Saturday 29 February 2020


மாவட்ட செயலர்களின் கவனத்திற்கு...
7வது ஊதிய குழுவின் பரிந்துரையின் அடிப்படை யில் நமக்கு பென்ஷன் revision கொடுக்க வேண்டும் என்று மாநிலங்கள் அவை உறுப்பினர் திரு சண்முகம் அவர்கள் 12.12.2019 அன்று எழுப்பிய கேள்விக்கு நமது துறை  அமைச்சர் மாண்புமிகு ரவி ஷங்கர் பிரசாத் அவர்கள், BSNL ன் நிதி நிலைமை மோசமாக உள்ளதால், ஊதிய மாற்றம்மும் அதை அடுத்து ஓய்வுதியர் களுக்கு பென்ஷன் revision ம் பரிசீலிக்க முடியாது என்று எழுத்து பூர்வமாக தெரிவித்த பிறகு, 8.1.2020ல் பெங்களூருவில் கூடிய மத்திய செயலக கூட்டத்தில் நீதி மன்றத்தை நாடி, தீர்வு காண்பது என்று விவாதிக்க பட்டு, அதற்கான நடவடிக்கை மேற்கொள்வது என்றும், இதற்கான ஒப்புதலை கோரக்பூர்-ல் மார்ச்-ல் நடை பெறும் மத்திய செயற்குழுவில் ஒப்புதல் பெறுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.  இந்த முடிவுக்கு துணை பொதுச்செயலாளர் தோழர் முத்தியாலுவும், உதவி பொதுச்செயலாளர் தோழியர் ரத்னாவும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
வரும் 15, 16 ல் மத்திய செயற்குழு கூட உள்ள நிலையில் 4 பக்க அறிக்கை ஒன்றை அனைத்து மாவட்ட செயலர்களுக்கும் தோழர் முத்தியாலு  அனுப்பி உள்ளார். ஆனால் இந்த  நிமிடம்  வரையில் மாநில செயலாளரான  எனக்கு தகவல் இல்லை.
மாநில சங்கத்தை பொருட்படுத்தாமல் நேரடியாக மாவட்டங்களுக்கு எதிர் மறையான கருத்துகளை தெரிவித்து மத்திய சங்க துணை பொதுச்செயலாளரே செயல்பட்டு இருப்பது அமைப்பு ரீதியான கட்டுபாடுகளுக்கு முரணானது. அதுவும் மத்திய செயற்குழு விரைவில் கூட உள்ள நிலையில் பொறுத்து இறுக்காமல்.
எனவே அந்த அறிக்கை யை உறுப்பினர்களுக்கு கொடுக்க வேண்டாம் என கேட்டு கொள்கிறேன். அமைப்பு ரீதியான முடிவுக்கு கட்டுபட்டு முன்னேறுவதுதான் இது வரை நாம் பின் பற்றி வந்த பாதை
ஆர் வீ 
மாநில செயலாளர்

No comments:

Post a Comment