Tuesday, 4 April 2017



அன்பு தோழர்களே/ தோழியர்களே,
அனைவருக்கும் வணக்கம்.
03-04-2017 திங்கட்கிழமை மதியம் சுமார் 0300 மணியளவில் விருதுநகர் மாவட்ட AIBSNLPWA சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் பம்பாய் திருமண மஹாலில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் தோழர் சண்முகம் தலைமைத் தாங்கி நடத்திக்கொடுத்தார் .சிறப்பு விருந்தினராக திருமதி 
S.E. இராஜம்  ITS GM விருதுநகர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மேலும் தோழர்கள் G. நடராசன், D கோபாலகிருஷ்ணன் V ராமராவ் , K முத்தியாலு S அருணாச்சலம்  MM வைரமணி மற்றும் அதிகாரிகள் DGM VGR, DGM (நிதி) CAO ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
திருமதி இராஜம் அவர்கள் நம் சங்க செயல்பாடுகளை வெகுவாக பாராட்டினார்கள். ஒய்வு பெற்ற ஒரு ஓய்வூதியர்  தனக்கு ஏதேனும் குறையிருப்பின் , அக்குறையினை தக்க அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வர தயக்க மாக இருக்கும் . ஆனால் அவர் ஓய்வூதியர் சங்கத்தில் இணைந்திருந்தால் , சங்க நிர்வாகிகளிடம் கூறி தன் குறைகளை எளிதாக தீர்த்துக்கொள்ள முடியும். ஆகவே ஓய்வூதியர்கள் சங்கத்தில் இணைவது மிக மிக அவசியம் . 
BSNL MRS  திட்டம் மிக சிறப்பானது.இந்த சங்கத்தை சார்ந்த ஓய்வூதியர்கள் நிர்வாகத்திற்கு உதவ தயாராக உள்ளார்கள்.அவ்வப்போது நாங்களும் அவர்களின் சேவைகளை பெற்று பலனடைந்து வருகிறோம். இன்று சேவையில் இருக்கும் நான் நாளையே ஒய்வு பெற்றால் உங்கள் மத்தியில் தான் இருக்க வேண்டும். யாருமே தமக்கு 60 வயது வராது என்று கூற முடியாது. உங்கள் சங்கம் ஓய்வூதியர் குறைகளை மட்டுமல்ல பல்வேறு சமூக நலத் திட்டங்களை மேற்கொண்டு சமுதாய நலப்பணி ஆற்றி வருவதை நான் நன்கறிவேன். உங்கள் ஓய்வூதியர் சங்கம் மென்மேலும் செழித்து வளர நற்பணி பல நிறைவேற்றிட என் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டார்கள். 
தோழர் DG தன் உரையில்  நாம் 78.2% நிலுவையினை 01-01-2007 முதல் பெற பாடுபட வேண்டும்.ஒரு வேளை நீதி மன்றம் போக வேண்டும் என்றால் அதற்கும் தயார் .கோர்ட் செலவுகள் சற்று அதிகமாகும் அதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும் .
தோழர் நடராஜன் தன் உரையில் 01-01-2017 முதல் ஓய்வூதியம் மாற்றியமைக்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு உள்ளது போலவே நமக்கும் ஓய்வூதியம் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.கிராஜூடி தொகையும் மத்திய அரசு ஊழியர்களைப்போலவே 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் தொடர்ந்து சேவை செய்திருந்தால் முழு ஓய்வூதியம் என்று எல்லாமே மத்திய அரசு விதிகளின் படியே நடைபெற்று வருகிறது.ஆகவே ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளை BSNL ஓய்வூதியர்களுக்கும் IDA அடிப்படையில் நீட்டிக்க வேண்டும் என்ற நம் கோரிக்கை நியாயமானதே .நிச்சயம் பெற்றிடுவோம்.என்றார் .
தோழர் M.M.வைரமணி நன்றியுரை வழங்க சிறப்புக்கூட்டம் முடிவடைந்தது.
மாநாட்டில் , சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அனைவரும் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் பெருமைகளை ஆற்றிய அரும் பணிகளை தன்னலமற்ற தொண்டுகளை மணக்கும் தமிழ் சொற்களால் பாமாலையாக  சூட்டி நன்றி பாராட்டியது நம் நினைவுகளை பின்னோக்கி பாயவிட்டு மகிழ வைத்தன என்றால் அது மிகையல்ல .









No comments:

Post a Comment