Saturday 29 February 2020


இன்று 29.02.2020 கடலூர் தொலைதொடர்பு மாவட்ட AIBSNLPWA கள்ளக்குறிச்சி பகுதி நான்காம் ஆண்டு மாநாடும் .VRS.2019 OPTEES வரவேற்பு விழாவும் தோழர். பாலசுப்ரமணியம் தலைமையில் மிக சிறப்பாக நடந்தது .சங்க கொடியை தோழர்.செல்லையா ஏற்றிட தோழர்.R. துரை தேசியகொடி ஏற்றினார்

துவக்க உரை தோழர் V.அர்ஜுனன் .நோக்க உரை மாவட்ட தலைவர் தோழர்.P.ஜெயராமன் .வாழ்த்துரை வழங்கியவர்கள்.தோழர்கள். காந்தி SDE, ராஜவேலு SDE, சைதன்யா JTO , சாந்தி JE, N.திருஞானம் ,  KVR , A.ஜெயகுமார் , S.ரகோத்தமன், K.வீரராகவன், A.ராஜலிங்கம்,P.அழகிரி ,செல்வர்சு மேரி ,நாராயணசாமி,.G.S.குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு உரை தோழர். T.ரகுநாதன், தோழர்.K.சந்திரமோகன், மாநில துணை தலைவர் மற்றும் மாநில செயலாளர். தோழர். R.வெங்கடாச்சலம்  விரிவாக தற்போது VRS.2019 PROVISIONAL PENSION ,GPF LIC மற்ற எல்லா விபரங்களையும் தெளிவுபட எடுத்துக்கூறினார்.
கள்ளக்குறிச்சி பகுதியில் VRS ல் ஒய்வு பெற்றவர்களின் எண்ணிக்கை 25.  அதில் நம் சங்கத்தில் இணைந்தவர்கள் எண்ணிக்கை 22. இணைந்த தோழர்களுக்கு இதயம் கனிந்த நன்றியினை காணிக்கையாக்குகிறோம்.
முடிவில் தோழர்.R.ராஜேந்திரன் நன்றி கூறினார்.


I am really happy to know that all VRS optees who did not get PPO got provisional pension.
This gives me the utmost satisfaction. Our efforts have yielded the desired result.
I thank the DoT officers, officials in CCA office for doing this job quite efficiently
DG.



மாவட்ட செயலர்களின் கவனத்திற்கு...
7வது ஊதிய குழுவின் பரிந்துரையின் அடிப்படை யில் நமக்கு பென்ஷன் revision கொடுக்க வேண்டும் என்று மாநிலங்கள் அவை உறுப்பினர் திரு சண்முகம் அவர்கள் 12.12.2019 அன்று எழுப்பிய கேள்விக்கு நமது துறை  அமைச்சர் மாண்புமிகு ரவி ஷங்கர் பிரசாத் அவர்கள், BSNL ன் நிதி நிலைமை மோசமாக உள்ளதால், ஊதிய மாற்றம்மும் அதை அடுத்து ஓய்வுதியர் களுக்கு பென்ஷன் revision ம் பரிசீலிக்க முடியாது என்று எழுத்து பூர்வமாக தெரிவித்த பிறகு, 8.1.2020ல் பெங்களூருவில் கூடிய மத்திய செயலக கூட்டத்தில் நீதி மன்றத்தை நாடி, தீர்வு காண்பது என்று விவாதிக்க பட்டு, அதற்கான நடவடிக்கை மேற்கொள்வது என்றும், இதற்கான ஒப்புதலை கோரக்பூர்-ல் மார்ச்-ல் நடை பெறும் மத்திய செயற்குழுவில் ஒப்புதல் பெறுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.  இந்த முடிவுக்கு துணை பொதுச்செயலாளர் தோழர் முத்தியாலுவும், உதவி பொதுச்செயலாளர் தோழியர் ரத்னாவும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
வரும் 15, 16 ல் மத்திய செயற்குழு கூட உள்ள நிலையில் 4 பக்க அறிக்கை ஒன்றை அனைத்து மாவட்ட செயலர்களுக்கும் தோழர் முத்தியாலு  அனுப்பி உள்ளார். ஆனால் இந்த  நிமிடம்  வரையில் மாநில செயலாளரான  எனக்கு தகவல் இல்லை.
மாநில சங்கத்தை பொருட்படுத்தாமல் நேரடியாக மாவட்டங்களுக்கு எதிர் மறையான கருத்துகளை தெரிவித்து மத்திய சங்க துணை பொதுச்செயலாளரே செயல்பட்டு இருப்பது அமைப்பு ரீதியான கட்டுபாடுகளுக்கு முரணானது. அதுவும் மத்திய செயற்குழு விரைவில் கூட உள்ள நிலையில் பொறுத்து இறுக்காமல்.
எனவே அந்த அறிக்கை யை உறுப்பினர்களுக்கு கொடுக்க வேண்டாம் என கேட்டு கொள்கிறேன். அமைப்பு ரீதியான முடிவுக்கு கட்டுபட்டு முன்னேறுவதுதான் இது வரை நாம் பின் பற்றி வந்த பாதை
ஆர் வீ 
மாநில செயலாளர்

Saturday 22 February 2020


VRS 2019
அருமைத் தோழர்களே!தோழியர்களே! கடந்த 2020   ஜனவரியில் விருப்ப ஓய்வில் நமது குடந்தை SSA பகுதியில் 216 தோழர், தோழியர்கள் விருப்ப ஓய்வில் சென்றுள்ளனர். அவர்களுக்குத் தேவையான விருப்ப ஓய்வு விண்ணப்பத்தை நமது சங்கத்தின் மூலம் தயார் செய்து கொடுத்துள்ளோம். வெற்றிகரமான விருப்ப ஓய்விற்குப் பிறகு 179 நபர்கள் நமது சங்கத்தில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு குடந்தை மாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களைக் கூறி வருக! வருக என இரு கரம் கூப்பி வரவேற்கிறோம். உறுப்பினராக நமது சங்கத்தில் இணைப்பதற்கு உதவிய குடந்தை பகுதியில் தோழர். R.ஜெயராமன், தோழர்.A.,வெங்கட்ராமன், தோழர்.N.இசக்கிமுத்து, மயிலாடுதுறை பகுதியில் தோழர். R.சண்முகவேல், தோழர். R.செந்திலாதிபன், நாகைப் பகுதியில் தோழர். வேலுச்சாமி, காரைக்கால் பகுதியில் தோழர். N.தனபாலன்,மா..செ, தோழர். …
பகுதிவாரியாக உறுப்பினர்கள் சேர்க்கை
  
                      கும்பகோணம்     -      76/95
                      மயிலாடுதுறை   -       65/71
                      நாகப்பட்டினம்   -       20/32
                      காரைக்கால்        -       18/18

இதற்கு உதவி செய்த NFTE மாவட்டச் செயலர் தோழர். விஜய் ஆரோக்கியராஜ், AIBSNLEA மாவட்டச் செயலர் தோழர். விநாயகமூர்த்தி, SNEA மாவட்டச் செயலாளர் தோழர். கிருஷ்ணன் ஆகியாருக்கு AIBSNLPWA குடந்தை மாவட்டச் சங்கத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாவட்டச் செயலாளர்,
AIBSNLPWA,
கும்பகோணம்.



திருச்சி மாவட்டம் அரியலூர் கிளையில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் VRS ல் ஒய்வு பெற்று நம் சங்கத்தில் இணைந்தவர்களுக்கு  சங்கத்தின் சார்பாக ஒரு அருமையான பாராட்டு விழா நடைபெற்றது . ஜெயங்கொண்டம் தொலைபேசி நிலையத்தில் அழகிய ஷாமியானா அமைக்கப்பெற்று திரு அருள் பிரான்ஸிஸ்  DE  ( Retd On VRS ) அவர்கள் தலைமையில் , மாயகிருஷ்ணன் SDE முன்னிலை வகிக்க பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது.கிளைசெயலர் தோழர் V .செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.
இக்கூட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் ஓய்வு பெற்றுள்ள 11 தோழர்கள் எல்லோருமே நம் சங்கத்தில் சேர்ந்ததுதான் மேலும் தங்கள் மனைவி, மக்கள் , உற்றார் உறவினர் களுடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அத்தனை தம்பதிகளுக்கும் சால்வை போர்த்தப்பட்டு , சந்தன மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
தோழர் ஆறுமுகம் அரியலூர் கிளை செயலர் , M .மாரிமுத்து, சத்யா JTO , OFC JTO  மற்றும் பல தோழர்கள் பாராட்டி, வாழ்த்தி பேசினார்கள். சுமார் 50 தோழர்கள் கலந்துகொண்ட இக்குடும்ப விழா முடிவில் தோழர் V .ரங்கநாதன் நன்றி உரை வழங்க கூட்டம் இனிதே நிறைவடைந்தது .

All esteemed members and Office Bearers of Puducherry District AIBSNLPWA have worked meticulously in unison and have brought 73 VRS retirees out of 91 to our fold. The particulars are given below. Hats off to all members and welcome to all New Members.





































Other District Secretaries are requested to make a tabular column like the above one and fill up the particulars of VRS optees joining details in your District and send it to Circle Union at the earliest.
----RV
CS. 
One More Achievement by Puducherry.
7 வருடங்களாக கிடைக்காமல் இருந்த குடும்ப ஓய்வூதியம்  Smt. A. சுமதி w/o late  Sri. M.ஆறுமுகம், STS (Retd), புதுச்சேரி அவர்களுக்கு, மாநிலச் சங்கத்தின் முயற்சியாலும், மாவட்டச் சங்கத்தின் ஒத்துழைப்பாலும் தற்போது பென்சன் நிலுவைத் தொகை ரூ.11,04970 மற்றும் சனவரி 2020-க்கான குடும்ப ஓய்வூதியம் ரூ.15,963 ஆகியவை தரப்பட்டுள்ளது.
மாநிலச் சங்கத்திற்கு மாவட்டச் சங்கத்தின் பாராட்டுக்கள். நன்றிகள் = .அன்பழகன், மாவட்டச் செயலர், புதுச்சேரி

Yes. Com PKB took much pain initially and Com. Anbalagan DS Pondy  followed meticulously,,Com Deenadayalan ACS pursued in Indian Bank for payment and the collective efforts of all resulted in success.
RV 
CS
CONGRATS ANBALAGAN AND OTHET OFFICE BEARERS
V .RAMA RAO 
CIRCLE PRESIDENT



Thursday 20 February 2020



111 .இது வரை 3231 service books  பென்ஷன் விவரங்களுடன் Jt . CCA அலுவலகம் வந்துள்ளது.
2.குடந்தை, தூத்துக்குடி, கோவை, குன்னுர் கடலூர், விருதுநகர், காரைக்குடி  ஆகிய மாவட்டங்களில் இருந்து இன்னும் வரவில்லை
3.இம்மாத இறுதிக்குள் சுமார் 1000 பேருக்கு முழு பென்ஷன் SAMPANN மூலம் கிடைப்பதத்திற்கு பணிகள் நடை பெற்று கொண்டு இருக்கின்றன. மீதி உள்ளோர்க்கு provisional pension இம்மாதம் போடப்படும்.
4.மார்ச் இறுதிக்குள் 50%ம் மற்றும் ஜூன் இறுதிக்குள் முற்றிலும் SAMPANN மூலம் பென்ஷன் வழங்க target நிர்ணயம் செய்ய பட்டுள்ளது.
5.GPF இது வரை 4039 payment போடப்பட்டு விட்டது. மீதம் உள்ள அனைத்தும் இந்த மாத முடிவில் payment செய்யப் படும்

Extra incement case our lawyer is moving with Concerned Judge to  pre-pone  the date mentioned in the morning and expecting intimation from our lawyer.
V. Rama Rao  CP


Today I spoke to CCA TN Shri Pradhan and thanked him on behalf of VRS retirees for issuing EPPPOs speedily .
He said that till yesterday 250 EPPOs were issued and it will continue till 24th of this month. This is for your information please.
--DG.

Monday 17 February 2020

மனக்குமுறல் .
'வெளியேறலாம்'
சட்டத்தை மதிக்காத இந்நாட்டில் இருப்பதை விட தொலை தொடர்பு துறை வழக்கில் உச்ச நீதி மன்ற நீதிபதி அருண் மிஸ்ரா வேதனை
உச்ச நீதி மன்ற ஆணையை மதிக்க வேண்டாம் என, ஒரு சாதாரண அதிகாரி எப்படி கூறலாம்? இது தான் இந்நாட்டின் சட்டமா?  நீதி மன்றங்களை இப்படித்தான் நடத்துவீர்களா? இது எனக்கு மிகுந்த மன வேதனையை தந்துள்ளது இந்த நீதிமன்றத்திலும், ஏன், இந்த நீதித்துறையிலேயே பணியாற்ற கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டு உள்ளது
நான் இது வரை இப்படி கோபபட்டதில்லை. ஆனால், இந்த நாட்டில் இப்படிபட்ட ஒரு நடைமுறையில் எப்படி பணி யாற்றுவது என, எனக்கு தெரியவில்லை
சொலிசிட்டர் ஜெனரல் என்ற முறையில், கடிதத்தை திரும்ப பெறுமாறு, அந்த அதிகாரி இடம் கேட்டு இருக்க வேண்டும். அவ்வாறு கேட்கபட்டதா? இதை எல்லாம் எங்களால் பொறுத்து கொள்ள முடியாது.
இதுபோன்ற நடை முறையில் எங்களால் செயல் பட முடியாது . இந்த  அளவிற்கு அந்த அதிகாரிக்கு துணிச்சல் இருந்தால், உச்ச நீதி மன்றம் எதற்க்கு? அதை மூடி விடலாம்
உச்சநீதிமன்ற ஆணைக்கு ஒரு அதிகாரி தடை போடுகின்றார் என்றால், அவர் என்ன, இந்த உச்ச நீதி மன்ற தை விட மேலானவரா? இந்த நாட்டில் இருப்பதை விட, வெளி ஏறுவதே மேல் என்ற எண்ணம் எழுகிறது .
அந்த அதிகாரி மீதும், பாரதி ஏர்டெல், வோடோ போன் ஐடியா, டாடா டெலி services நிறுவங்களின் சீராய்வு மனு தள்ளுபடி ஆன பிறகும், அவை, நிலுவையில் ஒரு பைசா கூட செலுத்த வில்லை. இந்திய நீதி துறை யின் ஆரோக்கியம், அது செயல் படும் விதம் ஆகியவை கவலை அளிக்க கூடிய வையாக உள்ளன
நிறுவனங்களுக்கு உதவவே அந்த அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார். அவராக அதை அனுப்பி இருக்க முடியாது. அவர் கடிதம் ஏழுதியத்தின் பின்னணியில் பணம் விளையாடியதா என, தெரியவில்லை
நீதி மன்ற அவமதிப்புக்கு உள்ளான அவர் சிறைக்கு போகவும் கூடும்.