தோழியர் B.லதா, w/o late சுப்பிரமணியன் SDE,செம்பனார்கோவில் அவர்களுக்கு சென்ற டிசம்பர் 2017ல் இருந்து குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படாமல் இருந்தது. SBIல் ஏற்பட்ட காலதாமதித்தினால் இதுவரை PPO கிடைக்காமல் இருநதது. நமது சங்கம் முயற்சி எடுத்து SBI உடன் பல முறை தொடர்பு கொண்டு பேசியதன் பயனாக இன்று அந்த தோழியருக்கு PPO மற்றும் குடும்ப ஓய்வூதியம் சுமார் ரூபாய் 5 லட்சத்திற்கு மேல் பெற்றுக்கொடுத்து இருக்கிறோம. இதற்கு உதவி செய்த தோழர் அனந்தன் மற்றும் தோழர் ஜெயராமன் அவர்களுக்கு மாவட்டச் சங்கம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
R.JAYARAMAN,
Organising
Secretary,
AIBSNLPWA,
Kumbakonam
Today on 08
/12/2018 Tuticorin District AIBSNLPWA monthly meeting was held.
Com. Jeevanandam Vice president Presided over the meeting. Discussions about Pensioners Day , Gaja Puyal relief services by our leaders, the situation of 7th CPC Implementation and local problems in details.
Com. Ambigapathi
ACS, Com Subbiah DS, Barnabas Joint Secretary
and others participated in the discussion. Vote of thanks was given by Com K.Balu.
புதுச்சேரி மாதாந்திர பொதுக்குழு கூட்டம்
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மாதாந்திர பொதுக்குழு கூட்டம் நடப்பதுபோல இம்மாதமும் 08-12-2018 அன்று கூட்டம் நடந்தது. தலைவர் திரு.K.R.சிவகுமார் தலைமை தாங்கினார். 73 பேர் கலந்துகொண்டனர்.
29-11-2018 அன்று நடந்த செயற்குழு கூட்ட முடிவுகள் பற்றி செயலர் அன்பழகன் விவரித்துப் பேசினார். மற்ற சங்கங்கள் இணைந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு நமது சங்கம் ஆதரவு தெரிவிப்பது என முடிவெடுக்கப்பட்டது.
29-12-2018 அன்று நடக்கவுள்ள பென்சனர் தின விழா சிறப்பாக நடத்திட ஒவ்வொருவரும் ஒரு பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.
கெஜா புயல் பாதிப்பு நிவாரண உதவிகோரி நன்கொடை கேட்கப்பட்டது. ஊறுப்பினர்கள் நன்கொடை வழங்கினர். சில தினங்களில் மாநிலச் சங்கத்திற்கு அனுப்பிவிக்கபடும்.
வழக்கம்போல இரண்டாவது சனிக்கிழமையில் மனமகிழ்மன்றத்தில் கூட்டம் நடத்திடுவதுபோல இன்றைக்கு நடத்திட DGM (CFA) அவர்களின் வாய்மொழி உத்தரவின்பேரில் நேற்று மறுக்கப்பட்டது. 2017 முதல் இரண்டாவது சனிக்கிழமை மனமகிழ் மன்றத்தில் கூட்டம் நடத்திக்கொள்ள அப்போதைய P.G.M திரு. மார்ஷல் ஆண்டனி லியொ அனுமதி தந்து அதற்காக ரூ.100/- ஐ கட்டி, பிறகு GST வரியை சேர்த்து ரூ.118/-ஐ கட்டி கூட்டம் நடத்தி வரும் வேலையில் திடீரென மறுப்பதும், அதுவும் வாய்மொழிமூலம் மறுப்பதும் நியாயம் இல்லை. இதை DGM(CFA)- விடம், தலைவர், மாநில அமைப்புச் செயலர், மாவட்ட நிர்வாகிகள், மற்றும் NFTE மாவட்டத்தலைவர் ஆகியோர் இது பற்றி கேட்டனர். சரியான பதில் இல்லை. ரொம்ப ர்ப்பாக பேசி முடியாது என்றார். G.M அவர்களை சந்திக்க நேரம் கேட்டோம். கிடைக்கவில்லை. கடைசியாக அருகிலுள்ள ராமகிருஷ்ணா பள்ளியில் இடம் கேட்டு கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்ட பலர் நிர்வாகத்தின் போக்கை கண்டித்து பேசினர். முடிவில் மாநிலச் செயலரின் ஆலோசனைப்படி நடப்பது என்று முடிவு செய்யப்பட்டது. பொருளாளர் திரு.R.லோகநாதன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment