PUDUCHERY DISTRICT ANNUAL GENERAL BODY MEETING.
புதுச்சேரி மாவட்ட மாநாடு 28.09.2024 அன்று தோழர் N. முனுசாமி அவர்கள் தலைமையில் நடை பெற்றது.காலஞ் சென்ற தோழர்கள், தலைவர்களை நினைவு கூர்ந்து, அஞ்சலி செலுத்தப்பட்டது. திரு. N. முனுசாமி தலைவர், தலைமை உரைஆற்றினார். தோழர் A. ஹரிஹரன் மாவட்ட செயலர் வரவேற்புரை நிகழ் த்தினார். தோழர்.. R.அசோகன் DS CDL, ராஜேந்திரன் ADS TVL, ஆருன்பாஷா CDL, மற்றும், தோழமை சங்க செயலர்கள், மற்றும் மாநில நிர்வாகிகள் M. சாம்பசிவம், D. விக்டர்ராஜ் கலந்து கொண்டு உரையாற்றினர். தோழர்கள் S. சுந்தரகிருஷ்ணன் மாநில செயலர், p. ஜெயராமன் அகில இந்திய துணை செயலர் சிறப்புரை ஆற்றினர்.BSNL நிர்வாகத்தின் சார்பில் திரு சம்பத் DGM, CAO கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். மாவட்ட செயலர் அறிக்கை மற்றும் , மாவட்ட பொருளாளர் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அவை ஒப்புதல் வழங்கப்பட்டது. புதிய நிர்வாகிகள், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தலைவர். தோழர். அசோக்ராஜ், செயலர். K. R. சிவகுமார். பொருளாளர். A. ஹரிஹரன் மற்றும் நிர்வாகிகள் ஏகமானதாக தேர்வு செய்ய பட்டனர்.தோழர். K. S. சிவகுமார் நன்றியுரை கூற, மாநாடு இனிதே நிறைவுற்றது. சிறப்பு மதிய உணவு வழங்க பட்டது. புதுச்சேரி மாவட்ட நிர்வாகிகளுக்கு, மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள்.
S. சுந்தரகிருஷ்ணன் CS
No comments:
Post a Comment