Monday, 16 January 2017


தஞ்சாவூர் தோழர்கள் தீபாவளி ,பொங்கல் ,தமிழ் புத்தாண்டு போன்ற விசேஷ நாட்களில் தங்கள் வீடுகளில் திருநாளை கொண்டாடிவிட்டு தொலைக்காட்சி பெட்டி முன்பாக அமர்ந்து பொழுதை கழிப்பதை விடுத்து அநாதை ஆசிரமங்கள், மனவளர்ச்சி குன்றிய மக்கள்  காப்பகம்  இடங்களுக்கு சென்று அவர்களுக்கு உணவு , புத்தாடைகள், மத்தாப்பு ஆகிய மன மகிழ்வு தரக்கூடிய அரிய சேவைகளை ஆத்மார்த்தமாக செய்து வருகிறார்கள். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள்.

இந்த பொங்கல் திருநாளினை 13-01-2017 அன்று தஞ்சையில் உள்ள " அன்பாலயம் " எனும் மன வளர்ச்சி குன்றிய மக்கள் ஆதரவு ஆலயத்திற்கு சுமார் 10 தோழர்கள் சென்று அங்குள்ள 45 மக்களுக்கு ( 40 ஆண்கள் + 5 பெண்கள்) + 5 பணியாளர்களுக்கு  பொங்கல்,, வெண்பொங்கல் வடை பாயாசத்துடன் அறுசுவை உணவளித்து ஒவ்வொருவருக்கும் தலா ஒரு கரும்பு  மற்றும் வாழைப்பழம் முதலியன அளித்து அவர்களுடன் ஒரு சில மணித்துளிகள் கழித்து அவர்களை மகிழ்வித்து வந்துள்ளனர்.
அன்பாலயம் மன நலம் காப்பகம் மட்டுமல்லாமல் தஞ்சை கடுவெளி வெங்கடேஸ்வரா ஆதரவற்றோர் ,முதியோர் இல்லம் (126 மக்கள் ) மற்றும் ஓசோனம் முதியோர் இல்லம் (94 மக்கள் ) ஆகிய மனித புனிதர்கள் வாழும் இடங்களுக்கும் மாதமிரு முறை அல்லது அதற்கு மேலும் சென்று உணவு,உடை போன்றவைகளை அளித்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
தஞ்சை தோழர்கள் மிக மகத்தான சேவைகளை செய்து வருவது மிகுந்த பாராட்டுதலுக்குரியது.
தமிழ் மாநில சங்கம் தஞ்சை தோழர்களை . வெகுவாக பாராட்டுகிறது.



4 comments:

  1. Ivarkalin Manithaneyam Valka.

    K Selvarajan Retd., DGM TN Circle Chennai

    ReplyDelete
  2. Ivarkalin Manithaneyam Valka.

    K Selvarajan Retd., DGM TN Circle Chennai

    ReplyDelete
  3. Tku vy much for ur comments. It will definitely aids to improve still further in our future and day to day activities please.
    K. Santhanagopalan Retd DE, AIBSNLPWA Dist. Branch. Vice president, Thanjavur.

    ReplyDelete