Friday, 30 November 2018

22-11-2018 அன்று நமது உண்ணாவிரத போராட்டம் முடிந்த பிறகு தமிழ் மாநில சங்கம் மற்றும் சென்னை தொலைபேசி மாவட்ட மாநில சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்ததற்கு இணங்க மாவட்ட சங்கங்கள் நன்கொடை அனுப்பியுள்ளன .மாவட்ட செயலர்கள் கொடுத்துள்ள தகவல் பிரகாரம் 6 லட்சத்திற்கு மேல் பணம் கொடுக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் .  இதுவரை சென்னை தொலைபேசி மாநிலம் - ரூ 1 லட்சம் , சேலம் மேற்கு - ரூ 1 லட்சம் , வேலூர் - ரூ 50 ஆயிரம் , கோவை - ரூ 20 ஆயிரம், தூத்துக்குடி - ரூ 20 ஆயிரம், சேலம் கிழக்கு -ரூ 10 ஆயிரம் , கடலூர்  ரூ 25 ஆயிரம், காரைக்குடி - ரூ 20 ஆயிரம், மதுரை - ரூ 25 ஆயிரம், மத்திய சங்கம் - ரூ 20 ஆயிரம், தமிழ் மாநிலம் - ரூ 50 ஆயிரம் என பணம் அனுப்பியுள்ள. 
தஞ்சை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட சுமார் 400 குடும்பங்களுக்கு தலா 2 புடவைகள், 2 உள்ளாடைகள் , 2 லுங்கிகள் ,2 போர்வைகள், 2 துண்டுகள், பாய் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு ஆர்டர் கொடுத்து பணமும் கொடுக்கப்பட்டு விட்டது. மேலும் தேவைப்படுகிற உணவுப்பொருட்கள், மெழுகு வத்தி, தீப்பெட்டிகள் ஆகியவைகளும் வாங்கி எடுத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் ஓரிரு நாட்களில் பட்டுக்கோட்டையில் உள்ள தோழர் சிவ சிதம்பரம் அவர்களிடம் அனுப்பி வைக்கப்படுகிறது.
டிசம்பர் மாதம் 3 அல்லது 4 தேதிகளில் தஞ்சை மாவட்ட தோழர்களுடன் தமிழ் மாநில தலைவர் , மாநில செயலர், மாநில பொருளாளர், மத்திய சங்க துணை பொது செயலர் , சென்னை தொலைபேசி மாநில நிர்வாகிகள் குழு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
STR  சென்னை ரூ - ஒரு லட்சம் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது பாராட்டுதலுக்குரியது. நிவாரண நன்கொடை பெற விரைந்து நடவடிக்கைகள் எடுத்துள்ள அனைத்து மாவட்டங்களுக்கு பாராட்டுக்கள் .
தோழமை வாழ்த்துக்களுடன் 
ஆர்வி ,
தமிழ்மாநில செயலர்.



When appeals were given by the Secretary and Treasurer For Gaja Cyclone Disaster relief Fund, STR members poured money like anything and the total has crossed Rs. 1,10,000/- 
(One  lakh and ten thousand) and still the fund is growing. The credit goes to all our esteemed members.
Comrades please Keep the flame of STR glowing on and on!!!


Thursday, 29 November 2018

மதுரை பெருமை கொண்டது தமிழ் சங்கத்தால் அன்று 
இன்று பெருமை கொள்வது அதீத நம் சங்கத்தின் வளர்ச்சியால்.
ஆம். இன்று AIBSNLPWA  மதுரை மாவட்ட சங்க உறுப்பினர் எண்ணிக்கை 1800+
தலைவர், செயலர் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்கள்.
இரண்டாயிரத்தை விரைவில் எட்டிப்பிடிக்க இதய நிறை வாழ்த்துக்கள்.


Tuesday, 27 November 2018


சேலம் மாவட்டம் கஜா புயல் நிவாரண நிதியாக இதுவரைரூ 1,00,000/- 
( ரூபாய் ஒரு லட்சம்) திரட்டியுள்ளது. இன்னமும் நிதி திரட்டி வருகிறது. முன்னணி தோழர்கள் ரமணி , ரகுபதி மற்ற தோழர்களின் முயற்சிகளை பாராட்டுகிறோம்.
 கஜா புயலில் சிக்கி , உடமைகளையெல்லாம் பறிகொடுத்து திக்குத்தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கும் மக்களின் துயர் துடைக்க நட்புக்கரம் நீட்டியுள்ள சேலம் மாவட்ட தோழர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.
STR Chennai  கோட்டமும் உங்கள் இலக்கை நெருங்கி வருகிறது. STR  கோட்ட உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் தளரா முயற்சிக்கு வானம் கூட தொட்டுவிடும் தூரம் தான்

தூத்துக்குடி மாவட்டம்  உறுப்பினர்களின் எண்ணிக்கையில் சற்று குறைந்திருந்தாலும் ,உண்ணா நோன்பு போராட்டத்தில் காரமும் , வீரமும் குறையவில்லை. 80க்கும் மேற்பட்ட தோழர்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்கள்  இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் 1968 போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களில் 6 தோழர்கள் இந்த போராட்டத்திலும் அதே துடிப்புடன் கலந்து கொண்டு பங்கு கொண்டது பாராட்டுதலுக்குரியது. போராட்ட சிறப்புகளை தினசரி பத்திரிகைகள் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன
கும்பகோணத்தில் நடைபெற்ற உண்ணாவிரதத்தை அந்த பகுதியில் வெளிவரும் பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டுள்ளன. சிறிய மாவட்டம் ஆனால் போராட்ட உணர்ச்சி கொந்தளிப்பில் இணையில்லை
கும்பகோணத்தில் நடைபெற்ற உண்ணாவிரதத்தை அந்த பகுதியில் வெளிவரும் பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டுள்ளன. சிறிய மாவட்டம் ஆனால் போராட்ட உணர்ச்சி கொந்தளிப்பில் சளைத்தவரில்லை .

ஊட்டியில் கொட்டும் மழை, கடும் குளிர், பயங்கர நிலச்சரிவுகள் போராட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்ப முடியுமா ? ரோடு இருக்குமா ? நிலச்சரிவில் பாதைகள் பிளந்து இருக்குமா ? எதுவுமே நிர்ணயிக்க முடியாத சுழ்நிலை .இருப்பினும் இவை எதுவுமே நம் தோழர்களை மனம் தளர விடவில்லை. வீரத்துடன் ,துடிப்புடன் திரளாக கலந்து கொண்டனர் . இயற்கை இன்னல்களை பொருட்படுத்தாமல் உண்ணா நோன்பினில் கலந்து கொண்டு சிறப்பித்த அத்துணை உள்ளங்களுக்கு பாராட்டுக்கள்.


Monday, 26 November 2018


கரூர் தொலைபேசி நிலைய வளாகத்தில் நாளை  (27-11-2018 செவ்வாய் கிழமை) மாலை 5-00 மணி அளவில் ஒரு பெரிய பாராட்டு விழா AIBSNLPWA  சார்பில் நடைபெற  உள்ளது. 
அவ்வமயம் தோழர்.K.முத்தியாலு, துணைத்தலைவர், மத்திய சங்கம்  அவர்கள்,  தோழர் V.P. காத்தபெருமாள் துணைத்தலைவர் தமிழ் மாநிலம்  அவர்கள் , தோழர் R .வெங்கடாசலம் மாநில செயலர் , தமிழ் மாநிலம் ,அவர்கள், தோழர் அரியலூர் ஆறுமுகம் , சிறப்பு அழைப்பாளர் ,அவர்கள்,  ஆகியோர்  பாராட்டப்பட உள்ளனர்.
அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறோம்.
தோழமை வாழ்த்துக்களுடன் ,
விழா அமைப்பாளர்கள் ,
AIBSNLPWA  
கரூர் கிளை,
திருச்சி மாவட்ட சங்கம்.


Memorandum submitted to Sri Pradhan, CCA TNCircle addressed to Secretary,  DOT,  NewDelhi.
Comrades K. Muthialu, Deputy General Secretary,  V. Ramarao, Circle President,
R.Venkatachalam, Circle Secretary and  S. Thangaraj, Circle Secretary , Chennai Telephone Circle. 
CCA sincerely interacted and shared his, views.

Sunday, 25 November 2018

Salem District units of Salem East and Salem West conducted One Day Hunger Strike on 22-11-2018 combined. More than 200 members had gathered and made it a grand success. More than 6 dailies of Salem edition had published the glorious event.
Photos taken on the event are posted here.


Friday, 23 November 2018

As per the call given by AIBSNLPWA CHQ, strict fast was observed in all districts. The secretaries of respective  districts have sent photos which  have been posted here. You can see the photos by clicking the respective LINKS given along with the distict names.

Click here to see COVAI Photos

Click here to see all Cuddalore fast photos

Click here to see all Dharmapuri photos

Click here to see ERODE photo

KARAIKUDI photos to see Click HERE

For Kumbakonam photos CLICK here

To see all Madurai Photos Click here

Click here to see all Nagercoil photos

Click here to see all OOTY Photos

Click here to see Pudhucheri Photos

CLICK HERE TO SEE ALL SALEM PHOTOS

CLICK THE LINK TO SEE ALL THANJAVUR PHOTOS

CLICK HERE TO SEE ALL TIRUNELVELI PHOTOS

CLICK HERE TO SEE ALL VIRUDHUNAGAR PHOTOS

CLICK HERE TO SEE ALL VELLORE PHOTOS




தமிழ் மாநில 
அனைத்து மாவட்ட  செயலர்கள் 
கவனத்திற்கு 

நேற்று நடைபெற்ற கூட்டு ஆலோசனை கூட்டத்தில் தமிழ் மாநில சங்கம் மற்றும் சென்னை தொலைபேசி மாநில சங்கம் இணைந்து நிதி வசூல் செய்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரண நிதி வழங்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. 
அதன் படி தமிழ்மாநில சங்கம் ரூ 50,000/-,  வேலூர் மாவட்டம் ரூ 50,000/- , STR சென்னை மாவட்டம் ரூ 40,000/-, கோயம்புத்தூர்  மாவட்டம்  ரூ 40,000/- , திருநெல்வேலி மாவட்டம் ரூ 30,000/-  கடலூர் மாவட்டம் ரூ 25,000/- , திருச்சி மாவட்டம் ரூ 10,000/- அளிப்பதாக தெரிவித்துள்ளன . மற்ற மாவட்ட செயலர்களும் அவசர அவசியம் கருதி தங்கள் மாவட்ட சங்கத்தால் எவ்வளவு ரூபாய் கொடுக்க இயலும் என்று ஓரிரு நாட்களுக்குள் தெரிவித்தால் மாநில சங்கம் உடனடியாக அந்த நிதியினை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரணமாக அளிக்க இசைந்துள்ளது. அந்த ஒப்புக்கொண்டுள்ள நிதியை பின்னர் அந்தந்த மாவட்டங்கள் மாநில சங்கத்தின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தோழமை வாழ்த்துக்களுடன் ,
R .வெங்கடாசலம்.,
தமிழ் மாநில செயலர் 
AIBSNLPWA 
கடந்த வாரம் கஜா புயல் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் , திருவாரூர் , தஞ்சாவூர் , புதுக்கோட்டை ,கடலூர் ,திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத பேரழிவினை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், தென்னை , வாழை உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் அழிந்துள்ளன.ஏராளமான வீடுகள் , குடிசைகள் , கட்டிடங்கள் இடிந்து போயுள்ளன , சேதமடைந்துள்ளன .கடும் புயலின் கோரத்தாண்டவத்தில் ஏறத்தாழ 100 பேர் பலியாகி விட்டனர். நமக்கு வாழ்வாதாரமாக இருந்த ஆடு, மாடு போன்ற உயிரினங்கள் பலியாகி உள்ளன. பல மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளன.ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்து அடிப்படை மின் வசதிகள் முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. உண்ண உணவின்றி , குடிக்க நீரின்றி தவித்து வருகின்றனர் இங்கு வாழ்ந்து வரும் மக்கள்.
இந்தப் பேரழிவில் சிக்கித் தவித்துக்கொண்டிருப்பவர்களுக்கு நமது ஓய்வூதியர் நல சங்கத்தின் சார்பில் உடனடியாக உதவுகின்ற வகையில் நிவாரண நிதி வழங்க வேண்டுமென்று , ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் முடிவடைந்த பிறகு தமிழ்நாடு , சென்னை தொலைபேசி மாநிலம் மற்றும் சில மத்திய சங்க நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து நிதி உதவி வழங்க அறைகூவல் விடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மாவட்ட செயலர்கள், சென்னை தொலைபேசி மாநில கிளை செயலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இவ்வார இறுதிக்குள் நிவாரண நிதியை மாநில சங்கங்களுக்கு அனுப்பி வைக்க அன்புடன் அறைகூவல் விடுக்கிறோம்.
பாதிக்கப்பட்டோரின் விழி நீரைத் துடைக்க , இரு கரம் நீட்டுவோம். 
அவர்தம்  துயர் நீக்க அள்ளித்தருவோம் வெள்ளிப்பணத்தை. 
தோழமையுள்ள 
ஆர்.வெங்கடாசலம் , எஸ். தங்கராஜ்.
மாநில செயலர்கள்.