Monday, 31 December 2018

தருமபுரி மாவட்டத்தில் பென்ஷனர் தின விழா

AIBSNLPWA தருமபுரி மாவட்டச் சங்கத்தின் சார்பில் 29-12-2018, சனிக்கிழமை அன்று ஓய்வூதியர் தின சிறப்புக் கூட்டம் கிருஷ்ணகிரி வெங்கடேஷ்வரா மஹால் சுபம் ஹாலில் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் தோழர் முனியன்,மாவட்ட கவுரவத்தலைவர் தோழர் வி சுந்தரம் தலைமையேற்க கிருஷ்ணகிரி கிளைச்செயலாளர் தோழர் கே தங்கவேலு,ஒசூர் கிளைச்செயலாளர் தோழர் சத்தியேந்திரன், தருமபுரி கிளைச்செயலாளர் தோழர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகிக்க கூட்டம் தமிழ்த் தாய் வாழ்த்துடன் காலை 11-00 மணிக்கு துவங்கியது.
தோழர் S.T.சத்தியேந்திரன் அஞ்சலி உரையாற்றினார். மாவட்டச்செயலாளர் தோழர் சுப்ரமணியம் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாநிலத் துணைத்தலைவர் தோழர் T.வேடியப்பன் அவர்கள் ஓய்வூதியத்தின் வரலாறு குறித்தும்,ஓய்வூதியர் தினம் கொண்டாட வேண்டிய அவசியம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்து துவக்க உரையாற்றினார்.தமிழ் நாடு அரசு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்க மாவட்டத்தலைவர் தோழர் K.துரை, சேலம் கிழக்கு மாவட்ட துணைச்செயலாளர் தோழர் M.குமரேசன், அகில இந்திய வானொலி சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் விபரம் இலங்கை தோழர் சிவப்பிரகாசம், NFTE மாநில அமைப்புச் செயலாளர் தோழர்  கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர் 75வயது,80வயது நிறைவு செய்த 13 தோழர்கள் பொன்னாடை போர்த்தி மெடல் அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்
அகில இந்திய துணைப் பொதுச் செயலாளர் தோழர்  S.அருணாசலம் தனது ஒரு மணி நேர சிறப்புரையில் 17-12-1982 அன்று வழங்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு குறித்தும், அதற்கு பின்னர் அமைக்கப்பட்ட மத்திய அரசின் ஊதியக்குழு ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றம் குறித்தும் பரிந்துரைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது குறித்தும் BSNL/MTNL ஓய்வூதியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைத்த அடிப்படையில் ஓய்வூதியம் மாற்றி அமைக்க சங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் தற்போது அதன் நிலை குறித்தும்,மாற்று சங்கத்தின் அணுகுமுறை குறித்தும் மிகச்சிறந்த முறையில் விளக்கினார்.
மாவட்டப் பொருளாளர் தோழர் P.வணங்காமுடி பாடல் பாடி, நன்றி கூறி முடித்து வைத்தார். நான்கு தோழியர்கள் உட்பட 65 ஓய்வூதியர்கள் பங்கேற்றனர். முடிவில் அனைவருக்கும் மதிய விருந்து வழங்கப்பட்டது.   
R.சுப்ரமணியம்,
மாவட்டச்செயலாளர்.


No comments:

Post a Comment