Tuesday, 4 April 2017

விருதுநகரில் இம்மாதம் 2 மற்றும் 3 தேதிகளில் பம்பாய் கல்யாண மஹாலில் தமிழ் மாநில செயற்குழு கூட்டம் தமிழ் மாநில தலைவர் தோழர் V .இராமாராவ் அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
துவக்க நிகழ்சியாக தேசிய கொடியினை மாநாட்டு செயலர் தோழர் லத்தீப் அவர்கள் ஏற்ற, சங்கக்கொடியினை தோழர் இராமாராவ் அவர்கள் ஏற்றிவைக்க விண்ணதிரும் கோஷங்களுடன் கூட்டம்  இனிதாக துவங்கியது.
வரவேற்புரையை தமிழ் மாநில செயலர் தோழர் K .முத்தியாலு நிகழ்த்தினார். சங்க செயல்பாடுகளை மிக விரிவாக எடுத்துக்கூறினார். துவக்க உரையில் அகில இந்திய சங்கத்தின் துணைத்தலைவர் மற்றும் அனைத்துலக  ஓய்வூதியர் சங்க ஆசிய செயலாளர் 
தோழர் D .கோபாலகிருஷ்ணன் டில்லியில் அதிகாரிகளிடம் பேசிய விதங்கள் , தாம் எடுத்து வைத்த சட்ட நுணுக்க விஷயங்கள் impossible என்று கூறப்பட்ட பென்ஷன் ரிவிசன்,78.2% IDA , 60:40 கோட்பாட்டினை தகர்த்தது ஆகியவைகளை கோர்வையாக எடுத்துக்கூறினார்.
தமிழ் மாநில தலைவர் தோழர் இராமாராவ் நம் தமிழ் மாநில உறுப்பினர் எண்ணிக்கை அகில இந்திய அளவில் முதல் இடத்தினை பிடித்துள்ளது. இந்தியாவின் மிகப்  பெரிய கிளையான மதுரையை நாம் கொண்டுள்ளோம். இன்னமும் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்.
தமிழ் மாநில சங்கத்தின் செயல்பாட்டு அறிக்கையை மாநில செயலர் சமர்ப்பித்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் கொண்டாடப்பட்ட ஓய்வூதியர் தினம் மற்றும் மகளிர் தின சிறப்புகளை தேதி வாரியாக எடுத்துக் கூறினார். நடந்து முடிந்த மாவட்ட மாநாடுகள் குறித்தும் எடுத்துரைத்தார்.78.2% நிலுவைத் தொகை அளிப்பதில் உள்ள கால தாமதத்தினை கடுமையாக சாடிய அவர் அதற்காக  தர்ணா நடத்த CCAவிதம் நோட்டிஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் CCA அவர்கள் நம்முடன் நடத்திய பேச்சு வார்த்தையில் தாமதத்தை களைய ஒய்வு பெற்ற கணக்கு அலுவலர்களை மறு பணியில்  அமர்த்துவதாக வாக்குறுதி அளித்தார். சென்னை தொலைபேசி மாவட்டத்திலிருந்து 6 தோழர்கள் பலன் எதிர்பாரா பணி முடிக்க ஒத்துக்கொண்டார். அதன்படி நம் தோழர்கள் 6 பேர்கள் மிக சிறப்பாக பணியாற்றி PRE 2007 கேஸ்களில் சுமார் 7000 கேஸ்களை செவ்வனே முடித்துள்ளனர். அவர்களை வெகுவாக பாராட்டுவதாக கூறி , சென்னை தொலைபேசி மாவட்ட சங்கத்துடன் கலந்து ஆலோசித்து அவர்களுக்கு பாராட்டு விழா நடத்த யோசித்திருப்பதாக கூறினார். 
ஸ்டேட் வங்கி யிலிருந்து கடந்த நவம்பர் மாதம் முதல் நிலுவைத்தொகை அனுப்பப்படாமல் இருந்ததை வங்கி அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி மாற்று ஏற்பாடுகள் செய்ய சொல்லி தற்சமயம் வேலைகள் ஜரூராக நடைபெறுவதாக கூறினார். நம் தலையீட்டின் மூலம் PRE2007 கேஸ்கள் எல்லாம் முடிவடைந்து விட்டன. அவை கிடைப்பதில் transit delay தான் ஏதேனும் இருக்கலாம். ஆனால் விரைவில் கிடைத்துவிடும்.POST 2007 வேலைகளும் நடைபெற்று வருகின்றன.
மாநிலத்தில் தீர்வுகாணப்பட்ட 38 பிரச்சினைகளை பட்டியலிட்டார். தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை கூறி தாம் அவற்றை தீர்க்க எடுத்துக்கொண்டுள்ள நடவடிகைகளையும் கூறினார். தமிழ் மாநிலத்தில் நம் உறுப்பினர் எண்ணிக்கை சுமார் 7000 .. இதை அடுத்த செயற்குழு கூட்டத்திற்கு முன் சுமார் 10,000 ஆக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினார்
மதியம் மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்ட சங்க பிரதிநிதிகள் பேசினர் .இரவு அறுசுவை சிற்றுண்டியுடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் முடிவுற்றன.
மறுநாள் மாநில சங்க நிர்வாகிகள் பேசினர் .பிறகு அகில இந்திய பொதுசசெயலாளர் தோழர் G நடராஜன் பேசினார்.அமைச்சருக்கு நன்றி கூறினார்.ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளை BSNL ஓய்வூதியதாரர்களுக்கும்  நீட்டிக்கச் செய்வோம் என்றார்.உறுப்பினர் எண்ணிக்கை அகில இந்திய அளவில் ஒரு லட்சத்தை எட்ட வேண்டும். தமிழ்நாட்டில் அது 15,000 ஆக உயர வேண்டும். ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு நண்பரை உறுப்பினராக ஆக்கினாலே போதும் குடும்ப ஓய்வூதியர்களை நிறைய நம் உறுப்பினராக ஆக்க வேண்டும் என்றார் .
அடுத்த செயற்குழு கூட்டத்தினை திருச்சியில் நடத்த வேண்டும் என்ற தன் அவாவினை மாநில செயலர் தெரிவிக்க ,திருச்சி மாவட்ட செயலர் தோழர் செல்வராஜ் அவர்களும் ஏற்றுக்கொண்டார். 
செயற்குழு கூட்ட ஏற்பாடுகளான , மண்டபம் , அரங்க அமைப்பு ,தடங்களில்லா மின் வசதி, சீரான ஒளி ஒலி அமைப்பு, தங்குவதற்கான ஏற்பாடுகள் , அறுசுவை உணவு ,சிறப்புமிகு உபசரிப்பு , இன்முக சேவை ஆகியவைகளை அளித்திட்ட விருதுநகர் சார்ந்த  மாநில, மாவட்ட நிர்வாகிகள், தோழர்கள் தோழிகளை குறிப்பாக தோழர்கள் லத்தீப் ,வைரமணி, சண்முகம்,சண்முகக்கனி ஆகியோர். மேலும் ரூபாய் 10,000 ,5000 நன்கொடை அளித்த நன்கொடையாளர்களை வெகுவாக பாராட்டி அவர்களுக்கு கைத்தறி ஆடைகள் அணிவிக்கப்பட்டன .இன்சுவை உணவு அளித்த சமையல் தோழர்கள் அகில இந்திய செயலாளரால் கைத்தறி துண்டு அணிவிக்கப்பட்டது . தமிழ் மாநில செய்திகளை , தகவல்களை ,அறிவிப்புகளை சிறப்பாக இன்டர்நெட்டில் பதிவிடும் வெப் மாஸ்டர் தோழர் N.மோகன் மேடையில் கெளரவிக்கப்பட்டார் 
மதியம் அறுசுவை உணவுடன் தமிழ் மாநில செயற்குழு கூட்டம் இனிதே நிறைவடைந்தது. கூட்டத்தின் நிகழ்வுகளின் நினைவுகள் நீண்ட நாட்களுக்கு அனைவரின் மனதிலும் நிழலாடும் என்பதில் ஐயமில்லை.

















































No comments:

Post a Comment