Monday 22 August 2022

 

நமது சங்க நிறுவனதினத்தை ஒட்டி  GM அலுவலக வாயிலில் நமது சங்க கொடி இன்று காலை 10 மணியளவில் தோழர் கோமதி சங்கர் விண்ணதிரும் முழக்கமிட தலைவர் சம்மனசு அவர்களால் ஏற்றப்பட்டது. செயலர் பரமசிவன் அவர்கள் முன்னதாக வரவேற்புரை நிகழ்த்தினார். நமது சங்க வளர்ச்சி பற்றியும் உறுப்பினர் எண்ணிக்கையை மேலும் உயர்த்துவதற்காக அனைவரும் உழைக்க வேண்டும் எனவும் எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து நமது சங்க அலுவலகத்தில் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்வில் 40 பேர் கலந்து கொண்டனர். மத்திய சங்க வேண்டுகோள் படி மதிய உணவு St Anne's special school ல் உள்ள முதியோர் மற்றும் கைவிடப்பட்ட சிறார்களுக்கு வழங்கப்பட உள்ளது.
By com Sammanasu ACS TIRUNELVELI
அமைப்பு தினத்தை முன்னிட்டு இன்று காரைக்குடி தோழர்கள்
மாநில உதவித் தலைவர் தோழர். முருகன் அவர்கள்  தலைமையில் கிளைச் செயலர் தோழர் சுந்தரராஜன்
அவர்கள் உறுதுணையுடன் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் வானம் பார்த்து வயிறு மெலிந்து வீதியோரம் வாழும்... வாடும் அடித்தட்டு மக்களுக்கு மதிய உணவளித்தனர்.
நமது வாழ்த்துகளும் பாராட்டுக்களும். 
Com.Mari DS KARAIKUDI
வாலாஜா தீனபந்து ஆசிரமத்தில் தாய் தந்தை இல்லாத பிள்ளைகளுக்கு அன்றாட தேவையான பொருட்களை AIBSNLPWA வேலூர் மாவட்டம் சார்பாக வழங்கிய நிகழ்வு
Com.Alliraja DS VELLORE
ஊட்டி "LADY WELLINGTON HOME "ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் மதிய உணவு மற்றும் மளிகை தொகுப்பு பொருட்கள் AIBSNLPWA சங்கம் சார்பாக இன்று, தோழர்கள் அசோக் குமார், சன்னன் மற்றும் ராமசாமி முன்னிலையில் வழங்கப்பட்டது. இது நமது இயக்க தோழர்களுக்கு மனநிறைவைதந்தது.
ராமசாமி.மாவட்டசெயலாளர். நீலகிரி.
அன்பான தோழர்களே,தோழியர்களே, நமது சங்க அமைப்பு தினமான 20-8-2022 ல் மத்திய சங்க வேண்டுகோளின் படி காலை சுமார் 11:00 மணியளவில் மதுரை திருப்பாலை புது நத்தம் சாலையில் யாதவா மகளிர் கல்லூரி எதிரில் உள்ள MADURAI CORPORATION SHELTER FOR THE HOMELESS URBAN POOR முதியோர் காப்பகத்தில் உள்ள 25 ஆண்களுக்கு வேஷ்டி துண்டு மற்றும் 25 பெண்களுக்கு சேலை வழங்கியும் மதியம் சுமார் 1:00 மணியளவில் மதுரை விஸ்வநாதபுரத்தில் பழைய விஜய லெட்சுமி திரையரங்கம் எதிரில் உள்ள RAJAJI HOME FOR THE AGED முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மதிய உணவும்   சிறு கைத்துண்டும் வழங்கியும் கொண்டாடப்பட்டது.அந்த நிகழ்வின் புகைப்படக்காட்சிகள் கீழே.S வீராச்சாமிமாவட்டச் செயலர் மதுரை.

இன்று 20 8 2022 தஞ்சை மாவட்ட பி எஸ் என் எல் ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் அமைப்பு தினம் தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் இனிதே கொண்டாடப்பட்டது. முதல் நிகழ்வாக நமது சங்க கொடியினை நமது மாநில சங்க தலைவர் தோழர் வி .சாமிநாதன் அவர்கள் ஏற்றி வைத்து கூடியிருந்த 30க்கும் மேற்பட்ட தோழர்களின் வாழ்த்து கோஷங்களுடன் மற்றும் சங்க கோஷங்களுடன் இனிதே கொடியேற்று நிகழ்ச்சியினை சிறப்பித்தார்.  மாநில தலைவர் தோழர் வி .சாமிநாதன் தனது நிறைவுறையில் 2004 முதற்கொண்டு இன்று வரை நமது சங்கம் படிப்படியாக வளர்ந்த காட்சிகளையும் சந்தித்த இடர்பாடுகளையும் சாதித்த சாதனைகளையும் இனி சாதிக்க வேண்டிய செயல்கள் பற்றியும் மிகவும் விரிவாகவும் அழகாகவும் வரலாற்றுப் பின்னணியுடன் விரிவான உரையாற்றி இன்றைக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளைப் பற்றியும் தெளிவாக விவரித்து அனைவரது ஒற்றுமையினையும் ஒத்துழைப்பையும்  வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டு உரையை நிறைவு செய்தார். பார்வை குறைபாடு பள்ளி மற்றும் செவி, பேச்சு குறைபாடுள்ள பள்ளிகளுக்கு இன்று இனிப்பு வழங்கப்பட்டது.

இன்று காலை கடுவெளி ஆதரவற்ற முதியோர் பெண்கள் மாணவ மாணவிகள் இல்லத்தில் காலை உணவு வழங்கியபோதின் காட்சிகளை காணொளியில் காண்பிர்.

தஞ்சை அன்பாலயம் மனநலம் பாதிக்கப்பட்டவர் இல்லத்தில் காலை உணவு வழங்கியபோது எடுக்கப்பட்ட காணொளி உங்கள் பார்வை க்கு.

இன்று தில்லையம்பூர் முதியோர் இல்லத்தில் நமது தஞ்சை மாவட்ட பி எஸ் என் எல் ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் சார்பாக மதிய உணவு விருந்து அளிக்கப்பட்டது. அதன் காணொளி தான் மேலே பதிவிடப்பட்டுள்ளது.

மத்திய சங்க வழிகாட்டுதலின் படி எனது இருப்பிடம் அருகிலுள்ள Abode Joy Home என்ற முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு  என்னாலயின்ற வகையில் பிஸ்கட், தேநீர் வழங்கிய தகவல் உங்களுக்கு தெரிவிக்கின்றேன்.நன்றி. –
S காளிதாசன். தமிழ் மாநில பொருளாளர்
நமது சங்கத்தின் 13வது ஆண்டு அமைப்பு தினத்தை ஒட்டி அகில இந்திய சங்கம் விடுத்த வேண்டுகோளின்படி
சென்னை தந்தி மாவட்ட சங்கத்தின் சார்பில்
 இன்று 19/8/2022
அன்று மறைமலைநகரில் உள்ள உதவும் உள்ளங்கள் இல்லத்தை சேர்ந்த 45 சிறுமிகளுக்கும்  26 முதியோருக்கும்(பெண்கள்) ஒருநாள் உணவு (காலை மதியம்  & இரவு ) வழங்கப்பட்டது.
அனுராதா சென்னை தந்தி டிராபிக் டிவிஷன் மாவட்ட செயலர்
நமது சங்கத்தின் 13வது ஆண்டு அமைப்பு தினத்தை முன்னிட்டு மத்திய சங்கத்தின் அறைகூவலுக்கு இணங்க இன்று 20.08.22 சனிக்கிழமை காலை 08.00 மணிக்கு குடந்தை மகாமக குளக்கரையில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு குடந்தை மாவட்டச் சங்கத்தின் சார்பாக உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு சங்க ஆலோசகர் தோழர்.N.அனந்தன் தலைமை வகிக்க, தோழர். R.ஜெயராமன், மாநில துணை செயலாளர் முன்னிலை வகிக்க, தோழர். N.இசக்கிமுத்து, மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் உணவுப் பொட்டலங்களை வழங்கினார்கள்.
N.இசக்கிமுத்து,மாவட்டச் செயலாளர்,
R.ஜெயராமன்,மா.து.செயலாளர்,கும்பகோணம்.

No comments:

Post a Comment