காரைக்குடி மாவட்டமாநாடு பரமக்குடியில் மீனாட்சி கல்யாணமகாலில் குறித்த நேரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
கஜா புயல் எச்சரிக்கை ரயில்கள் ரத்து என்பதை பொருட்படுத்தாமல் 160-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தது பெருமை கொள்ளத்தக்கது அதிலும் குறிப்பாக பாம்பன் இராமேஸ்வரம் இராமநாதபுரம் பகுதியிலிருந்து 32 பேர் கலந்து கொண்டது பாராட்டத்தக்கது. வெயிலோ..மழையோ புயலோ எதுவாயினும் வயது ஒருதடையில்லை என்பதை நமது தோழர்கள் நிரூபித்துள்ளார்கள் .
பரமக்குடி தோழர் கதிரேசன் அவர்களின் பேரன் சிலம்பாட்ட விளையாட்டு அனைவரையும் கவர்ந்தது. அரண்மனை போன்ற கல்யாண மண்டபத்தில் மிக சிறப்பாக மாநாடு நடைபெற்றது. பயங்கரமான மழை, புயல் எச்சரிக்கை , மின் தொடர்பு பன்முறை துண்டிப்பு , பேருந்துகள் ஓடவில்லை , இரயில்கள் இயங்கவில்லை இவை யாவும் நம் தோழர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்த வில்லை. வாழ்க , வளர்க நம் சங்க தோழமை உணர்வு. வரவேற்புக் குழு சார்பில் கவிஞரும் சிறுகதை எழுத்தாளருமான உரப்புலி தோழர் ஜெயராமன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாவட்டத்தலைவரும் மாநில துணைத் தலைவருமான தோழர்.ஜெயச்சந்திரன் அவர்கள்
மாநாட்டை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார்.
40 பக்க செயல்பாட்டறிக்கையும் நிதி அறிக்கையையும் மாவட்டச்செயலர் தோழர் முருகன் அவர்களும் மாவட்டப் பொருளர் தோழர் பூபதி அவர்களும் சமர்ப்பித்தனர்.
அமைப்பு நிலைவிவாதத்தில் பரமக்குடி கிளைச்செயலர் தோழர் காசிநாதன் அவர்களும்
சிவகங்கை கிளை சார்பில் தோழர் T.S இன்னாசிமுத்து அவர்களும்,தோழர் குமார் அவர்களும் காரைக்குடி தோழர் சுந்தரராஜன், தோழர் யாக்கூப் மற்றும் தோழர் கணேசன் அவர்களும்
கலந்து கொண்டனர்.
ஓய்வூதியர் கணக்கதிகாரியும் NFTE மாவட்டச்செயலருமான தோழர்.மாரி அவர்கள்
வாழ்த்துரை வழங்கினார்.
10 ஆண்டுகளாக சிறப்புடன் பணிபுரிந்த மாவட்டச்செயலர் தோழர் முருகன் அவர்கள்
மாவட்டத்தலைவராகவும் தோழர் N.நாகேஷ்வரன் அவர்கள் மாவட்டச் செயலராகவும் தோழர்
இரா.பூபதி அவர்கள் மீண்டும் பொருளராகவும் அனைத்து கிளைச்செயலர்கள்
முடிவுப்படி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அகில இந்திய துணைப்பொதுச்செயலர் தோழர்.அருணா அவர்கள் கலந்து கொள்ள இயலவில்லை என்ற குறையைத்தவிர நான்காவது மாவட்டமாநாடும் பரமக்குடி கிளையின்
முதலாவது கிளைமாநாடும் மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது.
பரமக்குடி மாநாட்டை வெற்றிகரமாக்கி வீடு வந்து சேரும்வரை ஜகா வாங்கிய
கஜா புயலுக்கு நன்றி.
மாநில செயலர் தோழர் ஆர்வி நீண்டதொரு எழுச்சி உரை நிகழ்த்தினார். நவம்பர் 22 உண்ணா விரதத்திற்கு திரளாக வந்து கலந்துகொண்டு வெற்றி பெற செய்ய வேண்டுகோள் விடுத்தார்.
இம்மாவட்டத்தில் மொத்தம் 385 உறுப்பினர்கள் உள்ளனர். இன்று நடைபெற்றுள்ள மாவட்ட மாநாட்டில் 167 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் மகளிர் 23 உறுப்பினர்களும் அடக்கம்.
மதியம் அனைவருக்கும் செட்டிநாட்டு பாரம்பரிய இரு வகை உணவு பரிமாறப்பட்டது.
ஜெய் ஹோ AIBSNLPWA!
வணக்கம்.
Please Click Here To see Other Photos
No comments:
Post a Comment