Monday 11 April 2022

 


தோழர்களே ,
AIBSNLPWA  சேலம் கிழக்கு மாவட்ட சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் 07-04-2022 வியாழன் அன்று சேலம் YMCA ஹாலில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட தலைவர் தோழர் K .P.ராஜ மாணிக்கம் தலைமை ஏற்று கூட்டத்தை நடத்தினார் . மாநில தலைவர் தோழர் V. ராமராவ் மற்றும் மாநில செயலர் தோழர் R .வெங்கடாசலம் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அகவை 80 ஐ அடைந்துள்ள தோழர் ராமாராவ் அவர்களின் சேவைகளை பாராட்டி இன்னும் பல ஆண்டுகாலம் நலமாக வாழ வேண்டப்பட்டது. அவர் பொன்னாடை   அணிவித்து கவுரவிக்கப்பட்டார் .
மாநில செயலரிர் .தோழர் RV அவர்களின் அரிய   தொய்வில்லா சேவைகளை பாராட்டி பொன்னாடை அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார் 
ஆகஸ்ட் திங்களில்  தமிழ் மாநில மாநாடு சேலம் மாநகரில் நடத்தப்பட உள்ளது . சிறப்பாக , வெற்றிகரமாக மாநாட்டினை நடத்திட குழுக்கள்,  குறிப்பாக வரவேற்பு குழு அமைப்பது குறித்து ஆலோசனைகள் செய்யப்பட்டன .
கூட்டம் சுவையான மத்திய உணவுடன் முடிவடைந்தது.  அன்று மாலையே மாநில தலைவர் , மாநில செயலர் மற்றும் சில முன்னணி தலைவர்கள் மாநாடு நடத்துவதற்கு ஏதுவான திருமண மண்டபங்களை பார்த்து வந்தார்கள் .  மண்டபம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை..
தோழமை வாழ்த்துக்களுடன் 
M .கணேசன் ,
மாவட்ட செயலர்
AIBSNLPWA  
சேலம் கிழக்கு 


      

No comments:

Post a Comment