Friday, 20 November 2026

 மாநில செயலாளரின் அறிக்கை 

தோழர்களே, அனைவருக்கும் வணக்கம். சொசைட்டி பிரச்சனையில், உறுப்பினர்களுக்கு வரவேண்டிய தொகையை திரும்ப பெறுவதற்கான முயற்சிகளை மாநில சங்கம் எடுத்து வருகிறது. அதை நமது வாட்ஸாப்ப் குழுமத்தில் வெளிப்படையாக, பதிவிட்டு வருகிறோம். நமது Trichy மாநில செயற்குழுவில், CTSRA அமைப்பு, சொசைட்டி பிரச்சனையில் தனியாக செயல்படட்டும் என்று கூறிவிட்டோம். அவர்கள் CTSRA செயல்பாட்டை பற்றியோ பாதிக்க பட்டவர்களுக்கு பணத்தை திரும்ப பெற அவர்கள் எடுத்த முயற்சியையோ அதில் கண்டெடுத்த வெற்றியையோ எங்கும் பதிவிடவில்லை. நமக்கு அதைப்பற்றி, எந்த பிரட்சனையும் இல்லை.

மாறாக, AIBSNLPWA தமிழ்மாநில சங்கம் போடுகின்ற பதிவுகள், கடிதங்கள் பற்றி CTSRA தலைவர் தோழர். N.வீரபாண்டியன் அவர்களும், மாநில நிர்வாகி துரைஅரசன்அவர்கள். STR மாவட்ட நிர்வாகி T S. முரளி அவர்கள் வேறு சில நிர்வாகிகளும் மாநிலசங்கத்தின் செயல்பாட்டை ,பொது வெளியில் வாட்சப்பில் விமர்சிப்பது,  நாகரீகம் அற்ற முறையிலும், சங்கத்தின் அமைதியை குலைக்கும் வகையில் செயல்படுவது, சங்கத்தின் அமைப்பு விதி களுக்கு எதிரானது. இவர்கள் AIBSNLPWA சங்கத்தின் அடிப்படை உறுப்பினராகவும், சிலர் பொறுப்பிலும் இருக்கிறார்கள், என்பதை புரிந்து செயல் படவேண்டும். AIBSNLPWA மாநில சங்கம், தனது செயல்பாட்டை தெளிவு படுத்த வேண்டிய இடம் CEC.  மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள். தொடர்ந்து அலை பேசியில் ஏதாவது சந்தேகம் இருந்தால், மாநிலச் செயலரிடம், பேசி வருகின்றனர். பிரச்சனையை எப்படி அணுக வேண்டும் என்பது மாநில நிர்வாகிகளுக்கு நன்றாக தெரியும். AIBSNLPWA சங்கத்தை,இழிவு படுத்தி பேசுவதை எல்லா காலங்களிலும் பொறுத்து கொள்ள முடியாது. அனைவரும் சங்கத்தின் அமைப்பு சட்ட விதிகளுக்கு கட்டுப்பட்டு ,நடந்து கொள்ள வேண்டும். CTSRA அமைப்பு, உறுப்பினர்களுக்கு வர வேண்டிய சொசைட்டி பணத்தை திரும்ப பெற்றுக் கொடுப்பதில் , AIBSNLPWA சங்கத்திற்கு பொறாமை இல்லை.அதுகிடைக்கும் வரை எல்லாமே முயற்சியே. அனைவரும் முயற்சிக்க வேண்டும். AIBSNLPWA TNC தனது பொறுப்பை, உணர்ந்து செயல்படுகிறது. CTSRA தலைவர் பாடம் புகட்ட தேவையில்லை. CTSRA தமது கடமையை ஆற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். அதில் அக்கறை காட்டாமல் AIBSNLPWA மாநில சங்கத்தை பற்றி விமர்சிப்பதை வழக்கமாக வைத்திருப்பதை நிறுத்திக் கொள்ளவும் இனியும் நிறுத்தாமல் தொடர்ந்தால், AIBSNLPWA பதில் விமர்சனம் செய்ய தயங்காது. ஒற்றுமை கருதியும், CTSRA அமைப்பில் உள்ளவர்கள் நமது அமைப்பை சார்ந்தவர்கள் என்பதாலும் அமைதி காத்து வருகிறோம். 

நன்றி!!                            

S. சுந்தரகிருஷ்ணன் 
மாநில செயலாளர். 
AIBSNLPWA TNC

No comments:

Post a Comment