Wednesday 18 December 2019

Pensioners Day Celebration In Kumbakonam.
17.12.2019 அன்று காலை 10.30 மணி அளவில் தோழர் N.இசக்கிமுத்து அவர்கள் தலமையில் ஓய்வூதியர் தினம் குடந்தை சங்க அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. அது சமயம் 27க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தர்கள். தோழர் MSR ,அவர்கள் பேசும் பொழுது தமது ஓய்வூதியம் வந்த விதம், அதைப்பெற்றுத்தருவதற்கு போராடிய தலைவர்களின் போராட்டங்கள் பற்றி மிக விரிவாக எடுத்துரைத்தார். இன்றைய சூழ்நிலையில் பென்சன் ரிவிஷன் என்பது பே ரிவிஷன் செய்யாமல் செய்ய முடியாது என்பதை தனது தரப்பு விளக்கமாகக் கூளினார். நீதிமன்றத்தின் மூலம் பெறுவது என்பது காலதாமதமாகும், மேலும் சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டியதிருக்கும் என்று கூறினார்.
சங்க ஆலோசகர் தோழர். N.அனந்தன் தனது சிறப்புரையில், பென்சன் பெறுவதற்காக போராடிய தலைவர்களின் தியாகங்களைப் பற்றி மிக விரிவாக எடுத்துரைத்தார். தனது உரையில் இன்றைய முக்கிய விஷயமாக உள்ள பென்சன் ரிவிஷன் பற்றி விரிவாக பேசி தனது கருத்துக்களை பதிவு செய்தார். நமது அகில இந்திய தலைவர் தோழர் P.S.இராமன்குட்டி அவர்கள் பென்சன் ரிவிஷன் சம்மந்தமாக நீதிமன்றம் செல்ல உள்ள நிலையில் அதன் மீது கருத்துக்களைக் கூறுமாறு கொண்டிருந்தார். அதன்அடிப்படையில் தோழர் N.அனந்தன் அவர்கள் தன்னுடைய கருத்துக்கறயளைப் பதிவு செய்தார்.
1. MOC அமைச்சர் பென்சன் ரிவிஷன்- மறுத்து விட்டபோது, அதைப் பெறுவதற்கு நீதிமன்றத்தை அனுகினால்  என்பது காலதாமதம் ஏற்படும். நமக்கு வேறு வழி இல்லை என்கிற போது இது ஒன்றே தீர்வாகும்.
2. பே ரிவிஷன் இல்லாமல் பென்சன் ரிவிஷன் என்பது இல்லை என்கிற பொழுது நாம் ஏன் இடைக்கால நிவாரணமாக அடிப்படை ஓயவூதியத்தில் 5 அல்லது 10 சதவிகிதம் கொடுக்குமாறு கேட்கக் கூடாது.
அப்படி இடைக்கால நிவாரணம் கிடைத்தால் அதை பென்சன் ரிவிஷன் செய்யும் பொழுது அடஜஸ்ட் செய்து மீதியை கொடுக்கச் செய்யலாம் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
தோழர் சங்கரன், மாவட்டப் பொருளாளர் நன்றி கூற ஓய்வூதியர் தினக்கூட்டம் சிறப்பாக நடந்தேறியது. 
ஜெயராமன்.R
மாவட்ட அமைப்புச் செயலாளர்
AIBSNLPWA,

கும்பகோணம்.


No comments:

Post a Comment