Wednesday 25 October 2023

 CONDOLENCES

V.N. SAMPATHKUMAR,  ANNANAGAR BR.SECRETARY

Com.V.N.Sampathkumar branch Secretary Anna nagar is a sincere and dedicated active person of our Association.He came to Ahmedabad to attend CWC as personal visit.On 19th Oct,I happened to see him at CCA office.He attended the Hon. CAT Chennai for each and every hearing day whenever extra increment Case came for hearing .His demise is a great loss to our Association.AIBSNLPWA TN CIRCLE express deepest condolence to the bereaved members and comrades of Anna nagar branch and  Chennai Telephones .  We pray that the departed Soul Be placed to Rest in Peace.  S.Sundarakrishnan CS AIBSNLPWA TNC

தோழர் சம்பத்குமார் , அண்ணா நகர் கிளை செயலாளர் திடீர் மரணம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அவர் NFTE இயக்கத்திலும் பின்னர் நமது ஓய்வூதியர் அமைப்பிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு செயலாற்றினார். கடைசியாக அவரை அகமதாபாத் மத்திய செயற்குழுவில் சந்தித்தேன். அவருடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர் GN அவர்களின் மிக நெருங்கிய நண்பர். என் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்டவர். அவருடைய குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். DG

 𝙲𝙾𝙽𝙳𝙾𝙻𝙴𝙽𝙲𝙴𝚂

We are deeply saddened and shocked to hear  the news of sudden demise of Comrade Sampath Kumar.  He was very much devoted to association and contributed for the growth of our organization. He is remembered for his valuable contribution to our association. He was seen in recent cwc at Ahmedabad. It is a big loss to Annanagar Branch in particular.  We mourn his demise and share our grief with his family & friends.

V Vara Prasad / GS


Wednesday 18 October 2023

 NEWS FROM OUR CIRCLE SECRETARY

LIFE CERTIFICATE SUBMISSION FOR NON SAMPANN PENSIONERS.   Comrades,
Good Morning, 
No of Non migrated Pensioners who receive pension  from CPPC of Banks as on 30th Sep 2023 are 3100. Out of which, 2300 are clear cases. 800 are disputed cases like outstanding loan, other problems etc.                   
1 During the month of Oct 2023 ,2300 pensioners will be migrated to SAMPANN. For them LC validity will be extended by 9 months as default.  Their LC WILL be valid upto 31.07.2024. They need not worry about submission of LC during Nov 2023 .  Bank will not accept LC even  if they want to submit to Bank.                                
2. Left out 800 Pensioners will be migrated to SAMPANN during NOV.2023. The decision regarding recovery of outstanding loan etc has been discussed with BANK authorities by  Dept.of Telecom.    During Migration ,their LC validity will be extended upto AUGUST 2024 by default. If they are interested to submit LC to respective bank, they can submit. Thereby,validity will be extended upto Nov 2024 by default. Bank authorities will transfer the updated LC to CCA.                        
In the above two cases ,Pension will be continued to draw from NOV 2023 onwards  even if LC is not submitted by the above non migrated pensioners. This information is posted after discussion with JOINT CCA PVA.             
3.CCA Office is arranging LC Camp Mela at Coimbatore, Trichy, Chennai. and Madurai etc. Dates will be intimated  later. 
Thank you.
S.Sundarakrishnan 
CS AIBSNLPWA TN CIRCLE CHENNAI


சென்னை Joint CCA  அவர்களிடம் SAMPANN மாற்றத்தில் விடுபட்டவர்கள் குறித்து விவாதிக்கபட்டது.
வங்கியில் இருந்து ஓய்வூதியம் பெறும் 3100 ஓய்வூதியர்கள் இதுநாள் வரை SAMPANN இணையத்திற்கு மாற்றம் செய்யப்படவில்லை.   இம்மாதம்  அக்டோபரில் 2300 பேர் மாற்றம் செய்யப்படவுள்ளனர். அவர்களுக்கான...வாழ்வு சான்றிதழ் 31/07/2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வங்கிக்கு சென்று வாழ்வு சான்றிதழ் கொடுத்தால் வங்கி ஏற்றுக்கொள்ளாது.
மிச்சமுள்ள 800 ஓய்வூதியர்கள் வங்கிக்கடன் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இன்னும் SAMPANN இணையத்திற்கு மாற்றம் செய்யப்படவில்லை. அவர்கள்...நவம்பர் மாதம் SAMPANN  இணையத்திற்கு  மாற்றப்படுவார்கள். அவர்களுக்கு வாழ்வு சான்றிதழ் 31/08/2024 வரை நீட்டிக்கப்படும். அவர்கள் நவம்பர் மாதம் வங்கியில் சென்று வழக்கம் போல் கொடுத்தாலும் அவர்களுடைய வாழ்வு சான்றிதழ் SAMPANN இணையத்தில் பதிவேற்றம் செய்து நவம்பர் 2024 வரை  நீட்டிக்கப்படும். இதுவரை... மாற்றம் ஆகாத ஓய்வூதியர்களுக்கு அவர்கள் வாழ்வு சான்றிதழ் வழங்காவிட்டாலும் கூட  நவம்பர் 2023 முதல் ஓய்வூதியம் தடையின்றி தொடர்ந்து வழங்கப்படும்.
 
மதுரை...கோவை...திருச்சி... சென்னை ஆகிய இடங்களில் வாழ்வு சான்றிதழ் முகாம்கள் நடத்த சென்னை CCA அலுவலகம் உரிய ஏற்பாடுகள் செய்து வருகின்றது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
 
தோழமையுடன்...
S.சுந்தர கிருஷ்ணன்
மாநிலச் செயலர்.

Tuesday 17 October 2023

 

இன்று 17.10.2023 நமது மாவட்டச் சங்க  அலுவலகத்தில்  நமது உறுப்பினர்களின் வசதிக்காகவும், அலுவலக உபயோகத்திற்காகவும் புதிதாக கலர் பிரிண்டர், (ஜெராகஸ் & ஸ்கேன் இணைந்தது) ₹ 12,500க்கு  வாங்கி  நிறுவி உள்ளோம்.  தோழர்கள் தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை இனி நமது சங்க அலுவலகத்திலேயே வந்து கொடுக்கலாம். அதனுடன் கேமரா, ரேகை பதிவு கருவி வாங்கி இணைத்துள்ளாம். மொத்தம் 12500+4500=17000 வரை செலவு ஆகியுள்ளது.

அக்டோபர் , நவம்பர் & டிசம்பர் மாதங்களில் லைப் சர்டிபிகேட் முடிவடைந்த தோழர்களின் பெயர்களை வாட்சப் குரூப்பில் வெளியிட்டு , சம்பந்தப்பட்ட தோழர்களின் கைப்பேசிக்கும் SMS செய்தி அனுப்பப்படும். அவர்கள் நேரிடையாக வந்து வாழ்நாள் சர்டிபிகேட் சங்க அலுவலகத்திலேயே கொடுக்கலாம் என்றும் செய்தி வெளியிட்டுள்ளார்கள்

கும்பகோணம் தோழர்களின் நற்பணி சிறக்க வாழ்த்துகிறோம்.











Monday 16 October 2023

 

15- 10 -2023 ஞாயிற்றுக்கிழமை தஞ்சை அகில இந்திய BSNL  ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் மாதாந்திர கூட்டமும் ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையுடன் ஓய்வூதிய மாற்றத்திற்கான நீதிமன்ற தீர்ப்பின் வெற்றி விழாவும் ஒன்று சேர்ந்து தஞ்சை மேரிஸ் கார்னர் மெயின் தொலைபேசி வளாகத்தில் காலை  பத்து முப்பது மணிக்கு விழா நிகழ்ச்சிகள் செயல் தலைவர் எம் இருதயராஜ் தலைமையில் தோழர் வீ. சாமிநாதன் மாநில தலைவர் முன்னிலையில் தோழர் அய்யனார் மாவட்ட செயலர் சிறப்பான முறையில் கூட்டத்தினை நடத்தினார். இன்றைய கூட்டத்தில் 125க்கும் மேற்பட்ட தோழர் தோழியர்களும் பங்கு கொண்டு சிறப்பித்தனர்.

மாநிலத் தலைவர் தனது சிறப்பு உரையில் நமது சங்கம் ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று வரை பெற்று தந்துள்ள ஓய்வூதிய மாற்றம் மற்றும் 78.2ல் பெறுவதற்காக நாம் நடத்திய போராட்டங்கள் மற்றும் தற்போதைய ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைப்படி நீதிமன்ற தீர்ப்பு பற்றி ஒரு முழுமையான அங்கத்தினர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து உரையாற்றி அமர்ந்தார். நிகழ்வின் முடிவாக தோழர் சண்முகம் மாவட்ட துணை செயலாளர் நன்றி உரையாற்றிட மதிய தஞ்சை பாரம்பரிய இன்சுவை உணவுடன் விழா இனிதே நிறைவுற்றது.

இன்றைய கூட்டத்தின் முழு செலவையும் தோழியர் லைலா பானு ரூபாய் 15,000 அளித்து தனது மணிவிழா நிகழ்வை மிக்க மகிழ்ச்சியுடன் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடு கொண்டாடி மகிழ்ந்தார். நன்றி.

கூட்டத்தின் தொகுப்பு
கே .சந்தான கோபாலன் மாவட்ட முதன்மை ஆலோசகர் தஞ்சாவூர்.