Thursday 21 December 2023

 

அன்புள்ள தோழர்களே தோழியர்களே பென்சனர் தின சிறப்பு கூட்டம் மேட்டூர் பொட்டனேரி சாந்தா திருமண மண்டபத்தில் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் கே பி ஆர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது தமிழ் தாய் வாழ்த்து உடன் துவங்கப்பட்டது தோழர் ராஜா உதவி செயலர்  அஞ்சலி வாசித்தார் தோழர் கணேசன் கிழக்கு மாவட்ட செயலாளர் வரவேற்புரை நிகழ்த்தினார் .
வாழ்த்துரை வழங்கியவர்கள்;
1 தோழர் பட்டாபிராமன் மாநில உதவி செயலர்
2. தோழர்  வேடியப்பன் மாநில உதவி தலைவர்
3. தோழர் கோவிந்தராஜ் தலைவர் மேற்கு மாவட்டம்,
4. தோழர் பலராமன் செயலர் மேற்கு மாவட்டம்,
5. தோழர் சுப்பிரமணி செயலாளர் தர்மபுரி,
6. தோழர் முனியன் தலைவர் தர்மபுரி,
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தோழர் வணங்காமுடி பாட்டு பாடி அனைவரையும் மகிழ்வித்தார். தோழர் நடராஜன் தஞ்சை அவர்கள் கவிதை வாசித்தார்.  சிறப்புரையாக தோழர் சுப்பராயன் மாநில உதவி செயலாளர்  பென்ஷன் தினத்தின் முக்கியத்துவம் பற்றியும் பென்ஷன் ரிவிசன் பற்றியும் சிறப்புரை ஆற்றினார்.
தோழர் வேணுகோபால் அகில இந்திய அமைப்புச் செயலர் நலச்சங்கத்தின் சாதனைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
 மேட்டூர் கிளைச் செயலர் தோழர் மணி பாலன் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
 இப்படிக்கு, 
சேலம் கிழக்கு மாவட்டம்


No comments:

Post a Comment