Sunday 18 April 2021

 

தமிழ் மாநில சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் காணொளி நிகழ்ச்சி மூலமாக சிறப்பாக 17-04-2021 அன்று நடைபெற்றது . தமிழ் மாநில தலைவர் தோழர் V .ராமராவ் அவர்கள் தலைமை தாங்கினார் . மாநில செயலர் தோழர் R.வெங்கடாசலம் அவர்கள் நிகழ்வுகளை நடத்தினார் .மத்திய சங்க துணை தலைவர்கள் ,பொது செயலர் , துணை பொது செயலர்  மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .  காணொளியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. நிகழ்ச்சி குறித்த விபரங்கள் பிறகு வெளியிடப்படும்.


2 comments:

  1. Dear Friends,

    வேரற்ற மரம்போல்
    கீழே சாய்ந்து
    வேறுலகம் சென்று
    சேர்ந்த

    அறிவியல் ஆசான்
    அப்துல் கலாம்
    அடியொற்றி

    நட்ப்பின் சாரமாய்
    அவர் சொல்லை
    வேத வாக்காய்
    எடுத்துக் கொண்டு

    கோடி மரங்கள்
    துளிர்விட

    தேடி தேடி அலைந்தாய்
    கலாம்பசுமை
    என்றே பெயர்பாடி.

    எண்ணற்ற திறமைகளின் உறைவிடமாய்
    களம் கண்டவன்
    என்றே செப்புகின்றார்
    இன்று.

    மூடத்தனத்தை சாடவும்
    முற்போக்கு கருத்துக்கு
    தூபம் போடவும்

    சிறந்ததோர் மேடையென சினிமாவை தேர்ந்தெடுத்து

    சின்ன கலைவாணராக வலம்வந்தாய்,

    சிரிக்க, சிந்திக்க
    என்றே
    சிரிப்பு மழையிலே
    நினைய விட்டாய்.

    வாழைப்பழத்திலே
    ஊசி ஏற்றுவது போலே
    அரசியல் நையாண்டிக்கு
    அன்று சோ.

    அன்றாட நடப்பின்
    அலசலுக்கு
    அடித்தளமிட்டாய்..நீ...

    விவேக் அவர்களே.

    சில காலமே
    வாழ்ந்து
    பல காலம்
    பல்லோர்
    மனதிலும் வாழும்
    பேறு பெற்றோர்
    பட்டியலில்.....

    கணிதமேதை ராமானுஜம்,
    மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ----

    அவர்களுடன் இணைத்துக் கொண்டாய் உன்னையும்

    இறவா புகழோடு
    என்றும் திகழ....

    சின்ன கலைவாணன்
    விவேக் அவர்களே....

    ReplyDelete
  2. By.nnr.tnj.(n.natarajan, tnj.)

    ReplyDelete