Sunday, 31 December 2023
Sunday, 24 December 2023
Thursday, 21 December 2023
அன்புள்ள தோழர்களே தோழியர்களே பென்சனர் தின சிறப்பு கூட்டம் மேட்டூர் பொட்டனேரி சாந்தா திருமண மண்டபத்தில் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் கே பி ஆர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது தமிழ் தாய் வாழ்த்து உடன் துவங்கப்பட்டது தோழர் ராஜா உதவி செயலர் அஞ்சலி வாசித்தார் தோழர் கணேசன் கிழக்கு மாவட்ட செயலாளர் வரவேற்புரை நிகழ்த்தினார் .
வாழ்த்துரை வழங்கியவர்கள்;
1 தோழர் பட்டாபிராமன் மாநில உதவி செயலர்
2. தோழர் வேடியப்பன் மாநில உதவி தலைவர்
3. தோழர் கோவிந்தராஜ் தலைவர் மேற்கு மாவட்டம்,
4. தோழர் பலராமன் செயலர் மேற்கு மாவட்டம்,
5. தோழர் சுப்பிரமணி செயலாளர் தர்மபுரி,
6. தோழர் முனியன் தலைவர் தர்மபுரி,
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தோழர் வணங்காமுடி பாட்டு பாடி அனைவரையும் மகிழ்வித்தார். தோழர் நடராஜன் தஞ்சை அவர்கள் கவிதை வாசித்தார். சிறப்புரையாக தோழர் சுப்பராயன் மாநில உதவி செயலாளர் பென்ஷன் தினத்தின் முக்கியத்துவம் பற்றியும் பென்ஷன் ரிவிசன் பற்றியும் சிறப்புரை ஆற்றினார்.
தோழர் வேணுகோபால் அகில இந்திய அமைப்புச் செயலர் நலச்சங்கத்தின் சாதனைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
மேட்டூர் கிளைச் செயலர் தோழர் மணி பாலன் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
இப்படிக்கு,
Wednesday, 20 December 2023
Dear Comrades ,...
With deep grief, I am posting this in connection with the Natural Fury / Disaster in the Southern Districts of Tamilnadu...
I need not say the havoc is unprecedented...
Our Association has always associated in extending Help to the Victims of Natural Disasters. So to say, Our General Secretary also issued CALL to celebrate the Pensioners Day and extend Our Mite to the Needy....
Now, the situations in the Southern Districts are such that even those who want to help can not move out...
The Government / NGOs / Social Activists are trying to do whatever is possible...
Our Members should also come forward to contribute to help the affected people...
However, it is physically not possible to extend our HELP ( in any form / way) for another couple of days...
In this context, as we have been doing our services individually/collectively during distress not only inTamilnadu but wherever it happens, May I request the Circle executive members to centralise the RELIEF (may be Money / Materials) to the People to be distributed as soon as they Reach to the Victims become possible. We may also collect / concentrate on the losses to our own BSNL Friends through our DSs in southern parts If agreed, we may send an appeal through our DS . For consideration.
Thanks .
Comradely yours,
S.Sundarakrishnan
CS TN Circle
Sunday, 17 December 2023
இன்று 17- 12- 2023 ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய BSNL ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் “ஓய்வு ஊதியர்கள் தின விழாவும்” “மாதாந்திர பொதுக்கூட்டமும்” காலை பத்து முப்பது மணிக்கு தொடங்கி பிற்பகல் ஒன்றரை மணி வரை நிகழ்வுகள் நடைபெற்றது. சங்கக் கொடியினை மூத்த தோழர் P. ருத்திராபதி OS ( ஓய்வு ) அவர்கள் அங்கத்தினரின் வாழ்த்து மற்றும் வீர வணக்க கோஷங்களுடன் ஏற்றி வைத்தார். ஓய்வூதியர் தின மற்றும் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் செயல் தலைவர் தோழர் எம் இருதயராஜ் தலைமை ஏற்க மாவட்ட செயலாளர் தோழர் அய்யனார் கூட்டத்தினை சிறப்புற நடத்தினார்.
சென்ற கூட்டத்திலிருந்து இந்த கூட்டம் வரை உயிர் நீத்த அனைவரது ஆன்மாவிற்கும் அஞ்சலி செலுத்தும் முகத்தான் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த மாதம் மணிவிழா அமையப்பெற்ற தம்பதியர் மற்றும் சென்ற மாதம் மற்றும் இந்த மாதம் பிறந்த நாள் அமையப்பெற்ற தோழர் தோழியரின் பிறந்தநாள் விழா உறுப்பினர்களின் வாழ்த்து கோஷங்களின் இடையே கேக் வெட்டப்பட்டு சந்தன மாலை அணிவிக்கப்பட்டு வெகு விமர்சையாக வழக்கம் போல் நடைபெற்றது.
இன்றைய சிறப்பு அழைப்பாளர் மாநில சங்கத்தின் தலைவர் தோழர் வீ. சாமிநாதன் பொன்னாடை போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டார். அவர் தனது சிறப்பு உரையில் ஓய்வு ஊதியர்கள் தின விழாவின் ஆரம்ப முதல் இன்று வரை நடைபெற்ற எல்லா நிகழ்வுகளையும் விளக்கமாக விவரமாக தனது உரையில் பதிவிட்டார். அடுத்து மாவட்ட செயலர் தனது நிறைவு உரையில் தஞ்சை மாவட்ட பிரச்சனைகளையும் அதன் காரண காரியங்களையும் எவ்வாறு தீர்க்கப்பட்டது என்பது பற்றியும் இனி நடைபெற இருக்கும் எல்லா கூட்டத்திற்கும் அனைவரும் வந்து ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டி உரையை நிறைவு செய்தார். தோழர் கே. சீனு பொருளாளர் நன்றி நவில மதிய தஞ்சை இன் சுவை மதிய விருந்துடன் கூட்டம் நிறைவு பெற்றது.