Monday 23 December 2019


ஓய்வூதியர்தினம் மற்றும் அருணா அவர்களின்
நினைவேந்தல் நிகழ்ச்சி.
காரைக்குடியில் 20-12-2019 அன்று (வெள்ளிக்கிழமை)காலை 10-30 மணியளவில் திரு. D.பாண்டித்துரை அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சமீபத்தில் மறைந்த AITUC முன்னாள் பொதுச்செயலரும்
5 முறை பாராளுமன்ற உறுப்பினரும் 2 G ஊழலை ஊருக்கு ஊணர்த்திய வருமான குருதாஸ் தாஸ் குப்தா NFPTE ல் T3- ன் பொதுச்செயலராக செயலாற்றிய ஹர்சுல்கர் நமது சங்கத்தின் அகில இந்திய உதவிப்பொதுச்செயலராகவும் நெல்லை மாவட்டச்செயலராகவும் பணியாற்றிய தோழர் அருணா மற்றும் கிளை உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன், சுப்புராஜ் ஆகியோர் மறைவிற்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கிளைச்செயலர் சுந்தரராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். கிளைப்பொருளர் இராஜேந்திரன் தீர்க்கப்பட்ட பிரச்னைகள் பற்றிப்பேசினார்.
அருணா அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கீழ்கண்டோர் பங்குபெற்று உரையாற்றினர்
மாவட்டத் தலைவர் முருகன், மாவட்டத் துணைத்த லைவர்கள் T.S.இன்னாசிமுத்து, K.குமார், மாவட்டப் பொருளர்  பூபதி, மூத்த தோழர் துரைராஜ், காளீஸ்வரன், அய்யாக்கண்ணு, R.K.பாண்டியன், சிவகங்கை கிளைச் செயலர் திரு. சந்திரன், மாவட்ட துணைச்செயலர் சிவகங்கை இராமமூர்த்தி, முத்துக்கிருஷ்ணன், திருமதி. மீனாள்

பென்சன் ரிவிசன் சம்பந்தமாக ஜூனியர் முருகன் அவர்களும் ஓய்வூதியர் இறந்தால் மாநில அரசு சார்பில் இறுதிச்சடங்கிற்காக 50000 ரூ தரப்படுவதுபோல் ஏன் நமக்கும் பெற்றுத்தரக்கூடாது என்று சிவகங்கை ஜெயராமன் அவர்களும் கேள்விகள் எழுப்பினர்.

விருப்ப ஓய்வு கொடுத்துள்ள திரு. கணேசன் (SDE) அவர்கள் AIBSNLPWA சங்கம்தான் சாதிக்கப்பிறந்த சங்கம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம். அதனால் என்னைப் போன்ற பலர் இங்குதான் வருவார்கள் வருவோம் .இந்த சங்கத்தை பலப்படுத்துவோம் என்றார்.

78.2 பற்றி மாவட்டச்செயலர் நாகேஷ்வரன் விவரித்தார்.
மாநிலதுணைத்தலைவர் திரு.S.ஜெயச்சந்திரன் அவர்கள் அனைத்து விசயங்கள் பற்றியும் சிறப்புரையாற்றினார்.
இணைச்செயலர் துரைபாண்டியன் நன்றிகூறி கூட்டத்தை முடித்துவைத்தார்.
20 மகளிர் உட்பட 80 பேர் கலந்து கொண்டனர்.
    
காரைக்குடி SSA  பரமக்குடி கிளையில்
ஓய்வூதியர்தினக்கூட்டமும் அருணா அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியும்
22-12-2019 அன்று கிளைத்தலைவர் திரு.S. சங்கிலிராஜன் அவர்கள் தலைமையில் காலை 11-00 மணி அளவில் நடைபெற்றது.

கிளைஉறுப்பினர் குடும்பஓய்வூதியர் திருமதி.களஞ்சியம் அவர்கள் மறைவிற்கும் AITUC. தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா அவர்களின் மறைவிற்கும் அன்புத்தோழர் அருணா அவர்களின் மறைவிற்கும் அஞ்சலி செலுத்தி கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

தலைவர் தலைமை உரை நிகழ்த்திய பின் கிளைச்செயலர் இராமசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.

அருணா அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் காசிநாதன் மாவட்ட துணைச்செயலர்கள் பாலுச்சாமி, கணேசன் மாவட்டதுணைப்பொருளர் நாகநாதன் மற்றும் முருகேசன் ஆகியோர் அருணா அவர்கள் பற்றிய பல்வேறு நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்தனர்.

மாவட்டச்செயலர் நாகேஷ்வரன் ஓய்வூதியர்தினம் ஏன் ஒவ்வொரு டிசம்பர் மாதமும் நடத்தப்படுகிறது என்பது பற்றி விலாவாரியாக விளக்கினார். அத்துடன் BSNL ஓய்வூதியர்கள்
மறக்கக்கூடாத O.P. குப்தா மற்றும் வள்ளிநாயகம்,  60:40 உடைத்தெறிந்த நமது சங்கம் அதற்கு உறுதுணையாய் நின்ற முன்னாள் மத்தியஅமைச்சர் அனந்தகுமார் ஆகியோரையும் இந்த நாளில் நாம் மறக்க முடியாது என்றுரைத்தார்.
BSNL புத்தாக்கம், VRS, CGHS, பென்சன் ரிவிசன் போன்ற பல்வேறு பிரச்னைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
திரு.முருகேசன் அவர்கள் நன்றி கூட்டத்தை முடித்து வைத்தார்.

6 மகளிர் உட்பட 35 பேர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment