் படி, இன்று (27.08.2021) CGHS Additional Director திரு சண்முகநாதன் அவர்களை மாநில தலைவர் தோழர் V.ராமராவ், மாநில செயலாளர் R. வெங்கடாசலம் , மாநில துணை செயலாளர் தோழர் S.சுந்தரகிருஷ்ணன் மூவரும் சந்தித்து, நமது ஓய்வூதியர் கள் சென்னையில் உள்ள MIOT, BILLROTH  மற்றும் பிற மருத்துவ மனைகளில் உள் நோயாளியாக சேர்ந்து Treatment பார்த்து கொள்ள இயலாத சூழ்நிலை குறித்து விளக்கமாக கடிதம் கொடுத்து விவாதித்தோம். MIOT- பொறுத்த வரை அவர்களுக்கு கொடுக்க வேண்டிய Bill கள் அனைத்திற்கும் காசோலை அனுப்பி விட்ட தாகவும், அவர்களுக்கு payment சென்று விட்டதற்கான தகவலை எதிர் பார்த்து இருப்பதாகவும் தெரிவித்தார்மேலும் Billroth மருத்துவ மனையில் Beds availability இல்லாத காரணத்தினால் தான் admission இல்லை என்றும் தெரிவித்தார். பெங்களூருவில் அப்போல்லோ நமது ஓய்வூதியர்களுக்கு Empanel லில்  உள்ளது போல் சென்னை யிலும் இருந்தால் கூடுதல் வாய்ப்பாக இருக்கும் என்று கேட்டதற்கு, சென்னை அப்பல்லோ  , அவர்களாக வரவில்லை . நாங்களாக ( CGHS நிர்வாகம் ) அப்பல்லோவை அணுகுகிறோம் என்று தெரிவித்தார்இன்றைக்கு CGHS கொடுக்கும் rates 2014 ம் ஆண்டு நிர்ணயிக்க பட்டது என்றும் அதை மாற்றினால் தான் பல மருத்துவ மனைகள் தானாக வருவார்கள். இதை உங்கள் போன்ற ஓய்வூதியர்கள் அமைப்பு தான் டெல்லி மட்டத்தில் முயற்சி எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
நெல்லை போன்று திருச்சி யிலும் ஒரு மருத்துவ மனை empanel  செய்ய வேண்டும் என்று கோரிய தற்கு, SRM Institute முன் வந்து இருப்பதாக வும் விரைவில் இறுதி செய்ய படும் என்றார்.
Addl Director அவர்கள் மிகவும் பரிவுடனும், அக்கறையுடனும் அவருக்கு இருக்கும் பணிகளுக்கு  இடையில் நம்முடைய கடிதத்தை பார்த்து வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்தார். நமது மாநில சங்கம் வெளியிட்ட CGHS Guide அவருக்கு கொடுத்தோம். அதை பெற்று கொண்டு நம்முடைய முயற்சியை பாராட்டினார்.
இந்த சந்திப்பு தற்போது உள்ள தேக்க நிலையை போக்கி முன்பு போல் தடை இல்லாமல் MIOT, மற்ற மருத்துவ மனைகளில் treatment எடுத்து கொள்ள வழி வகுத்துள்ளது. மேலும் எப்போது வேண்டுமானாலும் அவரை சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம் என்றார்.


 








Tuesday 24 August 2021

 



Letter to CGM TN CIRCLE  regarding the issue pertains to PENSIONER/FP ,Sending field reports for the FP  re-authorisation issues pending  with CCA due to non-submission of field reports from SSAs etc.




Saturday 21 August 2021

 


 

தஞ்சாவூர்

அன்பு தோழர்களே தோழியர்களே அனைவருக்கும் காலை வணக்கம். இன்று 20-08-2021 அகில இந்திய BSNL ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் பன்னிரண்டாவதுஅமைப்பு தின விழா தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. காலை பத்து முப்பது மணிக்கு விழா ஆரம்பமாகியது. சங்க கொடியினை மூத்த தோழர் எம் கலியன் அவர்கள் ஏற்றிவைக்க கூடியிருந்த அனைத்து தோழர்களின் வாழ்த்து கோஷங்கள் மற்றும் வெற்றி வணக்கத்துடன் விழா இனிதே ஆரம்பமாகியது.

பிறகு கூட்டம் மீட்டிங் ஹாலிலே தோழர் எம் ராஜேந்திரன் மாவட்ட தலைவர் தலைமையில் மாவட்ட செயலர் வி சாமிநாதன் மாநில அமைப்புச் செயலர் தோழர் பிரான்சிஸ் சேவியர் முன்னிலையில் மற்றும் மூத்த தோழர் தொழிற்சங்க தலைவர் கே எஸ் கே அவர்களின் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக தோழியர் சாரதா சந்தான கோபாலன் கடவுள் வாழ்த்து பாடிட மாவட்ட தலைவர் மதுரை ராஜேந்திரன் தலைவர் தலைமை உரையாற்றினார். அடுத்து மாவட்ட செயலர் வி சாமிநாதன் சிறப்புரையாற்றினார். தோழர்கள் M. இருதயராஜ் கே. சந்தானகோபாலன் என். நடராஜன் தோழியர் மல்லிகா சுகுமாரன் ஆகியோர் விழாவில் சங்க நிகழ்வுகள், ஆரம்ப காலம் முதல் இன்றைய நாள் வரை வளர்ந்த விதம் ஆற்றிய சாதனைகள் பெருமைகள் இனி ஆற்றவேண்டிய செயல்பாடுகள் பற்றி விரிவாக உரை நிகழ்த்தினார்கள்.

தோழர் பிரான்சிஸ் சேவியர் மாநில அமைப்பு செயலர் சிறப்பு வாழ்த்து உரை ஆற்றினார்.  தோழர் DG  அவர்களின் ஆடியோ உரையும் தோழர் K. முத்தியாலு அவர்களின் ஆடியோ உரையும் ஒலி பரப்பப்பட்டது.  தோழர் தட்சிணாமூர்த்தி நன்றி உரைக்குபின்  ஒரு மணிக்கு விழா முடிந்தது.

இந்த கொரோனா காலத்திலும் 25-க்கும் மேற்பட்ட அங்கத்தினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும் காட்சியாக அமைந்தது. கூட்டத்தின் இடையே சிற்றிடை உணவு (Snacks ) மற்றும் தேனீர் வழங்கப்பட்டு உறுப்பினர்கள் கௌரவிக்கப் பட்டார்கள்.

வாழ்க ஓய்வூதியர் ஒற்றுமை !      வளர்க நம்  AIBSNLPWA
தோழமை வாழ்த்துக்களுடன்
V. சாமிநாதன்,
மாவட்ட செயலாளர்,
AIBSNLPWA, 
தஞ்சாவூர்.


 கடலூர் மாவட்டம் 
AIBSNLPWA கடலுார் மாவட்ட சங்கம்.
இன்று  20.08.2021 காலை விழுப்புரம் பகுதியில் நம் நல சங்கத்தின் அமைப்பு தின விழா தலைவர். தோழர். வேதாசலம் தலைமையேற்க,
செயலர்.கணேசன் வரவேற்பு உரை நிகழ்த்தினார்.
நம் நல சங்கம் தொடங்கி 12 ஆண்டுகள் கடந்து 13 ஆவது அமைப்பு தின
விழா நாடு முழுவதும் உள்ள நம் தோழர்கள் மிக விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.
இன்றைய விழுப்புரம் அமைப்பு தின கூட்டத்தில்
தோழர்கள்D.சண்முகசுந்தரம்ஜோ .வெற்றிமீசை ஆறுமுகம் வாழ்த்துரை வழங்கினார்கள்மாவட்ட சங்க உதவி தலைவர்.N.T, மற்றும் மாவட்டத்தலைவர். P.ஜெயராமன் ஆகியோர் சங்க தொடக்க வரலாறு , இன்றைய தேதி வரை நம் சங்கம் ஆற்றி வரும் அரும் பெரும் பணிகள் பற்றியும் இந்த சாதனைகள் வெற்றி பெறுவதற்கு அனுதினமும் பாடுபட்டு வரும் அருமை தலைவர்களுக்கு பாராட்டும், வாழ்த்துக்களையும் நன்றியும் தெரிவித்து உரை நிகழ்த்தினார்கள்.
இன்றைய கூட்டம் ஆரம்பிக்கும் முன்பு நம் அகில இந்திய சங்க துணை தலைவர். தோழர்.D.G அவர்களின் ஆடியோ உரை அனைத்து தோழர்களும் கேட்டு பயனுறும் வகையில் ஒலிபரப்பு செய்யப்பட்டதுவிழா நிறைவாக  தோழர்.தக்ஷிணாமூர்த்தி நன்றி கூறிட விழா  இனிதே நிறைவு பெற்றது.