ஏ ஐ
பி எஸ் என் எல் சிறப்பு கலந்தாய்வு கூட்ட நிகழ்ச்சி செய்தி.
இன்று24 5 2019 வெள்ளிக்கிழமை
காலை சரியாக பத்து முப்பது மணி அளவில் தஞ்சை தந்தி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள என்எப்டீஇ அலுவலக அறையில் நமது தஞ்சை மாவட்ட ஏ ஐ பி
எஸ் என் எல் ஓய்வூதிய ர் நல சங்கத்தின்
கலந்தாய்வு கூட்டம் தலைவர் மதுரை ராஜேந்திரன் தலைமையில் செயல் தலைவர் பிரின்ஸ் மற்றும் மாநில அமைப்புச் செயலர் பிரான்சிஸ் சேவியர் முன்னிலை வகிக்க மாவட்ட செயலர் சாமிநாதன் முன்னின்று கூட்டத்தினை சிறப்புற நடத்தினார். 15க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வருகின்ற 8 6 2019 ல் நடைபெற இருக்கின்ற
இரண்டாம் சனிக்கிழமை மாதாந்திர கூட்டத்துடன் தோழர் கே முத்தியாலு மத்திய
சங்க துணை பொது செயலாளர் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து தஞ்சை ஓய்வூதியர் கதிரவன் வெள்ளி விழா வெளியீட்டு விழா தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் நடத்துவது எனவும் தோழர் வீ . சாமிநாதன் மாவட்ட செயலர் தஞ்சை ஓய்வூதியர் கதிரவன் தொகுப்புரையை வழங்கி சிறப்பிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இத்துடன் சென்ற செப்டம்பர் 19 1968ல் நடைபெற்ற புகழ்பெற்ற
போராட்டத்தில் பங்குபெற்று விழுப்புண் பெற்று சிறந்து விளங்கும் தோழர்களின் செயல்திறன்களை பாராட்டி பொன்னாடை அணிவித்து சிறப்பு சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிப்பது எனவும் அகவை எழுவது முடிவுற்ற தோழர் தோழியருக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்விப்பதற்கும் மற்றும் அகவை 75 நிறைவு பெற்ற தோழர் தோழியருக்கு பொன்னாடையுடன் நினைவு பரிசு வழங்கி கௌரவிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. வந்திருந்த அனைத்து உறுப்பினர்களின் ஒருமித்த கலந்துரையாடல்
முடிவின்படி விழாவினை எவ்வாறு சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
வழக்கம்போல் மாதாந்திர கூட்டத்தில் நடைபெறும் பிறந்தநாள் மற்றும் மணி விழா நிகழ்ச்சிகளையும் நடத்துவது என்றும் குறிப்பிட்ட நேரத்தில் காலை சரியாக ஒன்பது முப்பது மணி அளவில் அனைவரும் தவறாது வந்திருந்து கூட்டத்தினை சிறப்பாக நடத்துவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. இத்துடன் விழாவின் அழைப்பிதழும் இணைக்கப்பட்டுள்ளது அனைத்து உறுப்பினர்களும் தவறாது கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுகோள் வைத்து நன்றி உரையுடன் கூட்டம் இனிதே முடிவுற்றது.
வாழ்க ஏ
ஐ பி எஸ் என்
எல் ஓய்வூதியர் நல சங்கம். வளர்க
அதனது தொண்டு.
இப்படிக்கு,
வீ. சாமிநாதன்,
மாவட்ட செயலாளர்,
தஞ்சை.
No comments:
Post a Comment