( ரூபாய் ஒரு லட்சம்) திரட்டியுள்ளது. இன்னமும் நிதி திரட்டி வருகிறது. முன்னணி தோழர்கள் ரமணி , ரகுபதி மற்ற தோழர்களின் முயற்சிகளை பாராட்டுகிறோம்.
கஜா புயலில் சிக்கி , உடமைகளையெல்லாம் பறிகொடுத்து திக்குத்தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கும் மக்களின் துயர் துடைக்க நட்புக்கரம் நீட்டியுள்ள சேலம் மாவட்ட தோழர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.
STR Chennai கோட்டமும் உங்கள் இலக்கை நெருங்கி வருகிறது. STR கோட்ட உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் தளரா முயற்சிக்கு வானம் கூட தொட்டுவிடும் தூரம் தான்
தூத்துக்குடி மாவட்டம் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் சற்று குறைந்திருந்தாலும் ,உண்ணா நோன்பு போராட்டத்தில் காரமும் , வீரமும் குறையவில்லை. 80க்கும் மேற்பட்ட தோழர்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்கள் இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் 1968 போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களில் 6 தோழர்கள் இந்த போராட்டத்திலும் அதே துடிப்புடன் கலந்து கொண்டு பங்கு கொண்டது பாராட்டுதலுக்குரியது. போராட்ட சிறப்புகளை தினசரி பத்திரிகைகள் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன
கும்பகோணத்தில் நடைபெற்ற உண்ணாவிரதத்தை அந்த பகுதியில் வெளிவரும் பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டுள்ளன. சிறிய மாவட்டம் ஆனால் போராட்ட உணர்ச்சி கொந்தளிப்பில் சளைத்தவரில்லை .
ஊட்டியில் கொட்டும் மழை, கடும் குளிர், பயங்கர நிலச்சரிவுகள் போராட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்ப முடியுமா ? ரோடு இருக்குமா ? நிலச்சரிவில் பாதைகள் பிளந்து இருக்குமா ? எதுவுமே நிர்ணயிக்க முடியாத சுழ்நிலை .இருப்பினும் இவை எதுவுமே நம் தோழர்களை மனம் தளர விடவில்லை. வீரத்துடன் ,துடிப்புடன் திரளாக கலந்து கொண்டனர் . இயற்கை இன்னல்களை பொருட்படுத்தாமல் உண்ணா நோன்பினில் கலந்து கொண்டு சிறப்பித்த அத்துணை உள்ளங்களுக்கு பாராட்டுக்கள்.
Gunasekaran comrade of TT may contact Ramnad 9443134156
ReplyDeleteSimple correction to the above mob no
ReplyDelete9443134155