Wednesday 25 December 2019


நமது மாவட்டச் சங்கம் சாதித்த
முத்தான மூன்று
 சாதனைகள்.
1.  மறைந்த தோழர் செலவகுமார், TM அவர்களின் மனைவி தோழியர் உஷா அவர்களுக்கு வரவேண்டிய குடும்ப ஓய்வூதியம் ஆண்டுக்கணக்கில் வராமல் இருந்தது. அதற்கான முயற்சியை நமது மாவட்டச் சங்கம் எடுத்தது. அதற்குத் தேவையான ஆவணங்களை மயிலாடுதுறை தோழர்கள் சண்முகவேல் மூலமாகப் பெறப்பட்டு அதை நமது மாநில சங்கத்துக்கு அனுப்பி நமது மாநில செயலரின் தொடர் முயற்சியால் அந்த தோழியருக்கு குடும்ப ஓய்வூதியம் ரூபாய் 7.2 லட்சம் கிடைத்திருக்கிறது.

2. மறைந்த தோழர் சந்திரசேகரன், மங்கநல்லூர் அவர்களின் மைனர் வாரிசு ஓவியா அவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் பெறுவதில் சட்டச் சிக்கல் இருந்தது. நமது சங்க ஆலோசகர் தோழர் அனந்தன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மயிலை தோழர். செந்திலாதிபன் அவர்களின் உதவியோடு கார்டியன் ஏற்பாடு செய்து அதற்கான ஆவணங்களை நமது மாநில சங்கத்திற்கு அனுப்பினோம். மாநில செயலரின் தீவிர செயல்பாட்டால் நிலுவைத் தொகை ரூபாய் 1.80 லட்சமும், மாதாமாதம் ஓய்வூதியமாக ரூபாய் 5595/- அந்த மைனர் வாரிசுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.
 நமது சங்கத்தின் மிக வயது (13) குறைந்த குடும்ப ஓய்வூதியர் இவராகத்தான் இருக்கும்.

3. தோழியர்.சூரியபிரபா, SDE,நன்னிலம அவர்களுடைய PPO வில்.கடைசி இலக்கம் தவறாக இருந்ததால் அவர்களிக்கு கிடைக்க வேண்டிய 78.2%  அரியர்ஸ் கிடைக்காமல் இருந்தது. அவர் தானாகவே முயற்சி செய்து எதுவும் நடக்கவில்லை என்றவுடன் நமது சங்கத்தை மயிலை தோழர் நாகராஜன், SDE மூலம் நம்மை அணுகினார். அதுவரை அவர் எந்த சங்கத்திலும் உறுப்பினராக இல்லை. நம்மை அணுகியவுடன் நாம் அதற்கான செயல்களை மாநில சங்கத்தின் மூலம் செய்து அந்த தோழயருக்கு அரியர்ஸ உடன் 31.10.2019 வரை ரூபாய் 2.8 லட்சம் பெற்றுக்கொடுத்து இருக்கிறோம். 

மேலே சொன்ன அனைத்திற்கும் உதவி செய்த தோழர்கள் அனந்தன், மாவட்ட ஆலோசகர், மயிலை தோழர்கள். சண்முகவேல, செந்திலாதிபன், நாகராஜன், மாநில செயலாலர் தோழர் வெங்கடாசலம் மற்றும் அனைத்து தோழர்களுக்கும், CCA அலுவலக அதிகாரிகள், ஊழியர்களுக்கும், வங்கி அதிகாரிகள், ஊழியர்களுக்கும் குடந்தை AIBSNLPWA மாவட்டச்சங்கம் தனது நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது. 
ஜெயராமன்.R
மாவட்ட அமைப்புச் செயலாளர்,
AIBSNLPWA
கும்பகோணம்.


No comments:

Post a Comment