Tuesday 4 February 2020

VRS SEND OFF PARTY IN KUMBAKONAM.
இன்று 28.01.20ல் குடந்தையில் நடைபெற்ற பொது மேலாளர் அலுவலக 53 அதிகாரிகள், ஊழியர்கள் விருப்ப பணி ஓய்வு பாராட்டு விழா  திரு.C.V.வினோத், முதன்மைப் பொது மேலாளர் அவர்கள் தலமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பல சங்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். நமது சங்கத்தின் சார்பாக சங்கத்தின் பொறுப்பாளர்கள் அல்லாமல் சங்கத்தின் உறுப்பினர் தோழர். தங்கபழம் வாழ்த்துரை வழங்கி நமது சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தது வித்தியாசமான ஒரு நிகழ்வாக இருந்தது. விழாவின் முத்தாய்ப்பாக பணி ஒய்வு பெறும் அனைவரும் இணைந்து ஒப்பந்த தொழிலாள்கள் சுமார் 40 பேருக்கு ரூபாய் 1000 மதிப்புள்ள மளிகை சாமான்கள் வழங்கியது மனித நேயத்தை எடுத்துக்காட்டியது. அனைத்து நல் உள்ளங்களுக்கும் மாவட்டச் சங்கம் தனது நன்றியையும், பராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
ஜெயராமன்.R
மாவட்ட அமைப்புச் செயலாளர்,
AIBSNLPWA,
கும்பகோணம்.

No comments:

Post a Comment