Wednesday 27 April 2022

 List of the Pensioners / Family Pensioners whose LC / DLC expired on  

30-04-2022 

(status as on 26-04-2022).

CCA TN Has released the list containing 14 pages. 

 Please click this LINK to see 14 Pages

Friday 22 April 2022

 

இன்று (21-04-2022) நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டம் மாட்ட சங்க தலைவர் திரு.M.P.வேலுசாமி.CGM.retd அவர்கள் தலைமையேற்று தலைமையுரை  ஆற்றினார்கள். மற்றும் மாநில துணைச்செயலர் திரு.K.ரமணி முன்னிலை வகுக்க கூட்டம் .திருமதி.ஆசா.D.G.M.retd கடவுள் வாழ்த்து பாட இனிதே ஆரம்பமாகி  நிழ்ச்சி நிரல் படி கூட்டத்தில் திரு. P.வேணுகோபால், திரு.K.கோவிந்தராஜ்.திரு.M.கோவிந்தராஜன் மற்றும் திரு.ரமணி ஆகியோர் மிக விரிவான முறையில் CGHS ன் சாதக பாதகங்களைப் பற்றி உறையாற்றினர்.  மேலும் செயலர் திரு.ரகுபதி மாவட்டச் சங்கத்தினை செயல் பாட்டினை ப்பற்றி விரிவாக கூறினார்.இதுவரை சங்கம் எடுத்த நடவடிக்கை பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் பேசினார்.
அடுத்ததாக மாநில மாநாடு பற்றி மிக விரிவான விவாதத்தை திரு.ரமணி துவங்கி வைத்து பேசினார்கள். இது குறித்து மற்றும் பல உறுப்பினர்கள் தங்களின் மேலான கருத்துக்களை எடுத்துக்கூறினர். மேலும் இம்மாநாடு பற்றி அடுத்து வரும் பொதுக்குழு கூட்டத்தில் நிலைமைக்கேற்ப  சங்க நடவடிக்கை எடுக்க முடிவெடுக்க ஒப்புதல் பெறப்பட்டது. உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு தகுந்த பதிலில் நிவர்த்தி கூறப்பட்டது.
திரு.கண்ணன்பாலா நன்றி கூற கூட்டம் முடிவடைந்தது
T.S.Raghupathy.
D.S.Salem west.





Thursday 21 April 2022

 

தோழமைக்குரிய மத்திய மாநில சங்க நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அனைவருக்கும் வணக்கம்.28/4/2022 இன்று நடைபெற உள்ள மாநில செயற்குழு கூட்டத்திற்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்பதில் கடலூர் மாவட்ட சங்கம் மகிழ்ச்சி கொள்கிறது. செயற்குழு கூட்டத்திற்கு வருகை தருகின்ற தோழர்கள் கீழ்க்கண்ட தோழர்களே தொடர்புகொண்டு அவர்களது தேவையை கூறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1.R அசோகன், மாவட்ட செயலாளர்.  9443200466

2.G கணேசன், விழுப்புரம் பகுதி ஒருங்கிணைப்பாளர். 9443537998

3.P சங்கரன் 9486107975

4.R அகஸ்டியன் 9442718535

Accomodation மற்றும் வாகன வசதி தேவைப்படும் தோழர்கள் தோழர் R அசோகன் மற்றும் தோழர் G கணேசன் ஆகியோர்களுக்கு கீழ்க்கண்ட விவரங்களை வாட்ஸ் அப்பில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1.  விழப்புரம் புகைவண்டி நிலையத்திற்கு மற்றும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு வரும் நேரம்.

2. உறுப்பினர்கள் எண்ணிக்கை மற்றும் அவர்களது பெயர்.

3.. செயற்குழு கூட்டம் முடிந்ததும் விழுப்புரத்திலிருந்து புறப்படும் நேரம். தோழர்களின் வசதிக்காக Google map கீழே இணைத்துள்ளோம்.

" உங்களது திருப்தியே எங்களின் கடமை"

AIBSNLPWA Cuddalore.

Shared route

From Villupuram Junction to Devi Bala Residency via NH332 and Trichy Main Rd/Trichy Trunk Rd.

9 min (2.9 km) , 9 min in current traffic

1. Head north on Bristak Rd toward VOC St

2. Turn left onto VOC St

3. Turn left onto Thiru Vi Ka St

4. Turn right onto NH332

5. At the roundabout, take the 1st exit onto Trichy Main Rd/Trichy Trunk Rd

6. Turn left onto KK Nagar Rd.

7. Turn right

8. Arrive at location: Devi Bala Residency.

CLICK HERE TO SEE THE ROUTE TO VENUE


 












Friday 15 April 2022

இன்று தஞ்சை மாவட்ட அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் கூட்டம் காலை 10 மணிக்கு தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில்  நடைபெற்றது. கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பொதுவாக IDA, MRS , பென்ஷன் ரிவிஷன் மற்றும் சென்ற மாதம் நடைபெற்ற உலக மகளிர் தினம் இன்னும் எவ்வாறு குறித்த நேரத்தில் சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்பன பற்றிய தங்களது கருத்துக்களை விளக்கி கூறவும் இறுதியில் அது சம்பந்தமாக நல்லதொரு முடிவும் எட்டப்பட்டது.

தோழர் எஸ் புருஷோத்தமன் வாழ்க வளமுடன் பேராசிரியர்  சிறந்ததொரு சொற்பொழிவு ஆற்றி மாவட்ட செயலர் வி சாமிநாதன் அவர்களின் 80வது ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு ஒரு வாழ்க வளமுடன் இயக்கத்தை சேர்ந்த ஒரு சிறந்த நூலினை பரிசாக அளித்து கௌரவித்தார். இன்றைய மதிய உணவிற்கான செலவினை இன்று பிறந்தநாள் கொண்டாடிய தோழர் விஜயகுமார் ரிட்டயர்டு டீஜிஎம் தானே முன்வந்து ஏற்றுக் கொண்டதற்கு சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கிறோம். நிறைவாக கே.சீனூ பொருளாளர் நன்றி நவில கூட்டம் நிறைவு பெற்றது