Sunday, 30 April 2017

          உழைப்பவர் வாழ்க்கை செழிக்கட்டும்.
  உழைப்பவர் முகங்கள் மலரட்டும்.
  உழைப்பவர் வாழ்வில் உயரட்டும் 
  வறுமை என்றும் ஒழியட்டும்  என 
மே தினத்தில் வாழ்த்திடுவோம் .

ChTD - MEDICAL ALLOWANCE - OPTION FORM:

Com M. Kannappan, Treasurer, AIBSLPWA, ChTD has got the copy of the Medical Allowance OPTION FORM for the ChtTD pensioners, from ChTD CGM OFFICE with instructions.
All the retired staff should give option form whether they intend to claim Medical expenditure with or without voucher. Then only AOs could calculate the amount for w/o voucher cases and submit the same to get fund from Newdelhi.

Dear Comrades,
MAY DAY Greetings to all

Vellore District AIBSNLPWA 
has arranged
 A special meeting 
to celebrate May Day
 on 01-05-2017
 at 1001 hrs, 
in Brahmmagnana Sabha,
 Gandhinagar,Vellore.
Com.V.Ramarao, 
Tamilnadu Circle President
 AIBSNLPWA will be the chief Guest.
All are request 
to attend the Special Meeting
 and grace the Function.  

With Warm MayDay Greetings,
Members and office Bearers,
AIBSNLPWA,
Vellore District

Friday, 28 April 2017


அன்புடையீர் வணக்கம்.
தஞ்சை மாவட்ட AIBSNLPWA சங்க செயற்குழு கூட்டம் வரும் மே மாதம் 9ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று காலை 1001 மணிக்கு மாவட்ட தலைவர் தோழர் AK தனபாலன் அவர்களின் சீரிய தலைமையில் தஞ்சை NFTE  சங்க அலுவலகம் ( மத்திய மத்திய தந்தி வளாகத்தில் நடைபெற உள்ளது.
மாவட்ட சங்க நிவாகிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பங்கு பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
செயற்குக்குழு கூட்ட அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
நன்றி , வணக்கம் 
இவண் 
வி .சுவாமிநாதன் 
மாவட்ட செயலர் 
AIBSNLPWA, தஞ்சை மாவட்டம்  

                        APRIL 2017  RETIREMENT 

Today a fitting lunch party was held in Sacred Heart  Community Hall Thanjavur,  on the eve of retirement function of Sri P. S. Murthy, JAO, BSNL Thanjavur who retires on 30-04-2017  Many of our Members and  Office bearers  of Thanjavur District Branch AIBSNLPWA participated , greeted him and made the function a grand success.
Com P.S.Moorthy is enrolling himself as Life Member from 1.5.17 in our AIBSNLPWA Thanjavur District Branch.
We wish him all the best and a peaceful and calm retired life. We welcome Com.P.S.Moorthy whole heartedly to our Association.


MEDICAL ALLOWANCE OPTION FORM
                                           STR

Accounts Officer, Medical Claims, STSR, Chennai has informed us that those who want Medical Allowance Option without voucher can give their OPTION FORM (the old option form itself sufficient) to the AO Office STSR Chennai.
Those who are not having VENDOR No. should give the ERP Form also.  
Please click the links below for options forms:

Pl go  to our WEBSITE to download the      MEDICAL ALLOWANCE OPTION FORM &  ERP OPTION FORM

STP CIRCLE

Accounts Officer, STP, CNI informed us that pensioners who want MEDICAL ALLOWANCE without voucher can give it in writing.

TAMILNADU CIRCLE:


Accounts Officer CGM TN Office told us that they are still on the job since the higher authorities are on official tour and said that they will release the orders soon

Thursday, 27 April 2017

தோழர்களே / தோழியர்களே 
அனைவருக்கும் வணக்கம்.
நம் சங்க செயல்பாடுகள் ஒவ்வொருவர் வாழ்விலும் பிண்ணி பிணைந்திருக்குகிறது என்று கூறினால் அதனை மறுப்பவர் எவரும் உளரோ என்று இயம்பும் அளவிற்கு நம் சங்கத்தின் பெருமை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கிறது. இதற்கு உதாரணமாக நம் புதுச்சேரி எடுத்துக்கொள்ளலாம் 

ஒய்வு பெற்ற STS தோழர் A  செங்கழனி அவர்கள் நம் சங்கத்தின் முத்த  தோழர். எல்லா கூட்டத்திற்கும் தவறாமல் வந்திருந்து அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து சிறப்பிக்கும் பண்பாளர். ஒரு நாள் மாவட்ட செயலர் தோழர் அன்பழகனுடன் பேசும் போது , தன் வறுமை நிலைமை காரணமாக கைக்கெடிகாரம் கட்ட இயலவில்லை என்று கூறியுள்ளதை செயலர் மனதில் கொண்டு இன்று தோழர் செங்கழனி அவர்களுக்கு தோழர் ஜானகி ராமன் (SDE ஒய்வு), தோழர் சுந்தரம் ( AGM ஒய்வு), தோழர் ஜனக ராஜன் ( SDE ஒய்வு), தோழியர் கல்யாணி ( மாவட்ட அமைப்பு செயலர்) மற்றும் தோழர் நந்தன் ( AIBSNLPWA உறுப்பினர் ) ஆகியோர் முன்னிலையில்  ஒரு கைக்கடிகாரத்தை அன்பளிப்பாக அளித்துள்ளார்.

இத்துடன் அவர் நிற்கவில்லை. பாண்டிச்சேரியில் மே மாதம் முதல் தேதியிலிருந்த்து இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாய மாகிறது. ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டால் ரூ ஆயிரம் அபராதம் உண்டு. நம் சங்க உறுப்பினர்கள் யார் யாரிடம் இரு சக்கர வாகனம் உள்ளது என்கிற விபரங்களை சேகரித்து அவர்களுக்கு sms மூலமாகவும் whatsapp மூலமாகவும் செய்திகள் அனுப்பியும் , போனில் பேசியும் நேரில் காணும்போது அறிவுறுத்தியும் வருகிறார்.
வாழ்க அவர் தொண்டு. வளர்க அவர் தொண்டுள்ளம்.



VERY IMPORTANT MESSAGE TO OUR MEMBERS    
We are giving instructions to our members repeatedly to make their Pension savings bank account in bank or post office as EITHER OR SURVIVOR type account.  In spite of our repeated reminders some pensioners do  not follow our instructions.They donot realise the seriousness in our advise.
Recently when one member died he was having 2 lakhs rupees in his SB Account in his name. When his wife asked for the amount the authorities required legal heir certificate. The postal  authorities say that some other person may claim as his wife or legal heir and drag them into dispute. Now his wife  is suffering to get legal heir certificate. 
If you have EITHER OR SURVIVOR SB A/C, your wife/husband can withdraw money easily.( In the Pension SB account only wife or husband as the case may be could become a joint account holder) that is why we  ask our members to have either or survivor pension account in Post office or in  Banks by joining wife or husband as joint account holder. The rules are there for having such account in post office or in bank.  if you have not done it so far, please  do not delay it. Act now immediately and  dont put your spouse in trouble after your life.                 


Tuesday, 25 April 2017

மாவட்ட செயலர்கள் கவனத்திற்கு :
" 01-01-2006க்கு முன் 10 ஆண்டு தொடர் சேவை முடித்து BSNL லிருந்து ஒய்வு பெற்றவர்கள், ரூ 3500/-க்கு குறைவாக ஓய்வூதியம் பெறுபவர்கள், தங்களுடைய பென்ஷனை 33 ஆண்டு சேவை நிபந்தனையினை தளர்த்தி வந்துள்ள உத்திரவின்படி தங்களுக்கு முழு ஓய்வூதியம் அளிக்க வேண்டுமென்று பென்ஷன் அதாத்திற்கு  விண்ணப்பிக்கவும்."
அவ்வாறு ஒய்வு பெற்றவர்களின்  பட்டியலை மாவட்ட செயலர்கள்,  விபரங்களோடு மாநில சங்கத்திற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

தோழமை வாழ்த்துக்களுடன் 
க .முத்தியாலு 
தமிழ் மாநில செயலர் 

Friday, 21 April 2017


அன்பு தோழர்களே / தோழியர்களே 
அனைவருக்கும் வணக்கம்.
ரசீது செலுத்தாமல் மருத்துவ படி பெறுவதற்கான விருப்ப படிவம் வழங்குவது குறித்த  விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற உள்ளன 
ஏப்ரல் மாதம் 22 ( சனிக்கிழமை ) மற்றும் 23 (ஞாயிறு ) தேதிகளில்  வேலூர் காந்திபுரத்தில் அமைந்துள்ள பிரம்ம ஞானசபை யில் நடைபெறும்.
ஏப்ரல் 24 (திங்கள்)  -------           குடியாத்தம் 
ஏப்ரல் 25 ( செவ்வாய் ) --------- ராணிப்பேட்டை 
ஏப்ரல் 26 ( புதன்)            ----------திருவண்ணாமலை 
ஆகிய ஊர்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
திருப்பத்தூர் , வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய பகுதிகளில் அங்குள்ள தோழர்கள் தனியாக சிறப்பு முகாம்கள் நடத்துகிறார்கள்.
விண்ணப்பத்துடன் கீழ்க்கண்ட சான்று நகல்களை இணைக்க வேண்டும்.
1. PPO Copy - Xerox 
2. MRS  கார்டு நகல் 
3. வங்கி Paasbook முதல்பக்க நகல் 
4.PAN கார்டு நகல் 
5. ஆதார் கார்டு நகல் 
ஆகியவற்றை விருப்ப மனுவில் இணைக்க வேண்டும்.மேலும் அந்த மனுவில் 
1. உங்கள் பெயர் மற்றும் முகவரி 
2. ஒய்வு பெற்ற தேதி , மாதம் & வருடம்.
3. ஒய்வு பெரும் சமயம் வகித்த பதவி பெயர் 
4. நீங்கள்  ஓய்வூதியம் பெரும் வங்கியின் பெயர் ,மற்றும்  கிளை 
5.சேமிப்பு வங்கி கணக்கு எண் 
6..IFSC Code 
7.  உங்கள் தொலைபேசி எண்  மற்றும் கைப்பேசி எண்,
இவைகளை தவறாமல் தெளிவாக குறிப்பிடவும்.
ஒரு முக்கிய விண்ணப்பம் 78.2 சத நிலுவைத்தொகை பெற்ற தோழர்கள் மறக்காமல் சங்க நன்கொடையினை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
சிறப்பு முகாம்கள் வெற்றிகரமாக நடைபெற உங்கள் ஒத்துழைப்பினை உளமார நாடுகிறோம்.
நன்றி !   வணக்கம் !! 
தோழமை வாழ்த்துக்களுடன் 
AIBSNLPWA 
வேலூர் மாவட்டம்.



Wednesday, 19 April 2017

காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டத்தின் காரைக்குடி கிளையின் நடைமுறைக்கூட்டம் 19.04.2017 அன்று காலை 11மணிக்கு திரு.ஜெயச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கிளைச்செயலர்.திரு.சுந்தரராஜன் அவர்கள் வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப்பேசினார். மாவட்டச்செயலர் முருகன் அவர்களும் மாநில உதவிச்செயலர் நாகேஷ்வரன் அவர்களும் மருத்துவப்படி,இரவுநேர இலவச அழைப்புகள் பற்றியும் லோக்கல் என்ற முறைக்குப்பதிலாக மீட்டர்கால் என்றமுறையில் விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது பற்றியும்  விரிவாக எடுத்துரைத்தனர்.
விருதுநகரில் நடந்த மாநிலசெயற்குழு முடிவுகள் மற்றும்78.2ல் இன்னும் நிறையப்பேர்களுக்கு உத்தரவு அனுப்பப்படாமல் உள்ள காலதாமதம் பற்றியும் உறுப்பினர்கள்கேட்ட கேள்விகளுக்கு  பதிலுறைத்தனர்.2007க்கு முன்பு பணிநிறைவுபெற்றவர்களுக்கு உத்தரவு வராதிருந்தால் அல்லது உத்தவு வந்து பட்டுவாடா செய்யப்படாமல் இருந்தால் மாநிலசங்க வழிகாட்டுதல்படி தயாரிக்கப்பட்ட கடிதத்தின் நகல் விரைவில் மாவட்டசங்கத்தால்  வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மருத்துவப்படியை மீண்டும் ஓய்வூதியர்களுக்கு பெற்றுத்தந்த அகில. இந்தியத்தலைமையை அனைவரும் மனமாறப்பாராட்டினார்கள்-மட்டற்ற மகிழ்ச்சியைத்தெரிவித்தனர்.
கடுமையான வெயிலையும்பொருட்படுத்தாமல் கூட்டத்திற்கு வந்துகலந்து கொண்ட அனைவருக்கும் கிளைப்பொருளர் இராஜேந்திரன் நன்றி தெரிவித்தார்.
நாகேஷ்வரன்





Tuesday, 18 April 2017

Corporate Office Order On MRS W/O Voucher




    Please inform this news to all our Pensioners and Family Pensioners. 






Thursday, 13 April 2017




LIST OF BSNL RETIREES WHOSE SERVICE BOOKS NOT RECEIVED FROM CHENNAI TELEPHONES ( INCLUDING CHENNAI TRAFFIC RETIREES)

The given below Retirees can contact the  DY. General Manager  (FINANCE) at Flower Bazaar Telephone Exchange.
 By taking a xerox copy of their entire PPOand along with Original can get attested from the DGM (F) on the Xerox copy ( KEEP YOUR OIRIGINAL PPO WITH YOU)  and submit in the section concerned in the Flower Bazaar Exchange itself. 
They will take care to Forward the same to The  Joint  CCA Office at  Ethiraj Salai.


V.Ramarao,
TN Circle President.


 Com. PSR SPEAKS

Today at 12 noon I along with  J S Dahya and Anupam Kaul met Smt Sujata Rai, Director HR of BSNL and thanked her for restoring without voucher scbeme.
We requested her to clarify about option and periodicity of MRS card.
She directed us to meet the GM Admn.
We met GM then.
1. Pensioners have to exercise fresh option with/without voucher. A proforma is being issued to SSAs to collect and register options.
 2. MRS Cards are issued for one year, 2 years, 5 years by circles.  We wanted standardisation. 
Circles will be directed to obtain undertakings from pensioners every year instead of renewing the card ,   like life certificate.
3.         2007 order is being revised on rent free tephone connections. The word free local calls is being replaced by metered calls.

PSR

Wednesday, 12 April 2017


Dear Comrades,
For outdoor treatment without voucher facility was withdrawn vide corporate office letter dated 5/9/2011. Now corporate office has revived that facility for pensioners vide its letter dated 11/4/2017. This decision is subject to review after six months.
 For those who retired prior to 1/1/2007  there are two options.
1) Last pay drawn + old DA pattern in April of the year for which the claim is made divided by two. 
2) Minimum of corresponding revised pay on 1/1/2007 + DA of April of the year for which claim is made.  12-1/2 days wages of this amount is the ceiling. 
For those who retired after 1/1/2007,
12-1/2 days wages of LPD + DA of April of the concerned year to which claim is made. The above is total annual ceiling and it will be paid in four equal instalments.
We have been pursuing this demand since 2011 September onwards and we could succeed only now.  It's one more achievement of our Association.

With Fraternal Greetings

D Gopalakrishnan

OUTDOOR MEDICAL TREATMENT ALLOWANCE 
ரசீது இல்லாமல் அவுட்டோர் மருத்துவ சிகிச்சைக்கு அளிக்கப்பட்டு வந்த அலவன்ஸ் 05-09-2011 முதல் நிறுத்தப்பட்டு விட்டது. நாம் பல்வேறு தருணங்களில், மீண்டும் இந்த அலவன்ஸ் அளிப்பது துவங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் விடுத்தோம்.
அதன் பலனாக தற்சமயம் ஓய்வூதியர்களுக்கு மருத்துவ படி அளிப்பதை புதுப்பித்து 11-04-2017 அன்று உத்தரவிடப்பட்டுள்ளது . இது ஆறு மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு மறு பரிசீலனை செய்யப்படும் என்று உத்தரவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் 01-01-2007க்கு முன் ஒய்வு பெற்ற ஓய்வூதியர் களுக்கு 
(1) ஒய்வு பெறுமுன் கடைசி மாதம் பெற்ற அடிப்படை தொகை ( LPD ) + விண்ணப்பிக்கும் ஆண்டிற்கான ஏப்ரல் மாதத்திற்கான பழைய DA (1997 பேசிக் வருடம்) இதில் வருகிற கூட்டுத்தொகையை இரண்டால் வகுக்க வருகின்ற தொகை தான் ஓராண்டிற்கான  மருத்துவ அலவன்ஸ் .இது  மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும். 

(2)  01-01-2007 ல் மாற்றியமைக்கப்பட்ட அடிப்படை ஊதியம் + எந்த வருடம் விண்ணப்பிக்கிறோமோ அந்த ஆண்டின் ஏப்ரல் மாத DA . இதில் 12.5 நாட்களுக்கான ஊதியமே ஆண்டு மருத்துவ படிக்கான அதிகப்பட்ச தொகையாகும். இது நான்கு சம தவணைகளாக மூன்று மாத இடைவெளியில் வழங்கப்படும்.

01-01-2007க்குப்பின் ஒய்வு பெற்றவர்களுக்கு 
ஒய்வு பெறுமுன்  பெற்ற கடைசி மாத அடிப்படை ஊதியம் + மருத்துவ படிக்கு விண்ணப்பிக்கும் ஆண்டின் ஏப்ரல் மாத பஞ்சப்படி சதவீதம் . இவ்வாறாக கணக்கிடப்பட்டு வருகிற தொகையில் 12.5 நாட்களுக்கான தொகையே ஒரு ஆண்டிற்கான அதிகப்பட்ச மருத்துவ அலவன்ஸ் ஆகும். இத்தொகையை நான்கு சம தவணைகளில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ அலவன்ஸ் ஆக வழங்கப்படும்.

மருத்துவப்படி மீண்டும் அளிக்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையினை நாம் 2011 செப்டம்பர் மாதத்திலிருந்து கோரி வந்துள்ளோம். அதற்கான பலன் இப்போதுதான் கண்டுள்ளோம் .
நம் சங்கத்தின் சாதனைகளில் மற்றுமோர் சாதனையாகும் இது.

ஒரு ஆண்டிற்கான மருத்துவ அலவன்ஸ் =
 (  LPD + Respective April DA ) X 25  = 
                             60
(LPD+APRIL DA) x 5/12

இதில் LPD  என்பது பணியில் இருந்தபோது ஒய்வு பெறுவதற்கு முன் நாம் பெற்ற Basic Pay ஆகும்.
Basic Pension அல்ல .
2017 IDA on April is 117.1%

Courtesy Com D.G's Message

Tuesday, 11 April 2017



Medical Allowance without Voucher 
Order Released
 It is official now.
PSR                        
There was a rumour from April 1. We were waiting for a formal order. 
It is 50 percent of the eligibility. It is not on experimental basis as heard. Nor it is restricted  to six months. But it will be reviewed after six months. 
So far so good.
PSR                        
The memorandum we submitted to CMD  at chennai and subsequent meeting with DIR(HR) HAVE YIELDED RESULT.

Monday, 10 April 2017

புதுச்சேரி கிளையில் மொத்த உறுப்பினர்கள் 172 பேர்கள் .அனைவருமே ஆயுள் சந்தா உறுப்பினர்கள் என்ற செய்தி தேனினும் இனிதாக உள்ளது, அனைவராலும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று.
உரத்த குரலில் கிளை நிர்வாகிகளை பாராட்டுவோம் .

Thanjavur Distrct Monthly Meeting Report
Aibsnlpwa Thanjavur District Monthly Meeting was conducted on 08-04-2017 which started  exactly at  10hrs in the Main Telephone Exchange Complex. The Meeting was Presided over by the Distt. President com AKD, Distt. Secy conducted the events , flag hoisted by com. Rajendran, prayer by Baby Archana.
Welcome address given by Com. K Santhana Gopalan,   Vice president and in his welcome address he covered all the salient points of last month meeting conducted International  women's day celebration, Reduction of IDA, 78.2% arrears payment present status in the district, latest Circle Executives Conference held at virudunagar, and the present payment pattern of MRS etc elaborately.

Com C.V Thangaiyan Circle Organising Secretary  spoke briefly about the Circle Executive  Conference held at virudunagar. Com V Swaminathan narrated about the latest news and achievements of the dist union elaborately. The varuthapadatha valibangalin birthday celebration was conducted as usual and after vote of thanks  the meeting came  to an end with serving of delicious midday lunch.